முன்விரோதம்.. நாங்குநேரியில் வீடு புகுந்து தலை துண்டித்து வெடிகுண்டு வீசி இரு பெண்கள் கொலை

Subscribe to Oneindia Tamil

நாங்குநேரி: முன்விரோதம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரியில் வீடு புகுந்து தலையை துண்டித்தும் நாட்டு வெடிகுண்டு வீசியும் இரு பெண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாங்குநேரியில் மறுகால்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர்கள் சண்முகத்தாய், சாந்தி. இவர்கள் வீட்டுக்கு இன்று காலை வந்த மர்மநபர்கள் அவர்களின் தலைகளை அரிவாளால் வெட்டியும் நாட்டு வெடிகுண்டு வீசியும் கொலை செய்து விட்டு தப்பி சென்றுவிட்டனர்.

2 women were murdered in Nellai for Family disputes

இந்த சம்பவத்தில் 8 பேருக்கு மேல் ஈடுபட்டிருக்கலாம் என தெரியவந்தது. தகவலறிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் இந்த கொலை முன்விரோதம் காரணமாக நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜாதி விட்டு ஜாதி காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பு மறு தரப்பை கொலை செய்தது. இதற்கு பழி தீர்க்க பாதிக்கப்பட்ட தரப்பு இருவரை வெட்டி கொலை செய்தது.

இந்த இரண்டாவது கொலை சம்பவத்தில் கைதான கும்பல் தற்போது ஜாமீனில் வெளிவந்ததாகவும் அந்த தரப்பினர் 3ஆவது முறையாக இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

இந்த காதல் விவகாரத்தில் மொத்தம் இதுவரை 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

10 பேர் கொண்ட கும்பல் 20 நாடு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ததாம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+