நெல்லை பிரபல கல்லூரி முதல்வருக்கு டெலிகிராமில் வந்த லிங்க்.. ஆசைகாட்டி மோசம் செய்த கும்பல்!
நெல்லை: தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில், கல்லூரி பெண் முதல்வரிடமே ஒரு கும்பல் பணத்தை சுருட்டிய சம்பவம் நெல்லையில் அரங்கேறி உள்ளது. ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவ தாக டெலிகிராமில் வந்த குறுந்தகவலை நம்பி ரூ.18 லட்சம் பறிகொடுத்துள்ளார் கல்லூரி பெண் முதல்வர். கல்லூரி முதல்வரிடமே விபூதி அடித்த கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை பெருமாள்புரம் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரஜப் பாத்திமா (வயது 61). நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். ரஜப் பாத்திமா டெலிகிராம் பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி, இவரது டெலிகிராம் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.

டெலிகிராமில் வந்த மெசேஜ்
ஆன்லைன் முதலீடு தொடர்பான குறுந்தகவல் வந்திருந்ததால், அதனை அவர் ஓப்பன் செய்து பார்த்துள்ளார். அதில் சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இதனை உண்மை என நம்பி ரஜப் பாத்திமா முதலில் சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்து பார்த்துள்ளார். சொன்னது போலவே அதிலிருந்து சிறிய அளவில் லாபம் கிடைத்திருக்கிறது. இதனால் அவர் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
அதனால், அதிக அளவில் பணத்தை முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசைப்பட்டுள்ளார். இதனால், முதலில் சிறிய தொகையை முதலீடு செய்த ரஜப் பாத்திமா, இரண்டாவது முறையாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். இதுபோன்று ரூ.30 ஆயிரம் என அடுத்தடுத்து முதலீடு செய்து, மொத்தமாக ரூ.17 லட்சத்து 89 ஆயிரத்து 271 முதலீடு செய்துள்ளார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்
இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ததால், எப்போது அதிக பணம் கிடைக்கும் என எதிர்பார்த்து காந்திருந்து கொண்டு இருந்துள்ளார். ஆனால், நாட்கள் தான் சென்தே தவிர, அவருக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. "சரி, லாபம் கிடைக்கவில்லை என்றாலும், முதலீடு செய்த பணத்தையாவது எடுத்துவிடலாம்" என ரூ.18 லட்சத்தை மீண்டும் அக்கவுண்டுக்கு மாற்ற முயற்சி செய்துள்ளார்.
ஆனால், அப்போது முதலீடு செய்த பணத்தையும் அவரால் எடுக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதனையடுத்து சற்றும் யோசிக்காமல், நெல்லை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், மோசடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆன்லைனில் முதலீடு செய்யுமாறு
இதேபோன்று நெல்லை மாவட்டம் பேட்டை அருகே ஒருவரிடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசை காட்டி செல்போனில் பேசிய மர்ம நபர் ரூ.6 லட்சத்தை சுருட்டியுள்ளார். பேட்டை கோடீஸ்வரன் நகரை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி பார்வதி (44). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய நபர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய பார்வதி அந்த நபர் செல்போனில் அனுப்பிய பல்வேறு வங்கி கணக்குகளுக்கு சுமார் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை முதலீடு செய்து இருக்கிறார். ஆனால் அந்த நபர் கூறியபடி எந்த லாபமும் கிடைக்கவில்லை.
வலைவீசி தேடும் போலீஸ்
மாறாக இவர் கொடுத்த பணத்தை கேட்டதற்கும் எந்தவித பதிலும் கூறவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்த பார்வதி, இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.6 லட்சத்தை சுருடிய மோசடி நபரை தேடி வருகிறார்கள்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications