நியூயார்க், லண்டன் ஸ்டைலில்.. சென்னையில் நடக்கும் தரமான சம்பவம்.. டெஸ்டிங் ஓவர்.. புது லேண்ட்மார்க்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அமையவுள்ள வொண்டர்லா தீம் பார்க்கில் நிறுவப்படும் பிரமாண்டமான ரோலர் கோஸ்டரின் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.

சென்னை வொண்டர்லா பூங்காவின் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தற்போது 70% பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் அன்று பூங்கா திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

tour chennai

வொண்டர்லா தீம் பார்க்

இந்த பூங்காவில் இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. மற்ற கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இருப்பினும், பூங்கா 2025 டிசம்பர் மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வொண்டர்லா நிறுவனம் சென்னை அருகே தனது திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த பூங்காவின் பின்னணி குறித்து ஆராய்கையில், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் (ஜிஐஎம்) வொண்டர்லா நிறுவனம் அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டது. இருப்பினும், உள்ளூர் வரி (எல்பிடி) காரணமாக திட்டம் உடனடியாக தொடங்கப்படவில்லை.

அப்போது, மாநிலத்தில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள் 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் (ஜிஎஸ்டி) மாநிலத்தால் விதிக்கப்பட்ட 10% எல்பிடியையும் செலுத்த வேண்டியிருந்தது. இதனால், 2018ஆம் ஆண்டில், எல்பிடி ரத்து செய்யப்படாவிட்டால் திட்டத்தை கைவிடுவதாக நிறுவனம் அறிவித்தது.

சென்னை வொண்டர்லா பூங்கா

கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, வொண்டர்லா நிறுவனம் அரசாங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. இதன் விளைவாக, தற்போது இந்த திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் 2025 டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் உள்ள இல்லலூர் கிராமத்தில் 62 ஏக்கர் பரப்பளவில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் இத்திட்டம் அமைகிறது. மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வொண்டர்லா இந்த பொழுதுபோக்கு பூங்காவைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளது.

நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ளது போன்ற பிரம்மாண்டமான ரோலர் கோஸ்டர் சென்னையில் அமையவுள்ள வொண்டர்லா பூங்காவில் நிறுவப்படவுள்ளது. வொண்டர்லா அம்யூஸ்மென்ட் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசிடமிருந்து தேவையான ஒப்புதல்கள், அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளோம். பூமி பூஜை செய்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நியூயார்க் மற்றும் லண்டனில் உள்ளது போன்ற பிரம்மாண்டமான ரோலர் கோஸ்டர்

இத்திட்டம் 2025 டிசம்பருக்குள் மாதத்திற்குள் நிறைவடையும் என மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் உள்ள இல்லலூர் கிராமத்தில் 62 ஏக்கரில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகிறது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டின் சுற்றுலா கொள்கையில், பொழுதுபோக்கு பூங்கா மற்றும் தீம் பார்க் திட்டங்களுக்கு ஒற்றை சாளர அனுமதி வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. டிஸ்னி மற்றும் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் போன்ற உலகளாவிய தீம் பாங்காக்களைப் போல, சென்னையின் புறநகர்ப் பகுதியில் குறைந்தது 100 ஏக்கரில் பெரிய அளவிலான பொழுதுபோக்கு பூங்காவை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தப் பூங்கா தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும் என்றும் கொள்கை கூறுகிறது. இதன் ஒரு பகுதியாகவே, தற்போது இந்த தீம் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே மிகப்பெரிய ரோலர் கோஸ்டர் சென்னையில் அமையவுள்ளது.

வொண்டர்லா ஹாலிடேஸ் நிறுவனம், தங்கள் சென்னை திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஒப்புதல்கள், அனுமதிகள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்களை தமிழ்நாடு அரசிடமிருந்து வெற்றிகரமாகப் பெற்றுள்ளதால், விரைவில் இதற்கு திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+