கொடைக்கானலில் நாள் முழுக்க அன்னதானம்.. சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோயிலில் சூப்பர் வசதி
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மிகப்பெரிய நல்ல விஷயம் நடந்துள்ளது. குறிப்பாக கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வரப்பிரசாதமான திட்டத்தை இந்து அறநிலையத்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்து அறநிலையத்துறை அமைச்சசர் சேகர்பாபு, பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை பொறுத்தவரை ஆண்டு முழுவதும் மிக மிக அழகான கிளைமேட் நிலவும் பகுதியாகும். சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக கொடைக்கானல் இருக்கிறது. இங்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான பனிபொழிவு இருக்கும். மற்ற மாதங்களில் இரவில் மட்டும் கடும் குளிர் இருக்கும். பகலில் மிக இதமான கால நிலை நிலவும். இந்த காலநிலையைஅனுபவிக்கவே சுற்றுலா பயணிகள், ஹனிமூன் ஜோடிகள் ஆண்டு முழுவதும் வருவார்கள்.

அதேபோல் கொடைக்கானலை பொறுத்தவலை காலநிலை மட்டுமல்ல... புகழ்பெற்ற நட்சத்திர ஏரி, பூங்கா, மன்னவனூர், பூம்பாறை முருகன் கோவில், குணா பாறை, பசுமை பள்ளத்தாக்கு, செட்டியார் பூங்கா, ரோஜாபூங்கா, மூங்கில் காடுகள், கோக்கர்ஸ் வாக், பேரிஜம் ஏரி, கூக்கால், வில்பட்டி, குறிஞ்சி ஆண்டவர் கோவில், தர்கா, தேவலாயம் என பல்வேறு இடங்கள் உள்ளன. இந்த இடங்களை காண பலர் வருகிறார்க்ள. மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகை ரசிக்கவே பலரும் வருகிறார்கள். அப்படி வரும் பலர், புகழ் பெற்ற குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு செல்வார்கள். அப்படி செல்லும் பக்தர்களுக்காகவே நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்துள்ளார். இது ஆன்மிக சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல் மலைப் பிரதேசம் என்பதால், இங்கு உணவகங்களில் உணவின் விலை சற்றுக் கூடுதலாகவே இருக்கும். குறிஞ்சியாண்டவர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்குவதால், குறைந்த வருமானம் கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு உணவுச் செலவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சொல்வது என்றால், மதிய உணவுக்காக யாரும் ஏங்கத்தேவையில்லை நேராக குறிஞ்சி ஆண்டவரை தரித்துவிட்டு, அப்படியே சாப்பிட்டு வரலாம்.இந்த முயற்சியை பக்தர்கள் வரவேற்கிறார்கள். இதன் காரணமாக குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.
குறிப்பாகப் பண்டிகைக் காலங்கள் அல்லது வார இறுதி நாட்களில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், அமைதியான முறையில் அன்னதானம் வழங்குவதும் சற்று சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் இதனை சரியாக செய்தால், பல சுற்றுலா பயணிகளுக்கு குறிப்பாக பக்தர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications