ஆனந்த் மஹிந்திராவுக்கு ரொம்பவே பிடித்த சுற்றுலா இடம்.. சென்னையிலிருந்து கொஞ்சம் கிட்டதான் தெரியுமா!
சென்னை: நாட்டின் தலைசிறந்த பிஸ்னஸ்மேன்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா தனக்கு மிகவும் பிடித்த ஒரு சுற்றுலாத்தலம் குறித்த விவரங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த இடம் சென்னை, பெங்களூரில் இருந்து ஓவர்நைட் பயணத் தூரத்தில் தான் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்தியாவின் வெற்றிகரமான பிஸ்னஸ்மேன்களில் ஒருவர். அவரது தலைமையில் மஹிந்திரா நிறுவனம் பல்வேறு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. குறிப்பாக கார்களில் எஸ்யுவி பிரிவை மஹிந்திரா நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மஹிந்திரா சமீபத்தில் வெளியிட்ட ஈவி எஸ்யுவி கார்களுக்கும் கூட நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆனந்த் மஹிந்திராவுக்கு பிடித்த இடம்
மேலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா, அவ்வப்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்து கொள்வார். அது பலருக்கும் புதிய தகவலாக இருப்பதால் எப்போதும் அது டிரெண்டாகும். அப்படித் தான் அவர் சமீபத்தில் தனக்குப் பிடித்தமான ஒரு சுற்றுலா இடத்தைப் பற்றிப் பேசியது இணையத்தில் டிரெண்டாது.. ஹைதராபாத் அல்லது பெங்களூரில் இருப்போர் வீக் எண்ட்டில் செல்ல ஏற்ற இடமாக இது இருக்கும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மிரள வைக்கும் அல்லி
கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள அமைதியான இடமான திண்டிதான் ஆனந்த் மஹிந்திரா சொல்லும் அந்த இடம். பிரஷரான வாழ்க்கையில் ஓய்வெடுக்க மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்று எனத் திண்டியை குறிப்பிடுகிறார். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்த அமைதியான நீர்ப்பகுதி, இயற்கையை விரும்புவோருக்கு மிக ஏற்ற இடமாக இருக்கும். குறிப்பாக, இங்கு வளரும் விக்டோரியா அமேசோனிகா எனும் பிரம்மாண்டமான அல்லி மலர் பிரசித்தி பெற்றது.
இந்த அல்லி மலரின் இலைகள் மூன்று மீட்டர் வரை வளரக்கூடியவை. மேலும், ஒரு குழந்தையின் எடையைத் தாங்கும் அளவுக்கு வலிமையானவை என ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.
ஓவர் நைட் பயணம்
இந்த இடம் ஹைதராபாத்தில் இருந்து வெறும் 8 மணிநேரப் பயணத் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து 11 மணி நேரம், பெங்களூரில் இருந்து சுமார் 13 மணி நேரம் பயணித்தாலே நாம் இந்த இடத்திற்குச் சென்றுவிடலாம். எனவே, 3 நாள் வீக் எண்ட்டிற்கு ஏற்ற இடமாக இது இருக்கும்,
அமைதியையும், சாகச அனுபவத்தையும் ஒருசேரக் கொடுக்கும் ஒரு சுற்றுலாத் தலம் இதுவாகும். இது ஆந்திரப் பிரதேசத்தின் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில், மாலிக்கிபுரம் மண்டலத்தின் அமலாபுரம் என்ற பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம். பசுமையான தென்னந்தோப்புகளுக்கும், பலவிதமான ரிசார்ட்களுக்கும் பெயர் பெற்ற திண்டி, அமைதியைத் தேடும் பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாக மாறி வருகிறது.
திண்டியில் என்ன செய்யலாம்?
அதன் இயற்கை அழகு, படகு வீடுகள், மற்றும் சிறந்த விருந்தோம்பல் காரணமாக, திண்டி ஒரு தனித்துவமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு நீங்கள் கோதாவரி ஆற்றில் படகு சவாரி செய்து மகிழலாம். மேலும், கோரிங்கா வனவிலங்கு சரணாலயத்தையும் சுற்றிப் பார்க்கலாம்.
அல்லது அருகிலுள்ள பெருரு ஹெரிடேஜ் கிராமத்திற்குச் சென்று, தென்னந்தோப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஒரு ரிசார்ட்டில் ஓய்வெடுக்கலாம். அங்கு வாழும் மக்களின் கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். உள்ளூர் இனிப்பு வகைகளைச் சுவைப்பது, இயற்கை அழகை ரசிப்பது என ஒரு முற்றிலும் புதிய அனுபவத்தை இது நமக்குக் கொடுக்கும்.
எப்போது போகலாம்?
லாங்வீக் எண்ட் நாட்களில் நாட்களில் இங்குச் செல்வது சரியாக இருக்கும். குறிப்பாக ஜனவரி மாதம் போனால் வானிலையும் கூட சரியாக இருக்கும். பொங்கல் சமயத்தில், அதாவது அந்த ஊரில் மகர சங்கராந்தி சமயத்தில் வண்ணமயமான கொண்டாட்டங்களால் இந்தப் பகுதி களைகட்டும். எனவே ஆனந்த் மஹிந்திராவுக்கு பிடித்தமானது போல, இந்த இடமும் உங்களுக்கும் பிடித்தமானதாக மாறலாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications