திருநெல்வேலியில் இவ்வளவு சுற்றுலா இடங்கள் இருக்கா! குற்றாலமெல்லாம் இருக்கட்டும்! இப்போ ட்ரெண்டே வேற
திருநெல்வேலி: கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆனால் வழக்கமாக செல்லும் இடங்களைவிட அறியப்படாத இடங்களுக்கு சுற்றுலா செல்வது சிறந்த அனுபவத்தை கொடுக்கும். அந்த வகையில் திருநெல்வேலியில் அறியப்படாத இடங்கள் பல இருக்கின்றன.
வழக்கமாக திருநெல்வேலி என்றால் குற்றாலமும், நெல்லை கோயிலும்தான் நம் நினைவுக்கு வரும் ஆனால், அதைவிட வேறு சில சிறப்புமிக்க இடங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்றன. அதில் முதலாவது அரியகுளம் பறவைகள் சரணாலயம். இந்த பூமியில் எல்லை வகுத்து சுருக்கிக்கொள்வதை போல பறவைகள் தங்களுக்கு எல்லைகளை வகுத்துக்கொள்வதில்லை. இப்படிப்பட்ட பறவைகள் ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வலசைக்கு வருகின்றன.

அப்படி வரும் பறவைகள் தமிழ்நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளில் சில நாட்கள் வரை தங்குகின்றன. அப்படி பறவைகள் தங்க தேர்ந்தெடுத்துள்ள இடம்தான் அரியகுளம் பகுதி. திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பகுதியில் அமைந்து இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை ஸ்பாட் டவ், க்ரீன் சாண்ட்பைப்பர், பிளாக் விங்கிடு ஸ்டில்ட் மற்றும் காமன் கூட் போன்ற அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. அதேபோல கூந்தங்குளம் பறவைகள் சரணாலயமும் தவறவிடக்கூடாத மற்றொரு இடமாகும்.

அதேபோல முக்கியமாக பார்க்க வேண்டிய மற்றொரு இடம் மாஞ்சோலை. இந்த இடம் அரசியல் ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். இது மேற்கு தொடர்ச்சி மலையின் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் எல்லை பகுதயில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் தேயிலைக்கு பிரசித்தி பெற்ற இடம் எனில் அனைவருக்கும் ஊட்டிதான் தெரியும். ஆனால் இந்த மாஞ்சோலையில் விளையும் தேயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தரமானதாகும். அதேபோல இந்த பகுதியில் குதிரைவெட்டி, காக்காச்சி, ஊத்து, கோதையாறு உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும்.
இந்த வரிசையில் தவற விடக்கூடாத மற்றொரு இடம் அகத்தியர் அருவி. திருநெல்வேலி நகரிலிருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அகத்தியர் அருவியில் ஆண்டின் அனைத்து நாட்களிலும் நீர் வரத்து இருக்கும். எனவே எப்போது போனாலும் இங்கு குளிக்கலாம். இந்த அருவியின் மேல் பகுதியில் அகத்தியருக்கு கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த பகுதியில் சொறிமுத்து அய்யனார் கோயிலும் இருக்கிறது. இது தவிர ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் அதாவது தென்காசியில் பண்பொழி எனும் ஊர் இருக்கிறது.

இங்குள்ள திருமலை முத்துக்குமாரசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பொதிகை மலையின் இயற்கை அழகை ரசிக்க வேண்டும். ஆனால் மலையேறி செல்ல முடியாது என்று நினைப்பவர்கள் இந்த கோயிலுக்கு வரலாம். இந்த கோயிலும் ஒரு குன்றின் மீதுதான் அமைந்திருக்கிறது. ஆனாலும் இந்த குன்றில் ஏறுவதற்கு முறையாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே சிரமில்லாமல் ஏறலாம். இந்த கோயிலுக்கு என அமைந்துள்ள குளமும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் இந்த குளத்தில் சங்க காலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குவளை மலர் இன்றளவிலும் பூத்து குலுங்குகிறது.

நெல்லை போனால் மறக்காமல் பார்க்க வேண்டிய மற்றொரு இடம் சுத்தமல்லி அணைக்கட்டு. நெல்லையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அணைக்கட்டு குளிப்பதற்கு மிகவும் ரம்யமான இடமாக இருக்கிறது. இதேபோல அத்திரி மலையும் அதிகம் கவனம் பெறாத சிறப்புமிக்க இடமாகும். நெல்லையிலிருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் அமைந்து இந்த அத்திரி மலையில் அத்திரி மகரிஷி - அனுசுயா தேவி திருக்கோவில் அமைந்திருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோயிலை சுற்றி அரிய மூலிகை செடிகள் பல இருப்பதாக சொல்லப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications