நிலா.. அவலாஞ்சி.. சாக்லெட் பேக்டரி - விக்ரமின் தெய்வத்திருமகள் படத்தில் சூப்பர் இடம்! டூர் போலாமா?
சென்னை: ஊட்டிக்கு பல முறை சுற்றுலா செல்லும் நம்மில் பலர் அதை சுற்றி இருக்கும் சூப்பரான தலங்களை தவறவிட்டுவிடுகிறோம். அப்படி ஒரு இடம்தான் அவலாஞ்சி. அங்கு அப்படி என்ன ஸ்பெஷல்? விரிவாக காண்போம்.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தெய்வத்திருமகள். அனுஷ்கா, அமலா பால், சாரா, நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களை கடந்து காட்சிகளும் நம்மை பேச வைத்து இருக்கும். ஊட்டி போன்ற மலைப்பகுதி, சாக்லெட் ஃபேக்டரி போன்ற அனைத்து காட்சிகளும் கவிதைகளாக தெரியும்.

இந்த படத்தை பார்க்கும்போதே, "எப்படியும் இந்த இடத்துக்கு போக வேண்டும். அது எங்கு இருக்கிறது." என்று சிந்திப்போம். உடனே விக்ரமே ஒரு வசனத்தில் தனது, "நிலா.. அவலாஞ்சி.. சாக்லெட் ஃபேக்டரி" என்று சொல்லி இருப்பார். எனவே நமக்கு புரிந்துவிடும் இது அவலாச்சியில் எடுத்த படம் என்று. அவலாஞ்சியில் அப்படி என்ன ஸ்பெஷல் என்பதை பெரும்பாலும் அந்த படத்தின் காட்சிகளே நமக்கு காட்டி இருக்கும். இதை தாண்டி நாமும் சில விசயங்களை அலசுவோம்.
நீலகிரியின் இயற்கை அதிசயம்: நகர்ப்புற காடுகளின் சலசலப்புகளிலிருந்து மறைந்த, இயற்கையாகவே உருவான பனிச்சரிவு ஏரி, நீலகிரியின் பசுமையான சரிவுகளுக்கு இடையே அமைந்துள்ளது. அதுதான் அவலாஞ்சி. உதகை நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் இந்த ஏரி, அதன் படிக நீல நீர் மற்றும் சுற்றியுள்ள காடுகளின் இனிமையான பசுமையுடன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

அவலாஞ்சி ஏரி நீலகிரியின் மிகச்சிறந்த சுற்றுலா தலமாக இருக்கிறது. முறையாக சீரமைக்கப்பட்ட தேயிலை செடிகள், செழிப்பான பசுமையான காடுகள் மற்றும் எப்போதும் வெள்ளை மூடுபனியில் மூழ்கியிருக்கும் அலை அலையான மலைகள் என சுற்றி இருக்கும் அனைத்துமே இந்த அவலாஞ்சி ஏரியை ஒரு மறக்கமுடியாத இடமாக மாற்றுகின்றன.
பல்வேறு பிரமாண்டங்களையும் அதிசயங்களையும், அற்புதங்களையும், அழகியலையும் தன்னகத்தே கொண்டு இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அழகிய பகுதி இந்த அவலாஞ்சி ஏரி. இந்த ஏரியும் அதன் சுற்றுப்புறங்களும் அழகாக இருப்பதற்கு காரணம் அதன் பூர்வக்குடிகளான உள்ளூர் பழங்குடியின மக்கள். அவர்களின் உதவியுடன், இந்த பகுதி முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகின் அனைத்து பரபரப்புகளில் இருந்து தப்பித்து, இயற்கையின் அழகில் ஆழ்ந்திட ஆசைப்படும் அனைவருக்கும், அவலாஞ்சி ஏரி ஒரு பரவசமான அனுபவமாக இருக்கும்.

முகாமிடல் மற்றும் மீன்பிடித்தல்: அவலாஞ்சி ஏரிக்கரையை ஒட்டி இருக்கும் காடுகளில் முறுக்கு சாலைகள் உள்ளன. அந்த ஏரியின் ஓரங்களில் இருந்துகொண்டு மூடுபனி படர்ந்த மலைகளின் மீது சூரியன் உதிக்கும் மயக்கும் காட்சியை காண்பது அலாதி அனுபவம். ஏரியைச் சுற்றி இருக்கும் காடுகளில், உதகையில் மறைந்திருக்கும் சிறந்த பொக்கிஷங்களைக் கண்டறியலாம்.
பருவமழைக் காலம் முடிந்தவுடன், அவலாஞ்சி ஏரி மீன்பிடிப்புக்காக திறக்கப்படுகிறது. நீங்கள் மீன்பிடித்தலில் ஆர்வம் உடையவர் என்றால், இந்த ஏரி உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும். இந்த ஏரிக்கு அருகில் இருக்கும் மீன் பண்ணையில், மதிய உணவு, பிற அத்தியாவசிய பொருட்களையும் வாங்கலாம். பரபரப்பான நகர வாழ்க்கைக்கு ஒரு ரெஸ்ட் கொடுத்துவிட்டு இயற்கையின் அமைதியையும் அழகை அனுபவிக்க அவலாஞ்சிக்கு மூட்டை கட்டிக்கொண்டு வந்து ரெஸ்ட் எடுங்க.

செல்வது எப்படி?: ஊட்டிக்கு ஒரு ஆண்டின் எந்த நேரத்திலும் சென்று சுற்றிப் பார்க்க முடியும் என்றாலும், மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடைப்பட்ட கோடை மாதங்களே சிறந்தவை. அவலாஞ்சியும் அப்படிதான். கோவை ரயில் நிலையத்தில் இருந்து அவலாஞ்சிக்கு 98 கிமீ தூரம் ஆகும். கோவை விமான நிலையத்தில் இருந்து 107 கிமீ தொலைவிலும், ஊட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் அவலாஞ்சி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications