மே மாத வெயிலுக்கு ”ஜில்” செய்ய சூப்பர் ஸ்பாட்கள்! ஏற்காடு டூ குன்னூர் வரை! மிஸ் பண்ணவே கூடாத இடங்கள்
சென்னை: கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிய நிலையில் பலரும் மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா செல்ல பிளான் போட்டுக்கொண்டு வருகிறார்கள். அதிகம் பட்ஜெட் பிடிக்காதபடி குறைந்த செலவில் சுற்றுலா செல்ல விரும்புபவர்களுக்கு மிஸ் பண்ணவே கூடாத இடங்கள் என்னென்ன என்பதை தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.
கோடை விடுமுறையில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சுற்றுலாப் பயணிகள் மலைவாசஸ்தலங்களுக்கு படையெடுப்ப்து வழக்கம். தமிழக சுற்றுலாப் பயணிகளுக்கு மலை வாசஸ்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் மாநிலத்தை சுற்றியே பல இடங்கள் உள்ளன. அதிகம் பட்ஜெட் பிடிக்காமல் குறைந்த செலவில் இந்த இடங்களுக்கு சென்றுவிட்டு வர முடியும். அந்த வகையில், தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள அதாவது தென் இந்தியாவில் உள்ள டாப் டூரிஸ்ட் ஸ்பாட்களை பற்றி இங்கே பார்ப்போம்.
மேகமலை:
மதுரையில் இருந்து 112 கிலோ மீட்டர் தொலைவிலும் தேனியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது மேகமலை. மேகமலை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு செல்லும் வழியிலேயே கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் பசுமை நிறைந்த சூழலாக இருக்கும். மேகமலைக்கு முன்பாகவே சின்ன சுருளி நீர் வீழ்ச்சி உள்ளது. மேகமலை செல்லும் பகுதியில் காணும் இடமெல்லாம் தேயிலை தோட்டங்களை பார்க்க முடியும். பச்சை பசேல் என இயற்கை எழில் கொஞ்சும் காட்சி கண்ணுக்கு விருந்தளிக்கும். மேகமலையை பொறுத்தவரை மேகக்கூட்டங்கள் அப்படியே தவழ்ந்து செல்வதை நம்மால் உணர முடியும்.

வால்பாறை:
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆனைமலை மலைத்தொடரில் வால்பாறை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,500 அடி உயரத்தில் வால்பாறை உள்ளது. பொள்ளாச்சியில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும் கோவையில் இருந்து 102 கிலோ மீட்டர் தொலைவிலும் வால்பாறை அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இடமான வால்பாறை.. கண்ணுக்கு விருந்தளிக்க கூடியது. இயற்கை மாறாத அழகியலை கொண்ட வால்பாறையில் அடர்ந்த காடுகள், ஆனைமலை புலிகள் காப்பகம், நீரார் அணை, சோலையாறு அணை போன்றவை உள்ளன. பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு பயணம் செய்வது ஒரு இனிய அனுபவமாக சுற்றுலா பயணிகளுக்கு இருக்கும்.

குன்னூர்:
ஊட்டிக்கு மிக அருகிலேயே உள்ள இடம்தான் குன்னூர். நீலகிரி மலைத்தொடரின் மொத்த அழகையும் இங்கிருந்து பார்க்க முடியும். கோவை ரயில் நிலையத்தில் இருந்து 71 கிலோ மீட்டர் தொலைவில் குன்னூர் உள்ளது. மலைகள் நிரம்பிய சொர்க்க பூமியை போல் காட்சிதரும் குன்னூர் சிறந்த கோடைவாசஸ்தலமாகும். திரில்லிங்கான மலைப் பாதைகள், சிலிர்க்க வைக்கும் தேயிலை தோட்டங்கள் என கண்களை குளிர வைக்க பல ஸ்பாட்கள் இங்கு உள்ளன.

ஊட்டி:
ஊட்டியை பற்றி தனியாக சொல்ல தேவையில்லை. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு ஊருக்கு போக வேண்டும் என்றால், ஊட்டிதான் முதலில் நினைவுக்கு வரும். மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியில் நீலகிரி மலை ரயில், ஊட்டி ஏறி, பொட்டானிக்கல் கார்டன் என கண்ணுக்கு விருந்தளித்து மனதை லயிக்க வைக்கும் பல ஸ்பாட்கள் உள்ளன. தற்போது ஊட்டிக்கு செல்ல இ பாஸ் தேவைப்படும்.

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் கடல் மட்டத்தில் இருந்து 2,100 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்குள்ள இயற்கை சூழலும் குளிர்ந்த தன்மையும் சுற்றுலா பயணிகளை சிலிர்க்க வைக்கும். நடுத்தர வசதி கொண்ட மக்களுக்கு சிறந்த ஸ்பாட் ஆக இது உள்ளது. ரயில்கள், பேருந்துகள் மூலம் திண்டுக்கல் கொடை ரோடு வந்து அங்கிருந்து பஸ், கார் மூலமாக கொடைக்கானல் செல்லலாம்.
கொடைக்கானல் ஏரி, கோக்கர்ஸ் வாக், பிரயான் பூங்கா, குணா குகை, பேரிஜம் ஏரி, வெள்ளி நீர் வீழ்ச்சி மற்றும் செண்பகனூர் அருங்காட்சியகம் ஆகிய இடங்கள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன.

மூணாறு:
கேரளாவில் உள்ள மூணாறு மிகச்சிறந்த கோடை வாசஸ்தலம் ஆகும். மே மாத அக்கினி வெயிலில் இருந்து தப்பித்து ஜில் செய்ய நினைக்கும் பயணிகளுக்கு மூனாறு சிறந்த இடமாக இருக்கும். 'தென்னகத்தின் காஷ்மீர்' என அழைக்கப்படும் மூணாறு கோடை கால விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் களை கட்டும்.













Click it and Unblock the Notifications