Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோடை கொண்டாட்டம்.. சென்னையில் ஒரு தாஜ்மகால்.. ரூ 60 நுழைவுக் கட்டணம்.. எண்ணற்ற ஜாலி ரெய்டுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மதுரவாயலில் கோடை கொண்டாட்டம் எனப்படும் பொழுதுபோக்கு தற்காலிக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை விட்டாச்சு! எங்கு போனாலும் மக்கள் கூட்டம்! அப்படியே அடித்து பிடித்து சென்றாலும் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் சுற்றுலா தளங்களில் அறைகள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது.

Kodai Kondattam amusement park is installed in Chennai Maduravoyal bypass

ஆனாலும் ஆண்டுக்கு ஒரு முறை குழந்தைகளை எங்காவது அழைத்து சென்றால்தான் அவர்களுக்கு ரிலாக்ஸாக இருக்கும். அவர்களை விட வேலை வேலை என எந்த நேரமும் சுழலும் இல்லத்தரசிகள், குடும்பத் தலைவர்கள், குடும்பத் தலைவிகளுக்கும் இந்த டிரிப் என்பது தேவைதான்.

சிலர் முன்கூட்டியே அறைகளை புக் செய்து கொண்டு ஹாயாக ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என செல்கிறார்கள். ஆனால் அவசர கதியில் திடீர் முடிவு எடுத்து கிளம்பும் போதுதான் அறை கிடைக்காமல் அவதிப்பட நேரிடுகிறது. அறை தேடி சென்றே பாதி லீவு முடிந்துவிடுகிறது என்கிறார்கள். ஒரு புறம் அறை கிடைக்காது என்றாலும், மறுபுறம் எல்லோராலும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கொண்டு சுற்றுலா செல்ல முடியாது.

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் கோடைக்காலங்களில் கடற்கரைகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் அந்த கடற்கரைகளுக்கு சென்று சென்று போர் அடித்துவிடும். இதனால் குறைந்த செலவில் நிறைய கேம்ஸ் இருக்கும் இடம் ஒன்று இருக்கிறது என்றால் அவர்களுக்கு என்ன வேப்பங்காயாக கசக்குமா என்ன?

Kodai Kondattam amusement park is installed in Chennai Maduravoyal bypass

ஆம் மதுரவாயல் பைபாஸில் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அருகே ஒரு பெரிய அபார்ட்மென்ட்டுக்கு பக்கத்தில் கோடை கொண்டாட்டம் என ஒரு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ளே நுழைவுக் கட்டணம் வெறும் 60 ரூபாய். 3 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இலவச என்ட்ரிதான்.

உள்ளே சென்றால் லக்கி டிரா என ஒரு பேப்பரை கொடுத்து பெயர, போன் நம்பரை எழுத சொல்கிறார்கள். அதில் குலுக்கலில் அந்த சீட்டு தேர்வு செய்யப்பட்டால் ஸ்மார்ட் டிவி உள்ளிட்டவை பரிசாக கிடைக்கும். அது எப்போது குலுக்குவார்கள் என தெரியவில்லை. அப்படியே கொஞ்சம் தூரம் நடந்தால் ஒரு தாஜ்மகால் செட்டப் இருக்கிறது.

ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் முன்பு எப்படி யமுனை ஆறு ஓடுகிறதோ அதே போல் இந்த செட்டப் தாஜ்மகால் முன்பு நடைபாதையில் இரு புறமும் பூச்செடிகள் வைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்படுகிறது. இந்த இடத்தில் நிறைய பேர் போய் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். இது போல் இந்த இடத்தை சுற்றி நிறைய செல்பி பாயிண்டுகள் உள்ளன. அவற்றிலும் நின்று எடுக்கலாம்.

முக்கியமான இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுவதற்கான பொருட்கள் உள்ளன. இங்கு கண்களை கட்டிக் கொண்டு உறியடித்தல் போட்டி உள்ளது, பலூன் ஷூட்டிங் கேம், ஹாரர் அவுஸ் இருக்கிறது. ஜியன்ட் வீல், பம்பர் கார்கள், பைக் ரைடு, டோரா டோராவாத்து போன்ற நீளமான ஒரு ரெய்டு இருக்கும். சில ரெய்டுகள் குடலையே பிறட்டும் அளவுக்கு இருக்கின்றன. குழந்தைகள் விளையாடுவதற்காக கலர் பால்கள் கொண்டிருக்கும் கேம்ஸ்கள் இருக்கின்றன.

Kodai Kondattam amusement park is installed in Chennai Maduravoyal bypass

இந்த கேம்ஸ்களுக்கு தனித்தனி ரேட்டுகள் உள்ளன. குழந்தைகள் விளையாடும் கேம்கள் ரூ40 ,ரூ 50 ஆகும். பெரியவர்கள் விளையாடும் கேம்கள் ரூ 70, ரூ 80 ஆகும். அத்துடன் ஸ்னோ அவுஸ் இருக்கிறது. இங்கு ஐஸ்கட்டிகள் நிரப்பி இருக்கின்றன. இங்கு கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் இருக்கிறது.

கோலி சோடா முதல் கடல் உணவு வகைகள், பீட்சா, பர்கர் உள்ளிட்டவை இருக்கின்றன. டாய்லெட்டுகள் இருக்கின்றன. தண்ணீர் பாட்டில்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இயற்கையில் கிடைக்கும் சிறுதானியங்கள், தேன், வெல்லம் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளுக்கு விளையாட்டு சாமான்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

முக்கியமான விஷயம் ஒட்டக ரைடு இருக்கிறது. இந்த ஒட்டகத்தில் குழந்தைகள் உட்கார வைக்கப்பட்டு ஒரு ரவுண்டு அழைத்து செல்லப்படுகிறார்கள். அதற்கு தனி கட்டணம் உண்டு. ஒட்டகத்தில் ஏறவும் இறங்குவும் வகையில் பெரிய படிகட்டுகளை அமைத்துள்ளார்கள்.
இரு சக்கர வாகனங்கள், கார்கள் பார்க் செய்ய தனி இடவசதி உண்டு. எவ்வளவு நேரம் விட்டாலும் கார்களுக்கு ரூ 100, பைக்குகளுக்கு ரூ 50 ஆகும். இந்த கோடை கொண்டாட்டத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லை.

பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லை. போலீஸார் ரவுண்ட்ஸில் இருக்கிறார்கள். அது போல் டிரோன் கொண்டு கண்காணிக்கவும் செய்கிறார்கள். தினமும் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையும் சனி, ஞாயிறுகளில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரையும் இந்த கோடை கொண்டாட்டம் திறந்து வைக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+