கொடைக்கானல் போன சுற்றுலா பயணிகளுக்கு ட்விஸ்ட்.. இழுத்து பூட்டப்படும் காட்டேஜ்கள்.. என்ன நடக்கிறது?
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக காட்டேஜ் ஹோட்டல் மற்றும் கட்டிடங்கள் இருந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில், கொடைக்கானலில் அரசு அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கும் பணியில் பொதுப்பணித்துறை, காவல் துறை, சுற்றுலா துறை, நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஏராளமான விடுதிகள், காட்டேஜ்கள் செயல்படுகின்றன. கொடைக்கானலை சுற்றி பார்க்க வார இறுதியில் வரும் பலர்,காட்டேஜ்களில் தங்கி சுற்றி பார்க்க அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். பல்வேறு மலைப்பகுதிகளில் காட்டேஜ்கள் செயல்படுகின்றன.

கொடைக்கானல் காட்டேஜ்கள்
ஆனால் கொடைக்கானலில் நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக காட்டேஜ் ஹோட்டல் மற்றும் கட்டிடங்கள் இருந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பெயரில் தற்போது முறைகேடாக செயல்பட்டு வரும் கட்டிடங்களை ஆய்வு செய்வதற்கு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது .
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் முறைகேடாக இயங்கும் தங்கும் விடுதிகள் காட்டேஜ் ஹோட்டல்களை பற்றி புகார் தெரிவிக்கும் வகையில் இலவச தொலைபேசி எண்களை வெளியிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து கொடைக்கானல் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கட்டிடங்களுக்கு அரசு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வந்தார்கள்.
தொடர்ந்து தற்போது கொடைக்கானல் வட்டாட்சியர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் நகராட்சி ஊழியர்கள் கிராம அலுவலர்கள் காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் முன்னிலையில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வந்த கட்டிடங்களை ஆய்வு செய்து பூட்டி சீல் வைத்தனர் .
கொடைக்கானல் விடுதிகள்
மேலும் நீதிமன்ற உத்தரவின் பெயரில் தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதிகளில் முறைகேடாக செயல்பட்டு வரும் தங்கும் விடுதிகள் உணவு விடுதிகளை ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது வரைக்கும் 600 மேற்பட்ட கட்டிடங்களை ஆய்வு செய்துள்ளதாகவும்அதில் 300 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் இதில் இன்று இரண்டு கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications