குஜராத்: மோடி திறந்த சுதர்சன் சேது.. ”கிருஷ்ணர்” அரசாண்ட கடலில் மூழ்கிய துவாரகைக்கு போவது இனி எளிது!
ஓகா: குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்த மிக முக்கியமான பாலம் சுதர்சன் சேது. இந்தியாவிலேயே மிக நீளமான கேபிள் பாலம் குஜராத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள சுதர்சன் சேதுதான்.

அயோத்தியில் பகவான் ராமர் குழந்தை வடிவத்தில் பக்தர்களால் வணங்கப்படுகிறார்; அயோத்தி குழந்தை ராமர் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் நடை சாத்தப்படும் நேரங்கள் கூட அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் துவாரகை கோவில்: இந்த நடைமுறையை பன்னெடுங்காலமாகவே பின்பற்றுகிறது குஜராத்தின் துவாரகை. துவாரகை என்பது கிருஷ்ணரின் ஆலயம். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்று. நமக்குதான் கிருஷ்ணர் கடவுள். ஆனால் துவாரகை மக்களுக்கோ கிருஷ்ணர் இன்றும் தங்களை அரசாளும் மாமன்னர். ஒரு மாமன்னருக்கு ஒவ்வொரு நேரத்திலும் என்ன மாதிரியான சேவைகள், உணவுகள், உடைகள் வழங்கப்பட வேண்டுமோ அவை அனைத்துமே துவாரகை கிருஷ்ணருக்கும் பின்பற்றப்படும். அரபிக் கடல் அலைகள் தாலாட்டில் நனைந்து கொண்டே இருக்கிறது தற்போதைய பகவான் கிருஷ்ணர் ஆலயம்.

பேட் துவாரகை எங்கே உள்ளது?: துவாரகையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் ஓகா துறைமுகம் உள்ளது. இந்திய வரைபடத்தில் மேற்கு திசையில் கட்ச் வளைகுடாவில் உள்ள கடைசி துறைமுகம் ஓகா. இங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் ஒரு தனி தீவு உள்ளது. இந்த தீவின் பெயர் பேட் துவாரகை பெட் துவாரகை. இந்த துவாரகைதான் பகவான் கிருஷ்ணர் அரசாண்ட பழங்கால துவாரகை என்பது நம்பிக்கை. கடலில் மூழ்கிய துவாரகை பெருநகரின் ஒரு சிறு பகுதியாக இந்த பெட் துவாரகை திகழ்கிறது. இங்கு கட்டப்பட்டுள்ள கிருஷ்ணர் ஆலயத்துக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஓகா டூ பேட் துவாரகை: ஆனால் ஓகா துறைமுகத்தில் இருந்து படகுகளில் பயணித்துதான் பேட் துவாரகை அல்லது பெட் துவாரகையை சென்றடைய முடியும். நான் பேட் துவாரகைக்கு செல்ல ஓகா துறைமுகம் சென்ற போது லேசான மழைத் தூறல் இருந்தது. இதனால் படகு பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை இருந்தது. இப்படியான சூழ்நிலைகளை மாற்றுவதற்காக அமைக்கப்பட்டதுதான் சுதர்சன் சேது.

சுதர்சன் சேது என்பது என்ன?: ஆம் ஓகா துறைமுகத்தையும் கிருஷ்ணரின் பழங்கால துவாரகையான பேட் துவாரகை தீவையும் இணைக்கக் கூடிய கேபிள் பாலம்தான் சுதர்சன் சேது. இதனைத்தான் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்துள்ளார். ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்ட சுதர்சன் சேது திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். சுமார் 2.32 கி.மீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் இதுவாகும்.

பக்தர்கள் பயணத்தை எளிதாக்கும்: சுதர்சன் சேது ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இதில் ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் பகவான் கிருஷ்ணரின் படங்களால் அலங்கரிக்கப்பட்ட நடைபாதை உள்ளது. நடைபாதையின் மேல் பகுதிகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பாலம் போக்குவரத்தை எளிதாக்குவதோடு, துவாரகா மற்றும் பேட்-துவாரகா இடையே பயணிக்கும் பக்தர்களின் நேரத்தை கணிசமாகக் குறைக்கும். தேவபூமி துவாரகாவின் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் செயல்படும்.
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi to shortly inaugurate Sudarshan Setu, country’s longest cable-stayed bridge of around 2.32 km, connecting Okha mainland and Beyt Dwarka. pic.twitter.com/rFPAT2q4lB
— ANI (@ANI) February 25, 2024
துவாரகையில் மோடி: முன்னதாக பிரதமர் மோடி இன்று காலை 7:45 மணியளவில், பேட் துவாரகா கிருஷ்ணர் கோவிலில் பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில், துவாரகாவில் ரூ.4150 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார்.
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi performs pooja and darshan at Beyt Dwarka temple. pic.twitter.com/U2gZUVB3k4
— ANI (@ANI) February 25, 2024












Click it and Unblock the Notifications