நாகப்பாம்பு நடமாட்டம்.. கோவைக்குள் வந்த 'நாகம்'.. ஒரே ஒரு கிளிக் போதும் மொத்த பாம்புகளும் சிக்கிடுமே
கோவை: கோவை மாவட்டத்தில் நகரத்தில் கடந்த சில மாதங்களாக பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பாம்புகள் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலையில், பாம்பு பிடிப்பவர்களுக்கு ஸ்பெஷல் பயிற்சி ஒன்று 2 நாட்களுக்கு முன்பு கோவை உள்ளிட்ட மாவட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.கோவையில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் கதகதப்பான இடங்களை தேடி பாம்புகள் குடியிருப்புகளுக்கு வந்துவிடுகின்றன.. கடந்த வாரம்கூட, கோவையில் ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு நுழைந்துவிட்டது..

ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு: பைக்கை எடுக்க அதன் உரிமையாளர் சங்கர், ஹெல்மெட் எடுக்க வந்தபோது, அதற்குள் பாம்பு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.. உடனடியாக பாம்பு பிடிக்கும் வீரருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிறகு வனத்துறையினர் அந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர்..இதையடுத்து, வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டை அணிவதற்கு முன்பு நன்றாக பார்த்து விட்டு அணிய வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்தனர்..அதற்கு பிறகும்கூட கோவையில் பாம்புகள் நடமாட்டம் பெருகி வருகிறது.. குறிப்பாக விடிகாலை நேரத்தில் மிகவும் குளிராக இருப்பதால் மிதமான வெப்பத்தை தேடி இது போன்ற பாம்புகள் வருவதாக வனத்துறையினர் சொல்கிறார்கள்.
நாகப்பாம்பு, விஷப்பாம்பு - நாகம் செயலி: இந்த வருடத்தை எடுத்து கொண்டால், கடந்த நவம்பர் மாதம் வரை மட்டுமே 600க்கும் மேற்பட்ட பாம்புகள் கோவையில் மீட்கப்பட்டுள்ளதாம்.. தீயணைப்பு வீரர்கள் பாம்புகளைப் பிடிப்பதில் பயிற்சி பெற்றிருந்தாலும், விஷப்பாம்புகளை கையாள்வதில் அவர்கள் முழுமையான நிபுணர்கள் இல்லை.. மேலும் அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் சில நேரங்களில் பாம்புகளுக்கு காயம் ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.அதுவும் நாகப்பாம்பு போன்ற விஷப்பாம்புகள் அதிகமாக உள்ள நிலையில், இவைகளை பிடிப்பதிலும் கையாள்வதிலும் முழுமையான நிபுணர்கள் கிடையாது..அதனால்தான் இதற்கெல்லாம் மாற்றாக, வனத்துறை இந்த ஆண்டு ஜூலை மாதம் 'Naagam’ (Networked Alerts and Geographic Aid for Animal Management) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது..
பாம்புகள் நடமாட்டம்: பொதுமக்கள் பாம்பை கண்டால் உடனடியாக இந்த செயலிக்கு தகவல் அனுப்பலாம். மெசேஜ் கிடைத்தவுடன், அருகிலுள்ள சான்றளிக்கப்பட்ட மற்றும் பயிற்சி பெற்ற பாம்பு பிடிப்பவர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து, வனப்பகுதி அல்லது மனிதர் இல்லாத இடங்களில் விடுவிப்பார்கள்.இந்த செயலி இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக வரவில்லை. ஆனால் வெளியிடப்பட்டதும், பாம்பு நடமாட்டம் தொடர்பான தகவல்கள் இதில் பதிவாகும். இந்த தரவுகள் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கும் பயன்படும் என்றும், செயலி மூலம் பாம்பினங்களை அடையாளம் காண உதவும் தகவல்களும் வழங்கப்படும் என்பதால் தேவையற்ற பயம் குறையும் என்றும் நம்பப்படுகிறது.
பாம்பு பிடிப்பவர்களுக்கு பயிற்சி: அதுமட்டுமல்லாமல், பாம்பு பிடிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும், வனத்துறை பயிற்சிகளை நடத்தி வருகிறது.அந்தவகையில் 2 நாட்களுக்கு முன்புகூட, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட பாம்பு பிடிப்பவர்கள் ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொண்டனர். இதில் கோவையில் இருந்து மட்டும் 70 பேர் 'Naagam’ செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்..கடந்த ஜூலை மாதம்கூட, உலக பாம்பு தினத்தை முன்னிட்டு, தமிழக வனத்துறை சென்னையில் உள்ள கிண்டி குழந்தைகள் பூங்காவில் இரண்டு நாள் தொழில்நுட்பத் திறன் பயிற்சிப் பட்டறையை நடத்தியது. இந்தப் பட்டறையில் பாம்பு பிடிப்பவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications