விவசாயி எடுத்த சோக முடிவு.. தென்காசி சிவகிரி இன்ஸ்பெக்டர் மீது பாய்ந்த ஆக்ஷன்!
தென்காசி: விசாரணை என்கிற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக கூறி, தென்காசி சிவகிரியில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சிவகிரி காவல் ஆய்வாளர் முரளிதரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
சாத்தான்குளம் காவல் மரண சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியிருந்தது. இனி இது போன்று இன்னொரு கொடூரம் நடக்க கூடாத என் அனைத்து தரப்பினரும் வலியுறுத்தியிருந்தனர். ஆனால், சிவகிரியில் நடந்த விவசாயி தற்கொலை, காவல்துறை மீதான விமர்சனங்களை அதிகரித்திருக்கிறது.

என்ன நடந்தது?
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த 65 வயதான அந்தோனிராஜ் இடப்பிரச்சனை தொடர்பாக விசாரணைக்காக கடந்த 21ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிவகிரி காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார். அங்கு வைத்து, காவலர்கள் அவரது பேரன் முன்பு அந்தோனிராஜை கடுமையான வார்த்தைகளில் திட்டி தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது அவருக்கு கடுமையான மன உளைச்சளை ஏற்படுத்தியிருந்த நிலையில், மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.
மீண்டும் விசாரணைக்கு சென்ற அந்தோனிராஜ், விஷம் குடித்துவிட்டு சென்றதாகவும் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்த அவரை போலீசார் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தென்காசியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போலீசாரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உறவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றிருக்கின்றனர். இதனையடுத்து தற்போது சிவகிரி காவல் ஆய்வாளர் முரளிதரன் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
-
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications