Tour: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருத்தலம்- குறைவான செலவில் எளிதாக செல்லலாமே- எப்படி?
சென்னை: திண்டுக்கல் அல்லது திருச்சியில் இருந்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருத்தலத்துக்கு செல்வது என்பது மேலோட்டமாக பார்த்தால் அவ்வளவு தொலைவா? என தோன்றும்.. ஆனால் மிக குறைவான கட்டணத்திலேயே திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து திரும்புவதற்கான சில டிப்ஸ்கள் இங்கே தரப்படுகின்றன.
நீங்கள் திண்டுக்கல் அல்லது திருச்சியில் இருந்து புறப்படுகிறவர்கள் எனில் இந்த பயணத் திட்டத்தை பரிசீலனை செய்து பார்க்கலாம்.

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5 மணிக்கு 16868 - Dindigul Villupuram Intercity Express (Un Reserved) ரயில் புறப்படுகிறது. சற்று முன்னதாகவே திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தாலே இருக்கைகள் கிடைக்கும்
திண்டுக்கல்லில் இருந்து திருச்சி செல்ல ரூ145 கட்டணம். திருச்சி ரயில் நிலையத்தை காலை 6.35-க்கு சென்றடையும்.
திருச்சியில் இருந்து திருநள்ளாறு: வேறு எங்குமே செல்ல வேண்டியது இல்லை. திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு 06490/Tiruchchirappalli - Karaikal Passenger (UnReserved) புறப்படுகிறது. நடைமேடைகளை மாறினாலே போதும். ரயில் நமக்காக காத்திருக்கும். பயண கட்டணம் ரூ100. காலை 10.45 மணிக்கு காரைக்கால் ரயில் நிலையத்தை சென்றடையலாம்.
காரைக்கால் டூ திருநள்ளாறு: காரைக்காலில் இருந்து 7 கிமீ தொலைவில்தான் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருத்தலம் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து ஏராளமான பேருந்துகள் திருநள்ளாறு கோவிலுக்கே செல்கின்றன. திருநள்ளாறில் முதலில் நளதீர்த்தத்தில் நல்லெண்ணெய், சீயக்காய் தேய்த்து குளித்து எழுந்து பின்னர் சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.
நீங்கள் திருநள்ளாறு திருத்தலத்துக்கு சென்று வழிபாடு செய்துவிட்டு சில மணிநேரங்களிலேயே வந்த வேகத்திலேயே புறப்பட்டும் விடலாம்.
காரைக்கால்- திருச்சி: காரைக்கால் ரயில் நிலையத்தில் இருந்து 06739/Karaikal - Tiruchchirappalli DEMU பிற்பகல் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு திருச்சியை வந்தடையும். (இந்த ரயில் சேவை சில நேரங்களில் மாற்றி மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் நீங்கள் புறப்படும் நாளில் ரயில் சேவை குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதும் நன்று) இந்த DEMU-ல் கட்டணம் ரூ65.
இந்த ரயிலை விட்டால் கூட கவலையில்லை. மாலை 4.30 மணிக்கு 16187 - Ernakulam Jn. Express ரயில் இருக்கிறது. இந்த ரயில் இரவு 7.50 மணிக்கு திருச்சி ரயில் நிலையம் வந்தடையும். இந்த ரயிலில் பயணக் கட்டணம் ரூ145.
திண்டுக்கல் செல்ல வேண்டிய பயணிகளுக்கு மீண்டும் காத்திருக்கிறது அதே 16867 - Dindigul Intercity Express (Un Reserved) ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் காத்திருக்கும். இந்த ரயில் இரவு 8.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல் ரயில் நிலையத்தை இரவு 10.15 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் பயண கட்டணம் ரூ145.
ஆலய தரிசனத்துக்காக அரசு நமக்கு ஏற்பாடு செய்துள்ள இந்திய ரயில் சேவையை அழகாக பயன்படுத்திக் கொண்டு நலமுடன் சென்று திரும்புவோமே!
குறிப்பு: திருச்சி- காரைக்கால் ரயில் வழித்தடமானது காவிரி டெல்டா மாவட்டங்களின் வழியாகவே பயணிக்கிறது. காவிரி டெல்டாவின் பல ரயில் நிலையங்களில் நின்றும் செல்கின்றன. இதனால் காவிரி டெல்டா மாவட்ட மக்களுக்கும் இந்த பயண திட்டம் பயனுள்ளதாகவே இருக்கும்.)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications