ஊட்டி மலை “பியூட்டி”.. ரசிப்பது நம் “டியூட்டி” - நீலகிரி பொம்மை ரயிலில் செல்வது எப்படி? சில டிப்ஸ்
நீலகிரி: மலைகளின் இளவரசியான ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து செல்லும் நீராவி பொம்மை ரயிலில் செல்ல வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். அதில் செல்வது எப்படி? ரயிலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? அந்த ரயிலில் அப்படி என்ன ஸ்பெஷல் விரிவாக பார்ப்போம்.
உலகின் மிக அழகிய மலைத் தொடர்களில் ஒன்றாக நீலகிரி மலைத் தொடர் உள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடங்கும் மலைத்தொடரின் அழகு ஊட்டி மலையின் உச்சி வரை நீண்டுகொண்டே இருக்கும். அதை முழுமையாக கண்டு ரசித்து கண்களை குளிர்விக்க வேண்டுமென்றால் கார், பைக், பேருந்து ரெய்டெல்லாம் போதாது.

அதற்கென்ன்றே ஸ்பெஷல் ஐட்டம் ஒன்று உள்ளது. அதுதான் ஊட்டி பொம்மை ரயில். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் புறப்படத் தொடங்கும் இந்த பொம்மை ரயில் ஊட்டி வரை செல்கிறது. இதில் நீலகிரி மலைத் தொடரின் உன்னத அழகை உளமாற கண்டு மகிழலாம். மலைத்தொடர், தேயிலை தோட்டங்கள், அன்னார்ந்து பார்க்க வைக்கும் அருவிகள் அனைத்தையும் கண்டு அகம் மகிழலாம்.
நீங்கள் காஷ்மீர், லடாக், வடகிழக்கு மாநிலங்கள், கேரளா என பல மாநிலங்களில் சுற்றுலா சென்றிருக்கலாம். வெளிநாடுகளுக்கு கூட சுற்றுலா பயணம் மேற்கொண்டு இருக்கலாம். ஆனால், நீலகிரி மலை ரயிலில் பயணிக்கும் சுகமான அனுபவத்துக்கு அவையெல்லாம் ஈடாகாது. நீராவி இயந்திரம் கொண்டு இயக்கப்படும் இந்த மீட்டர் கேஜ் ரயில் 1000 மிமீ நீளம் கொண்டதாகும்.

பச்சை மலைக்குள் புகுந்து செல்லும் நீள பாம்பை போன்ற நீள நிறத்தில் இந்த ரயில் காட்சி தருகிறது. அதன் தோற்றத்தை பார்த்து குழந்தைகள் பொம்மை ரயில் என்று இதனை அழைக்கிறார்கள். மலை வழி ரயில் பாதைகள், மலை பாலங்கள், குகை பாதைகள் என 46 கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த பயணம் உங்களை முழுக்க முழுக்க நீலகிரி மலையின் அழகில் திழைக்க வைத்திடும்.
1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட இந்த ரயில் யுனெஸ்கோ புராதாண சின்னத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு குன்னூர், வெலிங்டன், லவ் டேல், ஃபெர்ன் ஹில் உள்ள நீலகிரி மலைத் தொடரில் அமைந்து இருக்கும் பல்வேறு பகுதிகளில் நின்று செல்லும் இந்த மலை ரயிலின் பயண நேரம் 5 மணி நேரமாகும்.

ஆனால், இதில் டிக்கெட் கிடைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. www.irctc.co.in என்ற இணையதளத்தில் டிக்கெட் எடுக்கலாம். ஆனால், பயணம் செல்வதற்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்பே டிக்கெட் புக் செய்துகொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக கோடை போன்ற விடுமுறை நாட்களில் டிக்கெட் வேகமாக தீர்ந்துவிடும். சில சமயங்களில் ஆன்லைனில் புக்கிங் செய்ய முடியாது. அதுபோன்ற நாட்களில் நேராக 2 மணி நேரம் முன் ரயில் நிலையம் சென்று டிக்கெட் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

டிக்கெட் புக்கிங் செய்திருந்தாலும் மழை, நிலச்சரிவு போன்ற காரணங்களால் அடிக்கடி பயணம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மழைக் காலங்களில் புக்கிங் செய்யும்போது கவனம் தேவை. அதே நேரம் டிக்கெட் கவுண்டரில் ஒரு நபருக்கு 4 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்குவார்கள். இந்த ரயில் கழிவரைகள் கிடையாது. எனவே ரயில் நிலையங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications