"இடம் மாறி வந்துட்டோமா" 27 டிகிரி செல்சியஸ்! ஊட்டியில் வறுத்தெடுக்கும் வெயில்.. சுற்றுலா பயணிகள் ஷாக்
சென்னை: ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத வகையில் வெப்பநிலை உயர்ந்துள்ளதால் சுற்றுலா வரும் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஊட்டியில் நேற்று மட்டும் 27.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறதாம். இதனால் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கோடை வெயில் ஆரம்பித்துவிட்டது, ஊட்டி கொடைக்கானல் என டூர் போயிட்டு வரலாம் என பலரும் விரும்புவதுண்டு. ஏனென்றால் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் வெயில் விட்டு விளாசினாலும், ஊட்டியில் அப்படியே கிளைமேட் ஜில்லென இருப்பதால் ஆண்டுதோறும் கோடைக்காலம் வந்துவிட்டால் ஊட்டி, கொடைக்கானலுக்கு விசிட் அடிப்பது வழக்கம்.

40 ஆண்டுகளில் இல்லாத வெயில்
அப்படித்தான் இந்த ஆண்டும் சுற்றுலா வாசிகள் பலரும் ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநில சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வருகை தருகின்றனர். ஆனால் ஊட்டியிலும் வெயில் கொளுத்தவதால் அங்கு சுற்றுலா சென்ற பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
ஊட்டியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத வகையில் வெப்பநிலை உயர்ந்துள்ளதாம். இது உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா வரும் பயணிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ஊட்டியில் நேற்று மட்டும் 27.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறதாம். சமவெளி பகுதிகளுடன் ஒப்பிடும்போது இது சாதாரணமாக தோன்றலாம். ஆனால், வழக்கமாக 18 முதல் 20 டிகிரிக்குள் தான் ஊட்டியில் வெப்பநிலை இருக்கும்.
40 ஆண்டுகளில் இல்லாத வெயில்
இதனால் 27 டிகிரி செல்சியஸ் என்பதே ஊட்டியின் காலநிலைக்கு கடும் வெப்பமாகவே கருதப்படுகிறது. கடந்த 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி ஊட்டியில் 29.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதற்கு பின்னர் தற்போது தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. வெயில் மட்டுமின்றி புழுக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளதாம். இதனால் ஜில் கிளைமேட்டை அனுபவிக்க சென்ற சுற்றுலாவாசிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனராம்.
குறிப்பாக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது என்றும், அதிலும் 12 மணிக்கு பிறகு வெப்பம் தகிக்கிறது என்றும் கூறுகிறார்கள். ஊட்டியின் இதமான குளிரை அனுபவிக்க வந்த சுற்றுலாப் பயணிகள், மரநிழல், ஓட்டல் விடுதிகளில் தஞ்சம் தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுனராம்.
இடம் மாறி வந்துட்டோமோ?
அதுமட்டும் இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளதாம். குளிர்ச்சியான கால நிலையால் தண்ணீர் தேவை குறைவாக இருந்த ஊட்டியில், தற்போது வெயிலின் காரணமாக குடிநீர் தேவை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. வனச்சூழல் குறைவு, நகரமயமாக்கல் அதிகரிப்பு, உலகளாவிய வானிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை ஊட்டியின் இயல்பான கால நிலையை மாற்றி வருவதாக வானிலை ஆய்வாளர்களும் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழலில், ஊட்டியில் வெப்பம் அதிகரித்துள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்றும், தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் குழந்தைகள், முதியவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மருத்துவர்கள் அட்வைஸ் தெரிவித்து இருக்கிறார்கள். ஊட்டியில் அடிக்கும் வெயிலால் நாம் இடம் மாறி வந்துவிட்டோமோ என்று சுற்றுலா பயணிகளை நினைக்க தூண்டுகிறது அங்குள்ள கிளைமேட்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications