வரப்போகுது இ-பாஸ்.. கொடைக்கானலுக்கு ஒரு நாள் எத்தனை சுற்றுலா பயணிகள் வந்து செல்ல முடியும் தெரியுமா?
கொடைக்கானல்: மே 7ம் தேதி முதல் இபாஸ் முறை ஊட்டி கொடைக்கானலுக்கு வரப்போகிறது. இந்த விவகாரத்தில் உயர நீதிமன்ற உத்தரவு ஒரு பக்கம் இருக்கட்டும்.. கொடைக்கானலுக்கு, ஒரு நாளைக்கு எத்தனை சுற்றுலா பயணிகள் வந்து செல்ல முடியும் தெரியுமா? கொடைக்கானல் எத்தனை பேர் வந்தால் தாங்கும் என்பது தெரியுமா? இந்த செய்தி பாருங்கள் புரியும்.
கோடை வெயிலை சமாளிக்க ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இரண்டு கோடைவாசஸ் தலங்களுக்கும் ஏராளமானோர் வந்து குவிந்து வருவதால் கடந்த இரு மாதங்களாக, சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் அதிகரிக்கும் வாகனங்களால் ஊட்டி, கொடைக்கானலில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சென்னை ஓஎம்ஆர், ரேடியல் சாலைகளுக்கு நிகராக வாகனங்கள் ஊட்டி, கொடைக்கானலில் சனி ஞாயிறுகளில் சுற்றுகின்றன.. இதனை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு பெரிய சவாலாக இருக்கிறது.
ஊட்டி மற்றும் கொடைக்கானலில் போதிய பார்க்கிங் வசதிகள் இல்லை... இதனால் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு சுற்றுலா செல்லும் நிலை இருக்கிறது. இதுவும் நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேநேரம் ஒட்டுமொத்தமாக ஒரளவுக்குதான் மக்கள் கூட்டத்தை ஊட்டி மற்றும் கொடைக்கானல் தாங்கும் என்கிற நிலையில், பலரும் படை எடுப்பதால், இரண்டு நகரமுமே சிக்கலை சந்திக்கிறது. ஊட்டி குன்னூர் சாலை கோடைக்காலங்களில் ஒருவழிப்பாதை ஆக்கப்படும்.
கொடைக்கானலை பொறுத்தவரை அந்த அளவிற்கு தேவைப்படாது. ஏனெனில் வத்தலக்குண்டு காட்ரோடு சாலை இரு வாகனங்கள் சர்வ சாதாரணமாக எல்லா இடங்களிலும் விலகி செல்ல முடியும். அதுவே காரணம் ஆகும். இதுதவிர தேனி மாவட்டத்தில் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக ஒரு பாதையும், திண்டுக்கல் மாவட்டம் பழனி வழியாக ஒரு பாதையும் உள்ளது. இதனால் பெரிய சிக்கல் எழுவது இல்லை.. அதேநேரம் ஊட்டியை விட கொடைக்கானலில் பார்க்கிங் பெரும் சிக்கலாக உள்ளது.
இந்நிலையில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்கள் காணொலி மூலமாக ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தனர். அப்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "ஊட்டி, கொடைக்கானலுக்கு கோடை காலங்களில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது ஊட்டிக்கு தினமும் சீசன் நேரங்களில் கார், வேன் உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 11 வாகனங்களும், சீசன் இல்லாத நாட்களில் 2 ஆயிரத்து 2 வாகனங்களும் வருகின்றன. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ள தங்குமிடங்களில் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 5 ஆயிரத்து 620 அறைகளும், அதற்கு தேவையான வாகன நிறுத்தங்களும் ஊட்டியில் இருக்கின்றன. இதுதவிர 12 இடங்களில் நிரந்தர வாகன நிறுத்துமிடங்களும் உள்ளன.
கொடைக்கானலை பொறுத்தவரை சீசன் நேரங்களில் 5 ஆயிரத்து 135 வாகனங்களும், சீசன் இல்லாத நேரங்களில் 2 ஆயிரத்து 100 வாகனங்களும் வருகை தருகின்றன. கொடைக்கானலில் 13 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 3 ஆயிரத்து 325 அறைகள் இருக்கின்றன. கொடைக்கானலில் வரும் வாகனங்களை நிறுத்த போதிய வாகன நிறுத்துமிடங்கள் இல்லை. வாகன நிறுத்தமிடம் தான் முக்கிய பிரச்சினையாக உள்ளன. 'லேக் ஏரியா' பகுதியில் ஒரு நிரந்தர வாகன நிறுத்தமும், அப்சர்வேட்டரி மற்றும் வட்டக்கானல் பகுதிகளில் 4 தற்காலிக வாகன நிறுத்துமிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது" என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே நேற்று உயர்நீதிமன்றம் ஊட்டி கொடைக்கானலுக்கு மே 7-ந் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை இ-பாஸ் முறையை கொண்டு வர வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டது.
இ பாஸ்முறை கொண்டு வரப்பட உள்ள நிலையில், அரசின் அறிக்கை படி பார்த்தால் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 13 ஆயிரத்து 700 சுற்றுலா பயணிகள் தான் வந்து தங்க முடியும். தங்காமல் சுற்றி மட்டும் பார்த்துவிட்டு கீழே இறங்குவது என்பது தேனி, திண்டுக்கல் மாவட்டத்தினருக்கு மட்டுமே சாத்தியம் என்பதால், நடைமுறையில் சில சிக்கல்கள் உள்ளது. ஒரு நாளைக்கு 13500 பேர் வரை தான் இ பாஸ் முறையில் கொடைக்கானலில் இரவில் தங்க அனுமதி அளிக்க முடியும் என்ற நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.. ஏனெனில் அதற்கு மேல் அங்கு தங்குவதற்கு இடவசதி இல்லை என்பதை அரசே நேற்றைய அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொடைக்கானலை பொறுத்தவரை, அடுக்கம் வழியாக செல்லும் பாதையை மேம்படுத்தினால், அது கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications