சென்னையில் இருந்து 4 மணி நேரத்தில் போகலாம்.. ஏழைகளின் ஊட்டி! ஏலகிரியில் மிஸ் பண்ணவே கூடாத இடங்கள்!
சென்னை: ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏலகிரியில் மிஸ் பண்ணவே கூடாது என்று சொல்லும் வகையில் பல இடங்கள் உள்ளன. சென்னையில் இருந்து காரில் புறப்பட்டால் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரத்திற்குள் போகலாம். குறைந்த பட்ஜெட்டில் மலைப்பிரதேசத்தை பார்க்க வேண்டும் என்றால் சிறந்த இடமாக சுற்றுலா பயணிகளுக்கு இந்த ஏலகிரி உள்ளது.
கோடையை ஒட்டி மக்கள், வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலஙக்ளுக்கு அதிகம் செல்வதை பார்க்க முடிகிறது. சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்கள் பயணிகள் கூட்டத்தால் அலைமோதுகிறது. வாகனங்கள் கட்டுக்கடங்காமல் வருவதை கண்காணிக்க தற்போது இ பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஏழைகளின் ஊட்டி
அதுபோக ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்வது கொஞ்சம் காஸ்ட்லியானது என நினைக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இருப்பதுதான் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி. கடல் மட்டத்தில் இருந்து 1048.5 மீட்டர் உயரத்தில் 4 மலைகளால் சூழப்பட்டுள்ள ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. 14 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட ஏலகிரி மலைப்பாதையை கடந்து செல்வதே ஒரு தனி சுகம்தான்.. இந்த ஏலகிரிக்கு எப்படி போகலாம். அங்கு அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் எவை என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

மொத்த பரப்பளவு
ஏலகிரி மலையில் வாகனங்கள் ஏறும் போதே தைல மரக்காடுகள் வரவேற்கும். அங்கேயே ரம்மியமான சூழல் தென்பட தொடங்கும். ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர் ஆகும். ஏலகிரி மலையில் மங்களம், நிலாவூர், அத்தனாவூர், தாயலூர் உள்பட 14 கிராமங்கள் உள்ளன. ஏலகிரி மலையில் அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 11 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது. ஏலகிரி மலையில், இயற்கை பூங்கா, போட் ஹவுஸ், மூலிகை பண்ணை, மலையேற்றம், சுவாமி மலை, பறவைகள் சரணாலயம் என பல்வேறு இடங்கள் உள்ளன.

நீர்வீழ்ச்சி:
* ஏலகிரி மலையின் மறுபக்கத்தில் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இது, திருப்பத்தூரில் இருந்து பிச்சனூர் வழியாக 14 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலகிரி மலையில் உருவாகும் நீர் ஜடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. ஏலகிரி மலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் மலையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கும் தவறாமல் சென்று உற்சாக குளியல் போட்டு வருகிறார்கள்.

* ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் கிராமத்தில் செயற்கையான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியானது ரம்மியமான இயற்கை சூழலுடன் அழகான மற்றும் அமைதியான சூழலைக் கொண்டது ஆகும். இந்த ஏரி கதவ நாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே திறந்து இருக்கும். மாலை 6 மணி வரை மட்டுமே நடை திறந்து இருக்கும்.

புங்கனூர் ஏரி படகு சவாரி
ஏலகிரி மலைக்கு விசிட் செல்லும் சுற்றுலா பயணிகள் மறக்காமல் செல்ல கூடிய ஒரு இடம் புங்கனூர் ஏரி ஆகும். 10 அடி முதல் 20 அடி ஆழம் வரை இந்த ஏரி உள்ளது. ஏரியைச் சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா உள்ளது. அது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஏரியை ஒட்டி அமைந்துள்ள படகு சவாரி இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் சவாரி செய்ய படகும் கிடைக்கும். 20 நிமிட படகு சவாரி செய்ய துடுப்பு, படகுக்கு சேர்த்து ரூ.50 ம், கால்மிதி படகு என்றால் ரூ.200-ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

படகு சவாரி செல்லும் சாலை நுழைவு வாயில் அருகே ஏலகிரி மூலிகை பண்ணை உள்ளது. இங்கு மூலிகை செடிகள் குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. பலவித நோய்களுக்கும் பயன்படும் மூலிகை செடிகளை சுற்றுலாப் பயணிகள் மறக்காமல் வாங்கி செல்கிறார்கள். அது மட்டும் இன்றி பூச்செடிகள், மலைத்தேன், காய்கறி விதைகள், நறுமணப்பொருட்கள் இங்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
செயற்கை நீர்வீழ்ச்சி
அடுத்ததாக சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் என்றால் அது இயற்கை பூங்காதான். 12 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, புங்கனூர் ஏரி அருகே உள்ளது. இந்த பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சி, குழந்தைகளுக்கான பூங்கா, உள்ளிட்டவையும் அமைந்துள்ளன. இந்த பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறியவர்களுக்கு ரூ.5 கட்டணம் ஆகும். காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டும் இந்த பூங்காவிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
குறைந்த பட்ஜெட்
ஏலகிரியில் சுற்றுலாப் பயணிகள் குறைந்த செலவில் சென்று விட்டு வரலாம். ஏலகிரி மலையில் அரசு தங்கும் விடுதி உள்ளது. தனியார் விடுதிகளும் உள்ளன. அரசு விடுதி என்றால் ஆயிரம் ரூபாய் முதல் 3,000 ரூபாய் கட்டணம் உள்ளது. தனியார் விடுதிகள் மட்டும் இன்றி ரிசார்ட்களும் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி விரும்பும் இடத்தில் தங்கலாம். ஏலகிரியில் நாள் முழுக்க 4 பேர் சேர்ந்து காரில் சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஏலகிரி மலையில் அரசு தங்கும் விடுதி குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. தனியார் தங்கும் விடுதிகள் 90 உள்ளன. இதில் குறைந்த பட்சமாக ஒரு நாளுக்கு ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் ரிசார்ட்டுகள் 250 உள்ளன. அதில் ஒரு நாளுக்கு குறைந்த பட்சமாக 3 ஆயிரத்து ஐநூறு ரூபாய் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது. ஏலகிரிமலை ஒரு நாள் முழுவதும் 4 பேர் அடங்கிய குடும்பத்தினர் சுற்றி பார்க்க காரில் ரூ.1500-ம், ஆட்டோவில் ரூ.750-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதர செலவுகள் என ரூ.5 ஆயிரம் வரை செலவாகும்.
எப்படி போகலாம்?
சென்னையில் இருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை சென்று அங்கிருந்து ஏலகிரி மலைக்கு பேருந்தில் பயணம் செய்யலாம். ஏலகிரி மலையில் பயணம் செய்ய தனியார் பேருந்து ஒன்றும், 14 அரசு பேருந்துகளும் தினமும் இயக்கப்படுகிறது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு பயணம் செய்ய பேருந்தில் டிக்கெட் ரூ.20 ஆகும்.

நிலாவூர் வரை செல்ல ரூ.23 ஆகும். ஜோலார்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு ரூ.15 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து காரில் புறப்பட்டால் 4 மணி நேரம் முதல் 5 மணி நேரத்திற்குள் போகலாம். குறைந்த பட்ஜெட்டில் மலைப்பிரதேசத்தை பார்க்க வேண்டும் என்றால் சிறந்த இடமாக சுற்றுலா பயணிகளுக்கு இந்த பகுதி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications