அடடே சூப்பர்! காலநிலை பூங்கா, தொல்பொருள் விளக்க மையம்.. இன்று அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: மாநிலத்தில் பல இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய தீயணைப்பு நிலையங்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. மேலும் சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்
தமிழ்நாட்டில் இப்போது சட்டசபை கூட்டத் தொடர் நடந்து வருகிறது. கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் பல்வேறு மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், இன்று சட்டசபையில் ஆளுநர் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வர உள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்கச் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கும் நிகழ்ச்சியில் புதிய தீயணைப்பு நிலையங்கள், வீட்டுவசதி வாரிய கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று காலை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையங்கள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மீட்புப் பணி நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை பெருநகர காவல் துறையினரின் பயன்பாட்டிற்காக மீட்பு இழுவை வாகனங்கள் மற்றும் கடற்கரை ரோந்து வாகனங்களின் சேவைகளையும் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், நகர் ஊரமைப்பு இயக்கத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இது மட்டுமின்றி சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் அமைக்கப்படவுள்ள தொல்பொருள் விளக்க மையம் மற்றும் காலநிலை பூங்கா, இரும்பு மற்றும் எஃகு வணிக அங்காடியில் அமைக்கப்படவுள்ள திண்கரை சாலைப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications