புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெங்களூர் குடும்பம்.. இப்படியா ஆகணும்.. கனவிலும் நினைக்காத சம்பவம்
புதுச்சேரி: புதுச்சேரி பெங்களூரைச் சேர்ந்தவர்கள் குடும்பமாக சுற்றுலா சென்றனர். புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம் முகத்துவாரம் பகுதிக்கு இயக்கப்படும் சிறிய படகில் 8 பேர் சென்றுள்ளனர். பலத்த காற்றால் கடலில் எழுந்த ராட்சத அலை மற்றும் நீரோட்டத்தின் காரணமாக படகு திடீரென்று கவிழ்ந்தது. இதில் சோனியா என்ற பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.. மற்றவர்கள் காப்பாற்றப்பட்டனர். இந்த விவகாரத்தில் படகின் உரிமையாளர் மற்றும் அதை ஓட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பாண்டி மெரினா, முருங்கப்பாக்கம் கைவினை கிராமம், வீராம்பட்டினம் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அரிக்கன்மேடு, சதுப்புநில காடு போன்ற இடங்களுக்கு தனியார் சார்பில் சுற்றுலா படகுகள் இயங்கி வருகிறது. இந்த படகுகளில் பயணிக்க புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.ஆனால் இதில் பல படகுகள் உரிமம் இன்றி இயக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

பெங்களூர் குடும்பம்
இந்த நிலையில் பெங்களூரு சவுகார் லைன் குஷால் நகரை சேர்ந்த 39 வயதாகும் விஜய் என்பவர் தனது மனைவி சோனியா (33) மற்றும் குடும்பத்தினர் சந்தியா (21), சக்தீஸ்வரி (14), அஸ்வின் (11), சதீஷ் (9) உள்பட 8 பேருடன் புதுச்சேரிக்கு கடந்த 18-ந் தேதி காரில் சுற்றுலா வந்துள்ளார். புதுச்சேரியில் பல்வேறு சுற்றுலா இடங்களை அவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். பின்னர் புதுச்சேரியில் புகழ் பெற்ற படகு சவாரி செய்ய விரும்பினர்.
இதற்காக புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம் முகத்துவாரம் பகுதிக்கு பெங்களூர் சுற்றுலா பயணிகள் சென்றனர். அங்கு தனியார் சார்பில் இயக்கப்படும் சிறிய படகில் 8 பேரும் சவாரி செய்தனர். படகை வீராம்பட்டினம் நாகூரான் தோட்டத்தை சேர்ந்த வல்லத்தான் என்கிற தங்கமணி ஓட்டியிருக்கிறார்.
ராட்சத அலை
முகத்துவாரத்தில் இருந்து படகு புறப்பட்டது. அப்போத படகு புறப்பட்ட சிறிது தூரம் சென்று திரும்பியது. அப்போது பலத்த காற்றால் கடலில் எழுந்த ராட்சத அலை மற்றும் நீரோட்டத்தின் காரணமாக படகு திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த விஜய், சோனியா உள்பட அனைவரும் முகத்துவார பகுதியில் விழுந்து தண்ணீரில் தத்தளித்துள்ளார்கள். இதை கடற்கரையில் இருந்து பார்த்த மீனவர்களும், பொதுமக்களும் விரைந்து சென்று, உயிருக்கு போராடியவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனே அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
விசாரணை
அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சோனியா ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது. சந்தியா, சக்தீஸ்வரி ஆகியோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அஸ்வின், சதீஷ் ஆகியோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர்.
படகு உரிமையாளர் கைது
பின்னர் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து படகு உரிமையாளர் சதீஷ் என்ற விஜயகுமார் (39), படகு டிரைவர் தங்கமணி ஆகியோரை கைது செய்தனர். விபத்துக்கு காரணமான படகுக்கு உரிமம் உள்ளதா? சவாரியின்போது சுற்றுலா பயணிகளுக்கு 'லைஃப் ஜாக்கெட்' வழங்கப்பட்டதா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 'லைஃப் ஜாக்கெட்' வழங்கப்பட்டிருந்தால் யாரும் உயிரிழந்திருக்க மாட்டார்கள். இதுபோன்ற இடங்களுக்கு லைஃப் ஜாக்கெட் அணியாமல் செல்லக்கூடாது. அதேபோல் உரிமம் இல்லாத படகுகளில் பயணிப்பது சிக்கலை ஏற்படுத்தும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications