Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னங்க சொல்றீங்க.. ஆல் இந்தியா டூரில் இலவசமா தங்கலாம், சாப்பிடலாமா? தங்கமான தகவல் உங்களுக்காக

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் அறிந்துகொள்ள் வேண்டிய இலவச உணவு, தங்கும் வசதி வழங்கும் இடங்களை பற்றி பார்ப்போம்.

சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் யாருக்குதான் ஆசை வராது.. வேலை டென்சன், குடும்ப டென்சன் என டென்சன் ஓயாமல் பரபரப்புடன் BP மாத்திரை போட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு கூடுதல் டென்சனாக கோடையும் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் ஜாலியாக உடலையும் மனதையும் குளிர்விக்க ஒரு டூர் போயிட்டு வரலாமே என பலரும் நினைப்பது உண்டு. அதே ஆசையோடும் ஆர்வத்தோடும் டூர் பட்ஜெட் போடத் தொடங்கினால், பயணம், தங்குமிடம், உணவு போன்றவற்றுக்கான செலவை கேட்டாலே இருக்கும் கொஞ்ச நஞ்ச அமைதியும் கெட்டுவிடும். உடனே டூர் பிளான் கேன்சல் என்று சொல்லி கிளம்பிவிடுவார்கள் பலர்.

இப்படி இயற்கையை ரசிக்க செல்லும் சுற்றுலாவும் ஏழைகளுக்கு எட்டாக் கனியாகி உள்ளது. நாமும் சுற்றுலா செல்ல மாட்டோமா என்று ஏங்கும் பலரின் சுமையை இந்த தகவல் சற்று குறைக்கும் என்று நம்புகிறோம். காரணம் உணவு, பயணத்துக்கு மட்டும் நீங்கள் செலவு செய்தால் போதும். தங்குமிடம் எல்லாமே இலவசம். இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள சில இடங்களில் இப்படி இலவச தங்கும் வசதியை வழங்குகிறார்கள். இதில் சில பகுதிகளில் இலவச உணவு வசதியும் உண்டு. அது என்ன என்று பார்ப்போம். முதலில் நமது அண்டை மாநிலமான கேரளத்தில் இருந்து தொடங்குவோம்.

 Places that offer free food and accommodation to various states of India

கேரளா: கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்து உள்ள பகுதிதான் கனங்காடு. இங்கு சுவாமி ராம்தாஸால் தோற்றுவிக்கப்பட்ட ஆனந்தாஷ்ரமம் அமைந்து இருக்கிறது. கேரளாவின் இயற்கை அழகு சூழ அமைந்து இருக்கும் இந்த ஆசிரமத்துக்கு அருகிலேயே அனந்தபுரம் ஏரி, கோயில் அமைந்து உள்ளன. முக்கிய சுற்றுலா தலமான சந்திரகிரி கோட்டை போன்றவை உள்ளன. அங்கிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் ராணிபுரம் என்ற அழகிய மலைப்பகுதியும் உள்ளது. இந்த ஆசிரமத்தில் தங்குபவர்களுக்கு இலவச படுக்கை மட்டுமின்றி கூடுதல் போனசாக உணவும் வழங்கப்படுகிறது.

 Places that offer free food and accommodation to various states of India

குஜராத்: கேரளாவின் அரபுக் கடலோர வாசத்தை வாங்கியபடியே குஜராத் செல்வோம். குஜராத் மாநிலத்தில் சுற்றுலா சிறப்பம்சங்கள் நிறைந்த துவாரகா பகுதியில் அமைந்து இருக்கும் பாய் மொஹகம் சிங் ஜி குருத்வாராவில் இலவசமாக தங்கலாம். அங்கும் உணவும் இலவசமாக வழங்கப்படுகிறது.

 Places that offer free food and accommodation to various states of India

உத்தராகண்ட்: குஜராத் பயணத்தை முடித்துவிட்டு அப்படியே வடக்கு நோக்கி செல்லுங்கள். இமயமலை அடிவாரத்தில் அமைந்து உள்ள உத்தராகண்ட் உங்களை அன்போடு வரவேற்கும். அங்குள்ள சமோலி மாவட்டத்தில் அமைந்து உள்ள கோவிந்த் காட் குருத்வாராவும் குஜராத்தை போன்றே இலவசமாக தங்கும் வசதியை வழங்குகிறது. அலக்நந்தா நதிக்கரையில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்து உள்ள இந்த குருத்வாராவிலும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.

 Places that offer free food and accommodation to various states of India

ரிஷிகேஷ்: இதுவும் உத்தராகண்ட் மாநிலத்தில்தான் உள்ளது. கங்கை நதிக்கரையில் அமைந்து இருக்கும் கீதா பவனிலும் இலவசமாக தங்குமிட வசதி வழங்கப்படுகிறது. இந்து மத யாத்திரிகர்கள் அதிகளவில் வரும் ரிஷிகேஷ் பகுதிக்கு அவர்கள் தங்குவதற்காக இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகளும் இங்கும் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கும் உணவு இலவசமாகவே வழங்கப்படுகிறது.

 Places that offer free food and accommodation to various states of India

இமாச்சல் பிரதேசம்: அதே இமயமலையின் ஜில்லென்ற பனிக் காற்றை சுவாசித்துக் கொண்டே இமாச்சல பிரதேசம் நோக்கி வண்டியை விடுங்கள். அங்கும் இலவசமாக தங்குமிடம் மற்றும் உணவு வழங்கும் குருத்வாரா அமைந்து இருக்கிறது. இமாச்சலின் குலு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 1760 அடி உயரத்தில் பார்வதி நதியோரம் உள்ள பார்வதி பள்ளத்தாக்கில் அமைந்து இருக்கும் மணிகரன் பகுதியில் அமைந்து உள்ள மணிகரன் சாஹிப் குருத்வாராவில்தான் இந்த வசதி உள்ளது. -

இன்னும் இதுபோல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இலவசமாக உணவும், தங்குமிட வசதியும் வழங்கப்படுகிறது. தேடினால் எளிய பட்ஜெட் சுற்றுலாவை முடித்துவிடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+