Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானலில் போதை காளானில் தேன் மற்றும் ஜாம் கலந்து சாப்பிடும் சுற்றுலா பயணிகள்.. அதிர வைத்த வீடியோ

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற கோடைவாசல் தலமாக இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். அப்படி ஒரு சுற்றுலா பயணிகளில் சில, போதை காளானை தேடி மலைப்பகுதிக்கு வருகிறார்கள். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் போதை காளானில் தேன் மற்றும் ஜாம் கலந்து சாப்பிடுவது போல் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

கொடைக்கானலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஊட்டிக்கு அடுத்தபடியாக மிக பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகிறார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வறு மாநில சுற்றுலா பயணிகளும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் விரும்பி வரும் சுற்றுலா தலமாக கொடைக்கானல் இருக்கிறது. அப்படி கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு மேல்மலை பகுதிகளான மன்னவனூர், கூக்கால், கவுஞ்சி உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் இடமாக இருந்து வருகிறது.

Kodaikanal tourists eating Magic Mushroom mixed with honey and jam Demand made by social activists

போதைக்காளான் வீடியோ

அவ்வப்போது சுற்றுலா பயணிகள் போதை காளான் பயன்படுத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சில இளைஞர்கள் போதை காளானில் தேன் மற்றும் ஜாம் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்‌. இதுபோன்று போதை காளான்களை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவதால் போதை காளான்களை தேடி பல இளைஞர்கள் கொடைக்கானல் மலை கிராமத்திற்கு செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், போதை காளான்கள் பயன்படுத்தி தொடர்ச்சியாக வெளியாகும் இது போன்ற வீடியோகளால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. எனவே போதை காளான் விற்பனை செய்கின்ற நபர்கள் மற்றும் பயன்படுத்தும் இளைஞர்களை கண்டறிந்து மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதைக்காளான் என்றால் என்ன

அது சரி போதைக்காளான்கள் என்பது என்ன.. போதைக்காளான்கள் என்பது இயற்கையாகவே சைலோசைபின் மற்றும் சைலோசின் போன்ற ரசாயனங்களைக் கொண்டிருக்கும் காளான் வகைகள் என்று மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.. கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை போன்ற பகுதிகளில் இவை இயற்கையாகவே வளர்வதாக கூறப்படுகிறது. இந்த போதைக்காளானில் சைலோசைபின் என்ற ரசாயனம் உடலில் சென்றவுடன் சைலோசின் ஆக மாறி, நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.

போதைக்காளான் சாப்பிட்டால் என்னாகும்

இதனால் போதை காளானை உட்கொள்பவர்களுக்கு மாயத்தோற்றம்), நேரத்தைப் பற்றிய மாறுபட்ட உணர்வு, அதிகப்படியான மகிழ்ச்சி மற்றும் சிந்தனையில் மாற்றம் ஆகியவை ஏற்படுகிறதாம். இந்தக் காரணத்தினால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இது ஒரு போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படுவாக கூறப்படுகிறது. துவாக, இந்தக் காளான்களை உலர்த்தி, தேனில் கலந்தோ அல்லது முட்டையுடன் சேர்த்து ஆம்லெட் போலத் தயாரித்தோ உட்கொள்வதாக சொல்கிறார்கள்.

போதைக்காளான் வைத்திருந்தால் 10 வருடம் சிறை

ஆனால் போதைக்காளான் விற்பனை மற்றும் வைத்திருப்பது சட்ட விரோதமானது ஆகும். ஏனெனில் போதைக்காளான்களில் உள்ள சைலோசைபின் மற்றும் சைலோசின் ஆகிய வேதிப்பொருட்கள், நார் கோட்டிக் மருந்துகள் மற்றும் உளவியல் பொருட்கள் சட்டப்படி தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. போதைக் காளான்களை விற்பனை செய்தவர்கள் மற்றும் வைத்திருந்தவர்கள் மீது கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து வருகின்றனர். குற்றத்தின் தன்மைக்கேற்ப, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது.

போதை காளான் மாதிரியே விஷக்காளான்

அதேநேரம் கொடைக்கானலை பொறுத்தவரை போதைக்காளான்கள் போலவே தோற்றமளிக்கும் பல காளான் வகைகள் கொடைக்கானல் வனப்பகுதிகளில் வளருகின்றன. அவை அனைத்தும் விஷத்தன்மை கொண்டவையாக உள்ளன. தவறுதலாக விஷக் காளான்களை உட்கொண்டால் உயிர் பிழைப்பது கடினமாகிவிடும். குமட்டல், வாந்தி, அதிக இதயத் துடிப்பு, பதட்டம் மற்றும் மனநோய்கள் போன்ற உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் போதைக்காளானை தேடி செல்வது ஆபத்தானது என்றும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+