Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரழிச்சிட்டான்.. 10 வருடமாக நெருங்கி பழகி.. கொந்தளித்த இளம்பெண்.. வீட்டு வாசற்படியில் திடீர் தர்ணா

காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

தென்காசி: 10 வருஷமாக நெருங்கி பழகிவிட்டு, திடீரென கல்யாணம் செய்ய மறுத்துவிட்டார் இளைஞர்.. இதனால் அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த இளம்பெண், அந்த காதலனின் வீட்டின் முன் தர்ணா போராட்டம் நடத்தி உள்ளார். தென்காசி மாவட்டத்தில் இந்த பபரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

Recommended Video

    சீரழிச்சிட்டான்.. 10 வருடமாக நெருங்கி பழகி.. கொந்தளித்த இளம்பெண்.. வீட்டு வாசற்படியில் திடீர் தர்ணா

    ஆலங்குளம் அருகே உள்ளது ஐந்தாம்கட்டளை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் செல்வமணி.. 25 வயதாகிறது.. காலேஜ் படித்துள்ளார்.. ஆலங்குளத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்...

    சதீஷ்

    சதீஷ்

    அதே ஊரை சேர்ந்தவர் சதீஷ்.. 27 வயதாகிறது. இருவரும் ஒன்றாகவே ஸ்கூல் படித்தவர்கள்.. 10 வருடமாகவே காதலித்து வருபவர்கள். கடந்த சில மாதங்களாகவே கணவன் மனைவி போல் தனிமையில் சந்தித்து நெருங்கி பழகியும் வந்துள்ளனர்.

    வீடியோ

    வீடியோ

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த செல்வமணி, இந்த 10 வருடங்களாக சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்கள், மெசேஜ்கள், வீடியோக்கள் அத்தனையையும் மகளிர் போலீசில் ஆதாரமாக காட்டி உள்ளார். அவைகளை பார்த்த போலீசாரும் செல்வமணியை கண்டித்ததாக கூறப்படுகிறது... மேலும் 2 நாட்களுக்குள் தினங்களுக்குள் ஊர் பெரியவர்களிடம் பேசி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர்களை அறிவுறுத்தி அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    சமாதானம்

    சமாதானம்

    ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு வந்த செல்வமணி, காரைவிட்டு இறங்கி நேராக சதீஷின் வீட்டிற்கு சென்றார்.. ஆனால், சதீஷின் உறவினர்களோ, செல்வமணியை கடுமையாக தாக்கி வீட்டை விட்டு வெளியே தள்ளியுள்ளனர்... இதனால் ஊரிலுள்ள அக்கம்பக்கத்தினர் கடையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்... சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்..

     மகளிர் போலீஸ்

    மகளிர் போலீஸ்

    இதுகுறித்து முறைப்படி ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திலும் புகார் அளித்தார்.. ஆனால், வாழ்ந்தால் சதீஷுடன்தான் வாழ்வேன் என்று கறாராக சொல்லிவிட்டு, இரவு நேரத்தில் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். இதனால், ஐந்தாம்கட்டளை பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த மகளிர் போலீசார், செல்வமணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்து முறைப்படி புகார் மனு எழுதித்தர செய்தனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+