ராமேஸ்வரம் கோவிலுக்கு வந்த ஆந்திர பயணிகள்.. காருக்குள் இருந்த தங்கம், வைரம்.. ஒரு நொடியில் காலி

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மிகவும் புகழ் பெற்றது.தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் மக்கள் வந்து செல்கிறார்கள். ராமேஸ்வரத்தில் சாலையின் ஓரம் நிறுத்திச் சென்ற ஆந்திர மாநில பயணிகளின் காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த தங்க நகை மற்றும் வைர தோடுகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் மிகவும் புகழ் பெற்றது.தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் மக்கள் வந்து செல்கிறார்கள். அதேபோல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். மேலும் உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட பல்வேறு வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஆன்மீக சுற்றுலா பயணிகள் தினமும் வருகிறார்கள்.

Rameswaram tour Gold and diamonds stolen from the car of Andhra Pradesh tourists at temple

இதன் காரணமாக ஆன்மீக சுற்றுலா நகரமான ராமேஸ்வரத்தில் எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆன்மீக சுற்றுலா வரும் பயணிகள், தங்கள் குடும்பத்துடன் சுவாமியை தரிசனம் செய்வார்கள். அதேபோல் இறந்தவர்களுக்கு, முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் பலர் ராமேஸ்வரம் வருகிறார்கள். நேற்று ஆடி அம்மாவசா என்பதால் ஏராளமானோர் ராமேஸ்வரம் வந்து முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திராவில் இருந்து ஏழு பேர் கார் ஒன்றில் வந்துள்ளனர். அவர்கள் தங்கள் காரை ராமேஸ்வரம் புறநகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் நிறுத்தியுள்ளனர். பின்னர் சாப்பிடுவதற்காக உணவத்திற்குள் சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

அப்போது காருக்குள் இருந்த ஐந்து தங்க மோதிரம், வைரத்தோடு, 10 ஆயிரம் ரூபாய் பணம், 8 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் அடங்கிய பை ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஆந்திர மாநில ஆன்மீக சுற்றுலா பயணிகள், உடனே ராமேஸ்வரத்தில் உள்ள சி1 காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+