Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி, கொடைக்கானல் மாதிரி அருமையான இடம்.. கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு இங்க போய் பாருங்க

Subscribe to Oneindia Tamil

தேனி: ஊட்டி கொடைக்கானல் மாதிரி கேரளாவின் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிறைய இடங்கள் உள்ளன. அவற்றிற்கு கிறிஸ்துமஸ் விடுமுறையில் சுற்றுலா போய் பாருங்கள்.

கடவுளின் தேசமான கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாதளங்களில் ஒன்றாக வாகமன் அருகில் உள்ள பகுதி தான் இல்லிக்கல் கல்லு. இந்த சுற்றுலா தளம் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

Great place like Ooty and Kodaikanal, Illickal Kallu is a major tourist attraction in Kottayam

பொதுவாக கேரளா என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். இதற்கு காரணம் மலைகள் சூழ்ந்த மாநிலம், கடற்கரைகளும் தனி அழகு கொண்டவை. இயற்கை இயற்கையாகேவே இருக்கும் மாநிலம். கேரளாவில் மலைகள் சூழ்ந்த மாவட்டங்கள் ஏராளம் என்றாலும், கோட்டயம், இடுக்கி, வயநாடு, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் மலைகளில் தான் அமைந்துள்ளது.

இதில் நாம் பார்க்க இருப்பது கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டத்தை பற்றித்தான். இடுக்கி மாவட்டத்தில் இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களான மூணாறு, தேக்கடி, வாகமன், இடுக்கி அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. இதேபோல் இதன் அண்டை மாவட்டமான கோட்டயத்திலும் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. அதேநேரம் கோட்டயம் மற்றும் இடுக்கியை இணைக்கும் சாலையில் என்னற்ற சுற்றுலாதளங்கள் இருக்கின்றன. அவற்றை பார்க்க இரண்டு கண்கள் போதாது. சாலைகளும் இயற்கையும் அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

Great place like Ooty and Kodaikanal, Illickal Kallu is a major tourist attraction in Kottayam

அதில் ஒரு முக்கியமான இடம் தான் இல்லிக்கல் கல்லு. இது வாகமன் சுற்றுலா தளத்தில் இருந்து 30 கிமீ தூரத்தில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லையான குமுளியில் இருந்து 73 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 3400 அடி உயரத்தில் இருக்கிறது.. கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து வந்தால் பக்கம்-- கோட்டயத்தில் இருந்து 57 கிமீ தூரத்தில் இல்லிக்கல் கல்லு அமைந்திருக்கிறது.

கேரளாவின் மூன்னிலாவ் மற்றும் மீனாசில் தாலுகாவின் தலநாடு கிராமத்தில் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக இல்லிகல் கல்லு இருக்கிறது.இந்த இடம் ஒரு பாறையாகும். இந்தப் பாறையின் ஒரு பாதி மட்டுமே தற்போது எஞ்சியிருக்கிறது, பாறையின் மற்ற பாதி விழுந்துவிட்டது. இந்த மலை உச்சியில் இருந்து ஏராளமான மலை ஓடைகள் உருவாகி கீழே பாய்ந்து மீனாசிலாறு உருவாகிறது. சுற்றுலா பயணிகள் இந்த இடத்திற்கு டிரெக்கிங் செல்வதை பெரிதும் விரும்புவார்கள். வாகமன் வருவோர் இந்த இடத்திற்கு போய்விட்டு தான் வருவார்கள்.. ஒரு கி.மீ. தொலைவுக்கு மலையேறினால் இந்த அற்புதமான இடங்களைபார்க்க முடியும்.

இந்த இல்லிக்கல் மலையில் மூன்று மலைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் கடல் மட்டத்திலிருந்து 3,400 அடி வரை உயரத்தில் அமைந்திருக்கின்றன. இவற்றில் ஒன்று காளான் தோற்றத்தில் இருக்கும். அதனால் இந்த பாறையை குடை வடிவ பாறை என்று அழைக்கிறார்கள். இரண்டாவது மலை பக்கவாட்டுகளில் சற்று கூன் போட்டிருக்கும். எனவே இது கூனன் கல் என்று அழைக்கிறார்கள். நீலக்கொடுவிலி என்ற மூலிகை இங்கு வளர்வதாகவும் இப்பூ அமானுட சக்தி பெற்றது என்றும் மக்கள் கூறுகிறார்கள். இரண்டு மலைகளின் குறுக்கே அரை அடி அகலத்தில் ஒரு பாலம் இருக்கிறது. இதன் பெயர் நரகப் பாலம் என்று அழைக்கிறார்கள். இந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்தால், அரபிக் கடல் நீல வானம் போல் நம் கண்களுக்கு அப்படியே தெரியும். அதேபோல் பௌர்ணமி நாளில் இங்கிருந்து பார்த்தால் சூரிய அஸ்தமனக் காட்சி அழகாக தெரியும். அப்போது முழு நிலா மெல்ல மெல்ல மேலெழும்புவதை பார்க்க முடியும். அற்புதமாக இருக்கும். ஆனால் நரகபாலம் வழியாக மலை உச்சிக்கு செல்வது தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.

இல்லிகல் கல்லுவில் ஏராளமான மலைகளும், தவழும் மேகங்களுக்கும், ஆழமான பள்ளத்தாக்குகளும் நம் கண்களுக்கு விருந்தளிக்கும். இந்த பகுதியில் கட்டிகாயம் அருவி காணப்படுகிறது. இது இல்லிக்கல் கல்லுவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சுமார் இரண்டு கி.மீ தொலைவுக்கு மலையிலேறி இந்த அருவியை அடையலாம். இந்தஇடம் நிச்சயம் உங்களுக்கு பார்த்த உடன் பிடிக்கும்.

இல்லிகல் கல்லுவில் இருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் எலவீழபூஞ்சிரா என்ற இடமும் இருக்கிறது. எலவீழபூஞ்சிரா என்றால் 'இலைகள் விழாத பள்ளத்தாக்கு' என்று பொருளாகும். இதை கண்ணாடிப்பாறை என்று அழைக்கிறார்கள். இந்த ஒரே இடத்தில் இருந்து சூரிய உதயத்தையும், சூரியன் மறைவையும் பார்க்க முடியும்.

வாகமன்: வாகமனை பற்றி பலருக்கும் தெரியும். வாகமன் இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்களில் ஒன்று. அங்கு எண்ணற்ற சுற்றுலா தளங்கள் இருக்கின்றன. சென்னையில் இருந்து செல்வோர் நேராக தேனி சென்று அங்கிருந்து குமுளி வழியாக வாகமன் போகலாம். அப்படியே வாகமனில் ஒரு நாளும்.. இல்லுக்கல் கல்லுவில் ஒருநாளும் கழிக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+