Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Porunai Museum: 5,300 ஆண்டுக்கு முன் தமிழர் நாகரீகம்.. கண்முன் காட்டும் பொருநை மியூசியம்.. அடேங்கப்பா இவ்ளோ இருக்கா!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் ரூ.56.36 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பனவற்றை விரிவாக பார்க்கலாம்.

5,300 ஆண்டுகளுக்கு முன்னர் உலையில் இட்டு இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தோன்றியது என்பது அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இவற்றினை விளக்கும் வகையில் இரும்பு உருக்குதல் செயல்முறை நேரடிக் காட்சி மற்றும் மாதிரி வடிவில் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Porunai Museum

நெல்லை பொருநை அருங்காட்சியகம்

பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அண்மைக்காலத்தில் அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

என்னென்ன சிறப்புகள் உள்ளன?

பொருநை அருங்காட்சியக வளாகத்தில் அறிமுகக்கூடம், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டடத் தொகுதிகள் 54,296 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டடத் தொகுதிகளும் முற்றம், தாழ்வாரம் போன்றவற்றுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என்ற வகையில் இப்பகுதியின் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடத்தின் முகப்புகளிலும் உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன.

இவற்றுடன் கண்கவர் நீர்த்தடாகம், நிகழ்த்து கலைகளைக் காணும் திறந்தவெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே மரங்கள். குறுஞ்செடிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைளும் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும். இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மை

சிவகளையில் இரும்புப் பயன்பாடு கி.மு.3300-க்கும், ஆதிச்சநல்லூரில் கி.மு.2613-க்கும் கொண்டு சென்றதை அறிவியல் அடிப்படையிலான காலக்கணக்கீடுகள் எடுத்துரைக்கின்றன. எனவே, தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது அறிவியல் துணைகொண்டு நிறுவப்பட்டுள்ளது.

Porunai Museum

என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன?

தமிழ்நாட்டின் தொன்மை மற்றும் வரலாற்றினையும் சிவகளை, ஆதிச்சநல்லூர், துலுக்கர்பட்டி மற்றும் கொற்கை ஆகிய பகுதிகளின் முக்கியத்துவத்தையும் உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும் வகையில் 15 குளிரூட்டப்பட்ட அரங்கில் நிமிட ஒளி-ஒலிக் காட்சிப்படுத்தப்படுகிறது. காட்சி

5300 ஆண்டுகளுக்கு முன்னர் உலையில் இட்டு இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் தோன்றியது என்பது அறிவியல் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இவற்றினை விளக்கும் வகையில் இரும்பு உருக்குதல் செயல்முறை நேரடிக் காட்சி மற்றும் மாதிரி வடிவில் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

5D காட்சிப்படுத்தல்

* சிந்துவெளிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தும் குறியீடுகள், பண்பாட்டுக்கூறுகள், தமிழ் இலக்கியங்கள் காட்டும் காட்சிகள் ஆகியவை ஒப்பீட்டுடன் விளக்கப்பட்டுள்ளன.

* கொற்கைத் துறைமுகத்தில் கடல்வழி வணிகம் சிறப்புற்றிருந்தது. அயல்நாட்டு வணிகர்களுடன் தமிழர்கள் மேற்கொண்ட ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தின் சிறப்பைக் கண்முன்னே கொண்டு வரும்வகையில் இரண்டு கலன்களின் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

* தமிழ் நிலங்களின் தனிச்சிறப்பை உணர்வு பூர்வமாக அனுபவிக்கச் செய்யும் ஓர் பயணமாக, ஐந்திணைகள் ஐந்து பரிமாண வடிவில் (5D) பொதுமக்கள் உவகையுடன் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆற்றங்கரை நாகரிகத்தின் தொல்பொருட்கள்

* சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகங்கள் சேகரிப்பிலிருந்து அலெக்ஸாண்டர் ரீ அவர்களால் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

* கற்கருவிகள், சங்கினாலான பொருட்கள் தயாரித்தல், இரும்பு உருக்குதல் போன்ற அறிவியல்-தொழில்நுட்ப முறைகளும், நீர் மேலாண்மை, வணிகப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளும் பொதுமக்கள் உணர்வு பூர்வமாக அனுபவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

* சிவகளை, ஆதிச்சநல்லூர், துலுக்கர்பட்டி மற்றும் கொற்கை ஆகிய தொல்லியல் தளங்களின் வரைபடங்களும், ஆற்றங்கரை நாகரிகத்தின் தொல்பொருட்களும் அவற்றின் முக்கியத்துவத்தையும், பொருநை தனிச்சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன.

ஓவியங்கள், உயிரூட்டுக் காட்சிகள்,

* பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கைமுறை, பண்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை இங்குள்ள ஓவியங்கள் உயிர்ப்புடன் கண்முன் காட்டுகின்றன.

* தொடுதிரை, மெய்நிகர் காட்சிகள், ஒளி-ஒலி நிகழ்படங்கள், ஆவணப் படங்கள், உயிரூட்டுக் காட்சிகள், மாதிரி வடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் மூலம் தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையையும் தொடர்ச்சியினையும் எதிரொளிக்கும் பொருநை அருங்காட்சியகம் உலகத் தமிழரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிவகளை

சிவகளை தொல்லியல் தளத்தில் 2019-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் ஈமத்தாழிகள், உயர் வெண்கலத்தாலான கலன், இரும்பாலான கருவிகள், படையல் கலன்கள், பலவண்ண மட்கலன்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் என பல்வேறு வகையான தொல்பொருட்களும் கிடைக்கப் பெற்றுள்ளன.

சிவகளை தொல்லியல் அகழாய்வில் ஈமத்தாழி ஒன்றில் சேகரிக்கப்பட்ட உமி நீங்கிய நெல்மணிகளை 2021-ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் மியாமி நகரத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற பீட்டா அனலடிக் ஆய்வுக்கூடம் (Beta Analytics Laboratory) வாயிலாக, காலக் கணக்கீடு செய்ததில், இதன் காலம் கி.மு.1155 என்று கண்டறியப்பட்டுள்ளது. இக்காலக்கணக்கீடு வாயிலாக பொருநை ஆற்றங்கரையில் வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தினர் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் நெல் பயிரிட்டுள்ளனர் என்று அறிவியல் பூர்வமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூரில் 2019 முதல் 2021 வரை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தொல்லியல் துறையால் ஆதிச்சநல்லூரின் வரலாற்றை மறுகட்டமைக்க உதவுகிறது. ஆதிச்சநல்லூரில் இரும்புக் காலத்திற்கு முன்னும் பின்னும் வாழ்ந்த மக்களின் வரலாற்றை வெளிப்படுத்தியுள்ளது. கற்காலத்தைச் சார்ந்த நுண்கற்காலக் கருவிகள் கிடைத்திருப்பதன் மூலம் இங்கு இரும்புக் காலத்திற்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது.

மேலும், முதுமக்கள் தாழிகள், இரும்பாலான கருவிகள், படையல் பானைகள், மட்கலன்கள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் இரும்புக் காலத்தைத் தொடர்ந்து தொடக்க வரலாற்றுக் காலத்திலும் மக்கள் இங்கு வாழ்ந்திருப்பதை, உறுதி செய்கின்றன.

ஆதிச்சநல்லூரில் அன்றைய நீர் மேலாண்மையை எடுத்துரைக்கும் சுடுமண்ணாலான வகையில் 21 எண்ணிக்கை கொண்ட உருளைக்குழாய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கிடைக்கப்பெற்றுள்ள அதிக அளவிலான உயர்தர வெண்கலம் மற்றும் தங்கத்தினாலான பொருட்கள் தமிழ்ச் சமூகத்தின் வளமான பொருளாதாரத்தினையும் சமூக நிலையையும் பிரதிபலிக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+