லஞ்சம் வாங்க வீட்டுக்கே போன நகராட்சி ஊழியர்.. சொத்து வரிக்கு அப்ளை செய்த தென்காசி நபர் கொடுத்த ஷாக்
தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே லஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார். புது வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட நிலையில் அதனை கொடுக்க விரும்பாத நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி ஊழியரை கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி குற்றமாகும். ஆனாலும் தமிழகத்தில் அரசு அதிகாரிகள் ஒரு சிலர் லஞ்சம் கேட்டு அடிக்கடி போலீசில் கைதாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மற்ற அதிகாரிகள் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட பின்பும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

ரூ.15 ஆயிரம் லஞ்சம்
அந்த வகையில் நேற்று தென்காசி புளியங்குடி அருகே புதிய வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு:- தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தெற்கு சத்திரத்தை சேர்ந்தவர் காளிராஜன் (வயது 36). இவர் புளியங்குடி அருகே சிவராமு நாடார் 7 ஆம் தெருவில் புதியதாக வீடு ஒன்றை கட்டி வந்தார்.
வீடு கட்டும் பணிகள் முடிந்த நிலையில், வீட்டுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்ய விண்ணப்பித்து இருந்தார். இதையடுத்து நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர் காளிராஜனின் புதிய வீட்டினை அளவீடு செய்தவற்காக வந்துள்ளார். வீட்டை அளவீடு செய்துவிட்டு காளிராஜனை அலுவலகம் வருமாறு கூறிவிட்டு சென்றார்.
அதன்பேரில் நேற்று முன் தினம் அலுவலகம் சென்ற காளிராஜனிடம், புதிய வீட்டுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்து சான்றிதழ் தர வேண்டுமெனில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என காளிராஜன் கூறியிருக்கிறார். இதையடுத்து 15 ஆயிரமாவது கொடுத்தால் தான் சான்றிதழ் தருவதாக அகமது உமர் கூறினார். இதையடுத்து சரி என சொல்லிவிட்டு காளிராஜன் அங்கிருந்து கிளம்பினார்.
கையும், களவுமாக சிக்கினார்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இது தொடர்பாக தென்காசி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் காளிராஜனிடம் ஒரு யோசனை சொல்லியுள்ளனர். அதன்பேரில் நேற்று அகமது உமர் வீட்டில் வந்து பணத்தை வாங்கிக் கொள்வதாக கூறியிருந்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை காளிராஜனிடம் கொடுத்தனர்.
இதையடுத்து நேற்று மீண்டும் வீட்டை அளப்பதாக கூறி வீட்டுக்கு வந்த நகராட்சி வருவாய் உதவியாளர் காளிராஜனிடம் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து காளிராஜன் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பிய ரசாயன தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார். அந்த பணத்தை பெற்ற போது, அதனை அங்கு மறைந்து இருந்து கண்காணித்த அதிகாரிகள் அகமது உமரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதன் பின்னர் அதிகாரிகள் புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் சென்று சோதனை நடத்தினர். சொத்து வரி நிர்ணயம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி அலுவலர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications