கொடைக்கானலில் இயற்கையை இப்படி பார்க்க தவமே இருக்க வேண்டும்.. சுற்றுலா பயணிகளுக்கு கிடைத்த தரிசனம்
கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானல், எப்போதுமே பலருக்கும் பிடித்த மிகவும் வசீகரிக்கும் அற்புதமான சுற்றுலா தலம். கடந்த சில நாட்களாக இங்கு நிலவும் பருவநிலை மாற்றங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தந்து வருகிறது. பகல் நேரத்தில் மிதமான வெப்பம், இரவு நேரத்தில் உடலை ஊடுருவும் கடும் குளிர், அவ்வப்போது பெய்யும் சாரல் மழை என இயற்கை ரசிக்க வருவோருக்கு சிறப்பு தரிசனம் போல் இருக்கிறது. இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொடைக்கானலை பொறுத்தவரை சர்வதேச அளவில் புகழ் பெற்ற இயற்கை கோடைவாசல் தலம். இயற்கை அப்படியே இருக்கும் அற்புதமான சுற்றுலா தலம் ஆகும். ஊட்டியை போல் முழுமையாக நகரமயமாக்கலில் இன்னும் முழுமையாக சிக்கவில்லை.. கொடைக்கானலில் இயற்கையின் அதிசயங்கள் பல உள்ளன. அவற்றை ரசிக்கவே பலரும் கொடைக்கானல் வருகிறார்கள். கொடைக்கானலை பொறுத்தவரை மிகவும் அமைதியான, பாதுகாப்பான சுற்றுலா தலம் ஆகும். இங்கு கடந்த சில நாட்களாக காலநிலை மிக அருமையாக இருக்கிறது

அதிகாலையில் நட்சத்திர ஏரி போன்ற இடங்களில் நிலவும் அடர்ந்த பனிமூட்டம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. சூரியனின் முதல் கதிர்கள் ஏரிநீரில் படும்போது, படர்ந்திருந்த வெண்பனி மெல்ல ஆவியாகி மேலெழும்பும் காட்சிகள், சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கத்திற்கு வந்தவிட்டது போன்ற எண்ணத்தை உருவாக்குகிறது.
சும்மாவே கொடைக்கானலில் காலையில் பனி பெய்யும். இப்போது கார்த்திகை மாதம் என்பது பனியில் தான் மொத்த கொடைக்கானலும் இருக்கிறது. மரங்களின் இலைகளிலும், புல்வெளிகளிலும் முத்துக்கள் போலப் பனித்துளிகள் படர்ந்திருக்கும். மழையே பெய்யவில்லை என்றாலும் மழை பெய்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
கோக்கர்ஸ் வாக் பகுதியில் இந்தக் காட்சிகளைக் காணக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் மலைகளின் அழகை ரசிக்கிறார்கள். நேற்று காலையில் மலை முகடுகள் மீது தவழ்ந்து சென்ற மேகக்கூட்டங்களின் காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது. வெண்பஞ்சுக் கூட்டங்கள் போல் மேகங்கள் மலைச்சரிவுகளைத் தழுவி, பள்ளத்தாக்குகளை மறைத்து, கடல் அலைகள் கரையை நோக்கி வருவது போல மெல்ல மெல்ல நகர்ந்து வந்தன.
கொடைக்கானல் மலை உச்சியில் இருந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரியும் பெரியகுளம், வைகை அணை வரையிலான பகுதிகள் முழுவதையும் மேகக்கூட்டம் போர்த்தி மறைத்துவிட்டன. அதனை சுற்றுலா பயணிகள் 'செல்பி' எடுத்தும் புகைப்படங்களை எடுத்தும் மகிழ்ந்தனர் பகலில் லேசான வெப்பம் நிலவினாலும், சாரல் மழையும், மேகங்களின் குளிர்ச்சியும் கடும் குளிரை ஏற்படுத்தியது. கொடைக்கானல் இரவில் இந்த நாட்களில் கேம்ப் பயர் செய்வது அற்புதமாக இரக்கும். நண்பர்களுடன் டூர் போக சிறப்பான கிளைமேட் நிலவுகிறது. ஹனிமூன் தம்பதிகள் பலரையும் கொடைக்கானலில் பார்க்க முடிந்தது.

நாளை ஞாயிறு என்பதால், இன்றே ஏராளமானோர் கொடைக்கானலில் குவிந்துள்ளனர். சனிக்கிழமை இரவும், ஞாயிறு பகலும் கொடைக்கானலில் இருக்க வேண்டும் என்று விரும்புவோர் பலர் இருக்கிறார்கள். இப்போது கொடைக்கானல் சென்றால், காலநிலை மட்டும் இயற்கையின் அற்புதமான தரிசனத்தையும் காணவாய்ப்பு கிடைக்கும்.
96 படத்தில் வரும் பாடல் வரியான "நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்.. கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்.. இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா.. எதிர் காணும் யாவுமே தீண்டத் தூண்டும் அழகா.." இப்படியான ஒரு அனுபவம் கொடைக்கானல் சென்றவர்களுக்கு இப்போது கிடைத்துள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications