ராக்கெட் லாஞ்சர் பறிமுதல் வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜரான ராக்கெட் ராஜா.. நீதிபதி அதிரடி உத்தரவு
தென்காசி: 2009ம் ஆண்டில் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி ராக்கெட் லாஞ்சரை பறிமுதல் செய்த வழக்கில் பனங்காட்டுப்படை கட்சியின் தலைவரான ராக்கெட் ராஜா ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.
பனங்காட்டு படை கட்சியின் தலைவராக இருப்பவர் ராக்கெட் ராஜா. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை, கொலை முயற்சி, ஆயுதம் பதுக்கல் உள்பட பல பிரிவுகளில் அவர் வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார்.
இதில் ஒரு முக்கிய வழக்கு தான் கடந்த 2009ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அதாவது தென்காசி மாவட்டம் சுரண்டையில் காவலரை தாக்கில் வழக்கில் பங்களா சுரண்டை பகுதியை சேர்ந்தவ கோழி அருள் உள்பட 2 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கோழி அருள் உள்பட 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் போலீசார் கோழி அருளிடம் விசாரித்தனர். அப்போது அவர், ‛‛நான் ராக்கெட் ராஜாவின் ஆள்'' எனக்கூறியுள்ளார். ஏற்கனவே ராக்கெட் ராஜா மீது பல வழக்குகள் உள்ள நிலையில் அவரது வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ராக்கெட் ராஜாவின் வீட்டில் இருந்து ராக்கெட் லாஞ்சர் , ஏகே 47 ரக துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய தோட்டாக்கள் இருந்தன. இதனை போலீசார் பறிமுதல் செய்தன. இதில் ராக்கெட் ராஜா மிகவும் பிரபலமானார். இதுதொடர்பாக ராக்கெட் ராஜா மீது ஆயுதம் பதுக்கல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தது. அப்போது விசாரணைக்காக ராக்கெட் ராஜா தனது ஆதரவாளர்களுடன் பல கார்களில் நீதிமன்றத்துக்கு சென்று ஆஜரானார். நீதிபதி ஆனந்தவல்லி வழக்கை விசாரித்தார்.
அப்போது வழக்கு தொடர்பாக ஜுலை 15ம் தேதி தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி ஆனந்தவல்லி உத்தரவிட்டார். இதையடுத்து ராக்கெட் ராஜா நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி காரில் தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டு சென்றார். முன்னதாக ராக்கெட் ராஜாவுக்கு கொலை மிரட்டல் உள்ளது. இதனால் நீதிமன்றத்தை சுற்றி தென்காசி ஏடிஎஸ்பி ரமேஷ், ஆலங்குளம் டிஎஸ்பி பர்னபாஸ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications