Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tour: குற்றாலம் மட்டுமில்லை.. நெல்லையில் மிஸ் பண்ணவே கூடாத சூப்பர் ஸ்பாட்! இந்த அருவிகளை பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மாவட்டங்களில் சுற்றுலா (Tour - Nellai, Courtallam) என்றாலே மக்கள் நினைவுக்கு முதலில் வருவது குற்றாலம் தான். குற்றாலம் மட்டும் இன்றி, நெல்லை பகுதியில் உள்ள பிற அருவிகள், நீர்நிலைகள் பற்றிய விவரங்களை பார்க்கலாம். அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அணை என குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் சென்று வரும் இடங்களை இங்கு பார்க்கலாம்.

தமிழகத்தில் தென் பகுதிகளில் மிகச்சிறந்த சுற்றுலா தலங்கள் உள்ளன. சென்னை போன்ற வெளியூர்களில் வசிக்கும் தென் பகுதி மக்கள் விடுமுறை நாட்கள், கோவில் திருவிழா சமயங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவிட்டு வருவதை பார்க்க முடியும்.

Tour Nellai Courtallam

பாபநாசம் அணை

தென் மாவட்டங்களில் சுற்றுலா என்றாலே உடனே மக்கள் நினைவுக்கு வருவது குற்றாலம் தான். தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் தான் நினைவுக்கு வரும். குற்றாலம் மட்டும் இன்றி, நெல்லை பகுதியில் உள்ள பிற அருவிகள், நீர்நிலைகள் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளில் ஒன்றாக காரையாறு அணை உள்ளது. இது பாபநாசம் அணை எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 143 அடி உயரம் கொண்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட இந்த அணை 1942-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையின் பூங்குழியில் காரையாறு (தாமிரபரணி) உற்பத்தியாகிறது. இதனுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் தோன்றிய சிற்றாறுகளும் இணைந்து தாமிரபரணியாக தரணியில் வற்றாத ஜீவநதியாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

Tour Nellai Courtallam

களக்காடு தலையணை

நெல்லை மாவட்டத்தில் உள்ள மிக ரம்மியமான பகுதிகளில் ஒன்றாக களக்காடு தலையணை உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீரில் மிகவும் குளிர்ச்சியானது பச்சையாறு என்று சொல்லப்படுகிறது. இந்த பச்சையாறின் குறுக்கே தலையணை அமைந்துள்ளது. களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்து இருக்கக் கூடிய பச்சையாறு தலையணையில் இருந்துதான் வடக்கு பச்சையாறு அணைக்கும், நேரடி பாசனத்துக்கும் தண்ணீர் பிரிந்து செல்கிறது.

களக்காடு தலையணை மற்றும் அருகில் உள்ள விளையாட்டு பூங்கா வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கிறார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் குளிக்க தடை விதிக்கப்படுகிறது. களக்காடு பேருந்து நிலையத்தில் இருந்து 6.4 கிலோ மீட்டர் பயணித்தால் தலையணையை அடையலாம்.

Tour Nellai Courtallam

புலிகள் காப்பகம்

தமிழ்நாட்டின் முதல் புலிகள் காப்பாக களக்காடு கருதப்படுகிறது. முண்டந்துறை புலிகள் காப்பகம் 1988-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. களக்காடு மற்றும் முண்டந்துறை ஆகிய இரு வனப்பகுதிகளையும் சேர்த்து இந்த காப்பகம் உருவாக்கப்பட்டது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி மற்றும் பல்வேறு வகையான குரங்குகள், மான்களும், அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் மான்கள் நிறைந்த மாஞ்சோலை, ஆண்டு முழுவதும் மழை பெறும் ஊத்து பகுதியும் அமைந்துள்ளன.

பாபநாசம் காரையாறு அணையின் உள்பகுதியில் பாணதீர்த்த அருவி உள்ளது. ஆண்டு முழுவதும் இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். அணையின் உள்பகுதியில் படகு மூலம் பயணித்து மக்கள் குளித்து மகிழ்ந்தார்கள். ஆனால் தற்போது வனச்சட்டங்களால் பாணதீர்த்த அருவியில் யாரும் குளிக்க முடியாது.

தற்போது முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில் இருந்து பிரத்யேக வாகனம் மூலமாக சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்தபடி காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில், காணி சமுதாய பழங்குடியின மக்கள் வசிக்கும் சின்ன மைலாறு உள்ளிட்ட பகுதிகள் வழியாக பாணதீர்த்த அருவியை காண முடியும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. வனத்துறை சார்பில் ஒரு நபருக்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அகஸ்தியர் அருவி

வற்றாத ஜீவநதி என்று அழைக்கப்படும் தாமிரபரணி பாய்ந்தோடும் வழியில் பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆன்மிக அருவியாகவும் இந்த பாபநாச அருவி கருதப்படுகிறது. இதனால், அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி வெளியூர் மக்களும் அதிகம் விரும்பி வருவதை பார்க்க முடியும்.

அகஸ்தியர் அருவிக்கு கீழ் பாபநாச சுவாமி கோவில் அருகே தலையணை உள்ளது. ஆனால் இங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Tour Nellai Courtallam

கூந்தன்குளம்

திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கூந்தன்குளம். இங்குள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. கூந்தன்குளம்-காடன்குளம் என இயற்கையாக அமைந்துள்ள நீர்பரப்பில் 129.33 ஏக்கரில் பரந்து இந்த பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இயற்கை காட்சிகளை ரசிப்பவர்களுக்கு ஏற்ற இடமாக இது அமைந்து இருக்கும்.

Tour Nellai Courtallam

இங்கு கண்காணிப்பு கோபுரம் உள்ளது. இதனால், பறவைகளை பார்க்க வசதியாக இருக்கும். இங்குள்ள பறவைகளுக்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதற்காக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பட்டாசுகள் வெடிப்பது இல்லை. கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன.

மணிமுத்தாறு அருவி

மணிமுத்தாறு அருவி பெரும்பாலான நாட்களில் தண்ணீர் விழும் அருவியாகும். மேற்கு தொடர்ச்சி மலையின் மிக உயரமான இடங்களான காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலை போன்ற பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீர் மணிமுத்தாறு அணைக்கு செல்கிறது.
அணை கரையில் மலைப்பாதை வழியாக பயணித்தால் அருவியை அடையலாம். இங்கு பைக், ஆட்டோக்களில் செல்ல அனுமதி கிடையாது.

கார், வேன்களில் கட்டணம் செலுத்தி அருவிக்கு செல்லலாம். அதேபோல, திருக்குறுங்குடி வனப்பகுதியில் நம்பியாறு பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த மலையில் வனத்துறை சோதனை சாவடியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் இயற்கை எழில் கொஞ்சும் மலையில் வாசம் செய்யும் நம்பி கோவில் அமைந்துள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து நம்பியாற்றில் குளித்து செல்கிறார்கள்.

வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் குறிப்பிட்ட தூரம் மட்டுமே மக்கள் ஆற்றில் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மட்டும் அதற்கு மேல் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+