Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களக்காட்டு தலையணை நீர்வீழ்ச்சியில் அதிகரித்த நீர்வரத்து.. மருத்துவ நீரில் ஆட்டம் போட எப்படி போகலாம்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் இருக்கும் தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் சுற்றுவட்டார பகுதி மக்கள் குடும்பத்தோடு குளியல் போட்டு கொண்டாடி மகிழ்கின்றனர்.

 increased summer rains water has increased in Nellai Kalakadu thalayanai aruvi

அதற்கு நீங்களும் போக வேண்டுமா அப்போ இதை முழுமையாக படிங்க.

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வனத்துறையினரால் சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டுள்ள தலையணை நீர்வீழ்ச்சியில் ஓடும் தண்ணீர் மூலிகைகளை தழுவியபடி அதிக குளிர்ச்சியோடு வருவதால் இந்த அருவியில் குளிப்பதற்காக எப்போதுமே சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருவார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை பெய்யும் பொழுது இந்த அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். குறிப்பாக பருவ மழைகளை நம்பியே இந்த அருவி இருந்து வந்தாலும், இங்கே தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியதும் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கிவிடும். குறிப்பாக காலை 10 மணிக்கு மேலே இங்கே மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அதுபோல மாலை 5 மணி வரைக்கும் தான் சுற்றுலா பயணிகள் வனத்துறையினரால் அனுமதிக்கப்படுகிறார்கள்.

 increased summer rains water has increased in Nellai Kalakadu thalayanai aruvi

அதுபோல தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும் போதும் இங்கே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவது இல்லை. அதுபோல தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும் காலங்களிலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும் கோடை கால கட்டங்களில் மலையில் இருக்கும் விலங்குகள் தண்ணீருக்காக இந்த அருவியை நம்பித்தான் வந்து கொண்டிருக்கும். அப்போது விலங்குகளால் மனிதனுக்கு எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்றும் அதே நேரத்தில் மனிதர்களாலும் விலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்றும் வனத்துறையினர் இங்கே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்த அருவியில் குளிப்பதற்காக சுற்று வட்டார மக்கள் அனைவரும் தங்களுடைய சொந்த வாகனங்களில் வந்து செல்கின்றனர். குறிப்பாக இங்கே இருக்கும் டோல்கேட் அருகில் அனைத்து வாகனங்களும் செக்கப் செய்யப்படும். அப்போது பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள், மதுபான பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருள்கள், கத்தி, அரிவாள் போன்ற பொருள்கள் அனுமதி கிடையாது.

 increased summer rains water has increased in Nellai Kalakadu thalayanai aruvi

மனிதர்கள் கொண்டு செல்லும் பொருள்களால் விலங்குகளுக்கு எந்த பாதிப்பு வந்து விடக்கூடாது என்றும் காட்டில் தீ பரவி விடக்கூடாது என்றும் வனத்துறையினர் பொருட்களை செக்கப் செய்கின்றனர்.இங்கே வருவதற்கு அரசு பேருந்துகள் எதுவும் வசதி கிடையாது. வரும் சுற்றுலா பயணிகள் அவர்களுடைய சொந்த வாகனங்களில் தான் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பயணிகளுக்கு ஒரு நபருக்கு 40 ரூபாய் ஒரு வேனுக்கு 100 ரூபாய் மற்றும் கார் மற்றும் பைக்குக்கு 50 ரூபாய் வனத்துறையினரால் வசூலிக்கப்படுகிறது.

அதுபோல இங்கே அரிய வகை சிங்கவால் குரங்குகள் களக்காட்டில் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும் தான் இந்த வகை குரங்குகள் காணப்படுகிறது.அதுபோல இங்கே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தனித்தனியாக உடைமாற்றும் வசதிகளும் இருக்கிறது. சாப்பாடு கொண்டு வரும் மக்கள் இலைகளிலோ அல்லது பாத்திரங்களிலோ கொண்டு வந்து இங்கே உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு செல்லலாம்.

 increased summer rains water has increased in Nellai Kalakadu thalayanai aruvi

குளிர்ச்சியான நீரில் குளித்துவிட்டு இங்கே சாப்பிட்டு விட்டு இங்கு வரும் குரங்குகளுக்கு உணவு பொருட்கள் கொடுத்து வழங்குவதும் பலருடைய பழக்கமாக இருக்கிறது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது ஒரு சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் தண்ணீர் தடுப்பணையை தாண்டி விழுந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். அதுபோல மலைப்பகுதிகளில் திடீர் மழை பெய்வதால் திடீரென தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்றும் அதனால் சுற்றுலா பயணிகள் கவனமுடன் குளிக்கும் படியும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+