மூணாறுக்கு சுற்றுலா வந்த நாகை காதல் ஜோடி.. லாட்ஜில் இருந்த கோலம்.. விசாரித்தால் பெரிய ட்விஸ்ட்
மூணாறு: தமிழ்நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு மிகப்பெரிய சுற்றுலா தலம் ஆகும். ஏராளமான தமிழர்கள் உள்ளனர். இங்குள்ள சுற்றுலா தலத்திற்கு தற்போது கோடைக்காலம் என்பதால் பலரும் வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் மூணாறு அருகே உள்ள தேவிகுளம் நகர் பகுதியில் தங்கும் விடுதிக்கு வந்த கள்ளக்காதல் ஜோடி, அங்கிருந்த கோலத்தை கண்டு ஓட்டல் ஊழியர்கள் ஆடிப்போனார்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தென்னிந்தியாவில் ஊட்டி, கொடைக்கானலை போல் புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்குள்ள மாட்டுப்பட்டி அணை, கொழுக்குமலை, டாப் ஸ்டேஷன், காந்தளூர் உள்பட பல்வேறு பகுதிகள் மிகவும் புகழ் பெற்றவை.

போடி மெட்டு தொடங்கி மூணாறு வரையிலும், மூணாறு முதல் மறையூர் வரையிலும், மூணாறு முதல் வட்டக்கானல் வரையிலும் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தற்போது மூணாறுக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலத்தவர்கள் அதிகம் வந்து செல்கிறார்கள்.
இந்நிலையில் மூணாறு அருகே உள்ள தேவிகுளம் நகர் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளுக்காக இயங்கி வருகிறது. அங்குள்ள ஒரு தங்கும் விடுதிக்கு 27 வயது வாலிபரும், 25 வயதுடைய ஒரு பெண்ணும் நேற்று முன்தினம் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள்.
இந்தநிலையில் இரவில் தங்கும் விடுதி ஊழியர், அந்த அறைக்கு சென்று கதவை தட்டியிருக்கிறார். ஆனால் வெகு நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து, விடுதி நிர்வாகம் சார்பில் தேவிகுளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அறைக்கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்க்ள. இதையடுத்து போலீசார், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அடிமாலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த வாலிபர் தமிழகத்தில் நாகப்பட்டினம் இந்திரா நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் என்பதும், அந்த பெண் மயிலாடுதுறையை சேர்ந்த அவரது உறவினர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து தலா 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் உறவினர்களான இவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மனமுடைந்த அவர்கள், வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு எடுத்தனர்.
இதற்காக 2 பேரும் மூணாறுக்கு வந்து தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர். பின்னர் மதுவில் மருந்து கலந்து குடித்து உயிரைவிட முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து தேவிகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)


Click it and Unblock the Notifications
