கொடைக்கானலுக்கு வெளிநாட்டவர், இளைஞரை ஈர்க்கும் மேஜிக் காளான்.. அப்படி என்ன இருக்கிறது?
கொடைக்கானல்: கொடைக்கானலில் வெளிநாட்டினர், இளைஞர்களை அங்கு உள்ள மேஜிக் காளான் எனப்படும் அதிகமாக ஈர்க்கிறது. இந்த காளான்களை அண்மையில் கொரியரில் விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. சரி இந்த மேஜிக் காளானில் எப்படி என்ன இருக்கிறது என்பதை பார்ப்போம்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். கொடைக்கானலில் அண்மையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்கும் கும்பல் இயங்கி வந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் கொடைக்கானலுக்கு தேடி வந்து போதைக்காளான் எனப்படும் மேஜிக் காளான்களை வாங்கி உள்ளார்கள். அந்த கும்பலை அண்மையில் போலீசார் கைது செய்தனர்..

கொடைக்கானலில் அந்த ஒரு கும்பல் தான் போதைகாளான் விற்கிறது என்று முடித்துவிட முடியாது.. இதற்கு முன்பு பலமுறை இப்படி போதைக்காளான் விற்பனை நடந்துள்ளது.. பலரையும் கைது செய்துள்ளனர்.. கடந்த 2016 ஆம் ஆண்டில் கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் சுற்றுலாவுக்காக கொடைக்கானல் வந்தார்கள்.. வந்தவர்கள் போதை காளானை உட்கொண்டதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.. அதன்பிறகே போதைக்காளான் விவகாரம் வெளியே தெரியவந்தது..
மேஜிக் காளான்கள் எப்படி கொடைக்கானலில் எப்படி அறிமுகம் ஆனது: கொடைக்கானல் முழுக்க முழுக்க 100 முதல் 120 வகையான காளான்கள் நிறைந்து இருக்கும் நிலையில் இதில் பல சத்து மிகுந்த உண்ணக்கூடிய காளான்களும் உள்ளன. இதில் மேஜிக் காளான் எனப்படும் போதைக்காளான் எது என்பது குறித்த கதை 1863ம் ஆண்டு தொடங்குகிறது. 1863ல் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயர் சர் வீரே ஹென்றி உயர் அதிகாரிகளின் பணிச சுமையை போக்க சைலோசைபின் (Psilocybin) எனப்படும் மேஜிக் காளானை மருந்தாக அறிமுகம் செய்தார். இந்த காளானை வெளிநாட்டவர்கள் தான் அதிகம் மருந்தாக பயன்படுத்தி வந்தார்களாம். இந்த காளான் கொடைக்கானலின் அடர்ந்த வனப்பகுதியான வட்டக்கானல் பகுதியில் இருந்துதான் தெரியவந்தது. அதிகளவில் உடல் சோர்வு, வயிற்று வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டினர் இதனை மருந்தாக அந்த காலத்தில் பயன்படுத்தி உள்ளனர்..
இதனிடையே கொடைக்கானலுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை கடந்த 30 ஆண்டுகளாகத்தான் அதிகமாக உள்ளது. அப்படி சுற்றுலா வந்த இஸ்ரேல் சுற்றுலா பயணிகள் தான் மேஜிக் காளானை போதை பொருளாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த காளானை இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் போதைப்பொருளாக பயன்படுத்தியதை அறிந்த அதனை தேடி எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு விற்க ஆரம்பித்துள்ளார்கள்.
இந்த காளானை உட்கொண்டால் 8 மணி நேரம் வரை போதை நிற்கும் என்ற கருத்து காரணமாக, இளைஞர்கள் பலர் கொடைக்கானலுக்கு மேஜிக்காளனை தேடி வர ஆரம்பித்தனர்.. அதன் தொடர்ச்சியாகவே பெங்களூரு, சென்னை மற்றும் கேரள நகரங்களில் உள்ள கல்லுரிகளுக்கு கொரியர் மூலம் விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இப்போது மேஜிக் காளான்கள் கொடைக்கானலில் அதிகம் கிடைக்காத நிலையில், பலரும் மேஜிக் காளான் என்ற பெயரில் விஷ காளான்களை விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். விஷ காளான்கள் என தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் வாங்கி உட்கொண்டு வருகிறார்கள். பொதுவாக பலமணி நேரம் இந்த காளான் அதிக போதை தருவதுடன், ரத்த ஓட்டம் அதிகரித்து மாரடைப்புக்கு வழிவகுக்கும் என்கிறார்கள். இந்த தகவல்களை சமூக ஆர்வலர் வீரபத்திரன் என்பவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளளார்.
கொடைக்கானலில் சில தனியார் விடுதிகள் போதைக்காளான்களை விற்பனை செய்வதாகவும், தனி வாட்சப் குழுக்கள் மூலம் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.. மாணவர்கள் பலர் மேஜிக் காளானை தேடி பெருமளவில் கொடைக்கானல் வரும் நிலையில், சிக்கினால் கண்டிப்பாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications