ஆக்குவா மேன்.. மீனாக மாற ஆசையா? தமிழ்நாட்டில் அதையும் செய்யலாம்.. கடலடியில் சுத்தி பார்க்க ரெடியா?
சென்னை: மலைகள், காடுகள், அருவிகள், வயல் வெளிகள் என சுற்றுப்பார்த்த நம் கண்களுக்கு கடலுக்குள் மிதந்து அங்கிருக்கும் பொக்கிஷங்களை பார்வையிட ஆசையா? தமிழ்நாட்டில் அதற்கும் வழி இருக்கிறது. வாருங்கள் இந்த எழுத்துக்களில் மூழ்கி முத்தெடுப்போம்.
குறிஞ்சு, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தினைகளையும் உள்ளடக்கிய பூமி நம் தமிழ்நாடு. காடு, மலை, சமவெளி, விவசாய நிலம், வறண்ட கரிசல் நிலம், கடல் என அனைத்தையும் நம்மில் பலரும் சுற்றுப்பார்த்து இருப்போம். குறிப்பாக சென்னை, தூத்துக்குடி, கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், பகுதியை சேர்ந்தவர்களுக்கு கடல்தான் எல்லாமே.

கடலை நோக்கியே அவர்களின் கால்கள் சென்றுகொண்டிருக்கும் அளவுக்கு கடலோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது அவர்களின் வாழ்க்கை. கடலையே வாழ்வாதாரமாக கொண்ட மீனவர்கள் ஒருபக்கம் என்றால், மன அமைதிக்காக மணிக்கணக்கில் கடற்கரை மணலில் அமர்ந்து அலைகளில் கால் நனைத்துக்கொண்டிருக்கும் மக்கள் ஏராளம்.
எவ்வளவு நாட்கள்தான் கடற்கரை மணலிலும், அலையுடனும், படகில் சென்றும் விளையாடுவது? அப்படி அந்த கடலுக்கு உள்ளே என்னதான் இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்கு எழுந்ததில்லையா.. அந்த கேள்விக்கான விடை தமிழ்நாட்டிலேயே உள்ளது. ஆம், தமிழ்நாட்டின் பல கடற்கரைகளில் ஸ்கூபா டைவின் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் செய்யும் வசதி இருக்கிறது.

மன்னார் வளைகுடா மற்றும் பால்க் விரிகுடா போன்ற் இந்தியாவின் பவளப் பாரைகளின் தாயகமாகும். இப்பகுதிகளில் நீங்கள் மீனாக நினைத்துக்கொண்டு ஆழ்கடல் நீச்சல் அடித்து அதன் கொள்ளை அழகை கண்டுகளிக்கலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை ஸ்கூபா டைவிங்கிற்கு சிறந்த இடமாக இருப்பது சென்னை ஈசிஆர்தான். இங்குதான் இரவு நேர ஆழ்கடல் நீச்சலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இரவில் வெளியில் கருப்பாக தெரியும் கடல், உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்க்க ஆர்வம் இருந்தால் நிச்சயம் நீங்கள் முயற்சிக்கலாம். இரவு நேர ஸ்கூபா டைவிங்கில் கிடைக்கும் இனிய வியப்பூட்டும் அனுபவத்தை இரண்டே வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், "பிரமாண்டத்தின் உச்சம்" எனலாம்.

சூரியம் மறையும்போது நீருக்கு அடியில் இருக்கும் உலகம் வேறு விதமாக மாறும். கடலில் இரவு நேரங்கள் வெளியே வரும் உயிரினங்கள் தரும் ஒளியால் ஏற்படும் நிறமாற்றம் உங்கள் மனதை கொள்ளையடிக்கும் பேரழகாக இருக்கும். நாம் வாழும் உலகம் என்பது பூமியில் 4ல் ஒரு பங்குதான். மீதம் இருக்கும் உலகம்தான் 3 மடங்காகும்.
தோண்ட தோண்ட கிடைக்கும் அற்புதங்களை கொண்ட கடல் உலகின் மர்மமும், விசித்திரங்களும், விநோதங்களும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. அதனை அனுபவிக்கும் சுகம் அலாதியானது. தொடக்கத்தில் பயம் தந்தாலும் போகப்போக பரசவ நிலையை அந்த சுகம் ஏற்படுத்திவிடும்.

ஸ்கூபா டைவிங்கை எளிதில் நாம் மேற்கொள்ள முடியாது. சென்னை ஈசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கென முறையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. முறையான பயிற்சி, பாதுகாப்பு, வழிகாட்டுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நீங்கள் மீனாக மாறி கடலின் ஆழத்தை அனுபவிக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications