குளுகுளு கொடைக்கானலில் வில்பட்டி பயணம்.. பள்ளத்தாக்கு டூ மலை உச்சி.. மறக்க முடியாத நிகழ்வு
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்வது சுற்றுலா பயணிகள் பலருக்கும் பிடித்த விஷயமாக இருக்கும்.. அதிலும் செப்டம்பர் மாதமான தற்போது செல்வது என்பது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். வெயிலும் இல்லாமல், மழையும் இல்லாமல், குளிரும் இல்லாமல் இருக்கும் மாதம் ஆகும். கொடைக்கானல் பக்கத்தில் உள்ள வில்பட்டி என்ற கிராமத்திற்கு சென்ற அனுபவம் பற்றி பார்ப்போம்.
சென்னை, பெங்களூரில் இருக்கும் பலருக்கும் ஊட்டி அல்லது கொடைக்கானலில் நண்பர்களுடன் ஒரு நாளாவது போய் சுற்றி வர வேண்டும் என்று ஆசை இருக்கும். ஏனெனில் இரண்டு ஊர்களிலுமே கிளைமேட் மிக அருமையாக இருக்கும்.பொதுவாக ஊட்டி, கொடைக்கானல் சீசன் என்பது மார்ச் தொடங்கி ஜூன் வரை இருக்கும். இது முதல் சீசன் ஆகும்.

இரண்டாவது சீசன் என்பது செப்டம்பரில் தொடங்கும். செப்டம்பரில் ஆஃப் சீசன் இருக்கும். எப்படி இருக்கும் என்றால், மழை நிச்சயம் இருக்காது. வெயிலும் பெரிதாக இருக்காது. குளிர் இருக்குமா என்று கேட்டால் அந்த அளவிற்கு இருக்காது. சுற்றுலா பயணிகள் சுற்றுலா செல்ல உகந்த மாதங்களில் செப்டம்பர் மாதம் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறது..
சரி விஷயத்திற்கு வருவோம். சுற்றுலா பயணி ஒருவரின் சொந்த அனுபவத்தை பற்றி பார்ப்போம். "கொடைக்கானல் போவது என்பது தற்செயலாக யோசித்த விஷயம்.. திடீரென சனிக்கிழமை மாலை தான் திட்டம் போடப்பட்டது. கொடைக்கானல் செல்ல முடிவு செய்துவிட்ட பின்னர் பேருந்தை தேடினேன். கொடைக்கானலுக்கு போக வத்தலக்குண்டில் இறங்கி மாறிப்போகலாம் என நினைத்தேன். அதற்காக பேருந்தை தேடிய போது, பேருந்துகளில் கட்டணம் பெரிய அளவில் இல்லை.
முதல் நாளான வெள்ளிக்கிழமையே மொத்த ஊரும் சென்னையை விட்டு கிளம்பி போனதால் டிக்கெட் பிரச்சனை வரவில்லை.. வத்தலக்குண்டில் இறங்கிய உடன், தேனியில் இருந்து நண்பர் வரவும், சேர்ந்து பேருந்தில் ஏறி பயணித்தோம். காலை 6.40க்கு வத்தலக்குண்டில் ஏறினால், காலை 8.40க்கு கொடைக்கானல் போய்விட்டோம்.. கொடைக்கானல் மலையில் ஏறும் போதே எந்த ஒரு பனியையும் பார்க்க முடியவில்லை. கீழே எப்படி இருந்ததோ, அதேபோல் தான் மேலேயும் இருந்தது. கொடைக்கானல் மலையில் ஏறி சென்றால், குளிர் பெரிய அளவில் இல்லை..

லேசான குளிர் இருந்தது. வானம் மிகத்தெளிவாக இருந்தது. 400 ரூபாய் கொடுத்தாலே பாதி கொடைக்கானலை சுற்றிக்காட்ட தயார் என்று சுற்றுலா வாகன ஓட்டிகள் அழைத்தார்கள். 800 ரூபாய் கொடுத்தாலே தனி காட்டேஜ் இருப்பதாக கூறி அழைத்தார்கள்.வழக்கமான ஞாயிறாக கொடைக்கானல் இல்லை என்பதை பார்த்த உடன் புரிந்து கொண்டேன்.. கொடைக்கானலில் அன்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளதை அறிந்தேன். சுற்றுலா பயணிகள் வருகை என்பது மிகமிக குறைவாக இருந்து. ஏன் வெறிச்சோடி காணப்பட்டது என்று சொல்லலாம்.. அப்படித்தான் தோன்றியது.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திற்கு வெளியே தள்ளுவண்டி கடையில் சூடான இட்லிகளை தள்ளினோம். இட்லி நன்றாகவே இருந்தது. காலை உணவுக்கு பின்னர் அப்படியே நடந்து மூஞ்சிக்கல் பகுதி வரை சென்றோம்.. மூஞ்சிக்கல் சாலையில் செங்குத்தாக இறங்கும் போது, கொடைக்கானலில் மொத்த வியூவையும் பார்க்க முடியும். கொடைக்கானலில் எல்லா இடங்களிலும் சுற்றிபார்த்த பகுதிகள் என்பது, போகாத இடம் பக்க போக விரும்பினோம். வில்பட்டிக்கு செல்லும் பேருந்தில் ஏறினோம்.
வில்பட்டி பேருந்தில் ஏறி நாயுடு புரம் செல்லும் வரையில் ஏற்றமாகவும், அதன்பிறகு அப்படியே மலையில் பேருந்து செங்குத்தாக ஒரு பள்ளத்தாக்கில் இறங்குவதாக இருந்தது. ஒருவழியாக வில்பட்டி சென்றோம். வந்த பேருந்திலேயே அப்படியே திரும்பவும் போகலாம் என நினைத்தோம்.. அங்கிருந்தவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து உள்ளதாக கூறினார்கள்.. சரி என்று இறங்கி வில்பட்டி கிராமத்தையும், சுற்றியுள்ள இடங்களையும் சுற்றிபார்த்தோம்.

அந்த கிராமத்தை பார்த்த உடனேயே எங்கேயா பார்த்த இடம் மாதிரி உள்ளதே என்று பார்த்தால், விடுதலை படத்தில் சூரி நடித்த காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டது என்பது அந்த பகுதி முழுவதுமே சூரி, விஜய் சேதுபதி சுற்றி வரும் இடம் என்பதும் தெரியவந்தது.. உள்ளே போனால், சீவலப்பேரி பாண்டி, மந்திரப்புன்னகை உள்பட பல படங்கள் வில்பட்டியில் எடுத்ததுதான் என்பது தெரியவந்தது. அங்கு கீழே இறங்கி காட்சி முனைகளை சுற்றி பார்த்தோம். ஊரில்திருவிழாவிற்கு மக்கள் தயாராகி கொண்டிருந்தார்கள். ஊருக்கு வெளியே நான்கு பக்கமும் மலை முகடுகளும், இருந்தன. நடுவில் பள்ளத்தாக்கில் ஊர் இருந்தது. ஊரை நன்றாக சுற்றி பார்த்துவிட்டு, அங்கிருந்த அருவியையும் பார்த்துவிட்டு பேருந்தில் ஏறலாம் என காத்திருந்தால், பேருந்து வராது.. இரண்டு மணி நேரம் என்றார்கள்.. சரி பேருந்து ஏற வேறு எங்கு வாய்ப்பு உள்ளது என்று கேட்டால், ஒரு கிலோமீட்டர் நடந்தால் வில்பட்டி பிரிவு வரும் என்றார்கள்.
நடக்கிறோம்.. நடக்கிறோம்.. 2 கிலோ மீட்டர் செங்குத்தான மலை உச்சியில் நடக்கிறோம். பாதி தூரம் ஏறிய உடனே மூச்சு நின்றுவிடும் வகையில் இருந்தது. ஒரு வழியாக உச்சியில் ஏறினால் வில்பட்டி பிரிவு வந்தது. அங்கு சென்றால், கண்ட காட்சிகள் மறக்க முடியாததாக இருந்தது. மொத்தமாக பனிமூட்டம் நாங்கள் சென்று வந்த வில்பட்டியை மூடியபடி நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்தது. மெல்ல ஏறி வந்து எங்களையும் சுத்தமாக மூடியது. அதன்பிறகு மெல்ல பனி விலகி சென்றது. அந்த காட்சி அற்புதமான அனுபவமாக இருந்தது.
பேருந்து நிலையத்தில் உள்ளூர் மக்கள் நீண்ட நேரம் காத்துக் கிடந்தார்கள். அங்குமே பேருந்துகள் வரவில்லை. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பதால் பேருந்துகள் வரவில்லை.. ஒரு வழியாக ஒரு ஜீப்பை வழிமறித்து ஏராளமான மக்களுடன் பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். மக்கள் சர்வ சாதாரணமாக ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை பேருந்துக்காக காத்திருப்பதாக கூறினார்கள். கொடைக்கானலில் வந்து சேர்ந்த பின்னர், பூங்காவில் சுற்றினோம்.
பின்னர் நட்சத்திர ஏரியை சுற்றிவிட்டு, இறுதியாக விடை பெற்றோம்.. செல்லும் வழியில் விநாயகர் ஊர்வலம் வந்தது. ஒவ்வொரு சிலையாக கரைத்துக் கொண்டிருந்தார்கள். போலீசார் ஏராளமனோர் குவிக்கப்பட்டிருந்தார்கள். எந்த பிரச்சனையும் இல்லாமல் நிகழ்வுகள் நல்ல படியாக நடக்க வேண்டும் என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள். கொடைக்கானல் பயணம் இனிமையாகவே இருந்தது. கிராமத்து சுற்றுலா அனுபவம் புதுமையாக இருந்தது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications