தென்னிந்தியாவில் உள்ள சிறந்த கடற்கரைகள் எது தெரியுமா? லிஸ்ட் இதோ.. விசிட் அடிக்க நீங்க ரெடியா!
சென்னை: சம்மர் தொடங்கிவிட்டது, அக்னி வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலிருந்து தப்பிக்க எங்காவது ஜில் ஸ்பாட்டுக்கு போக வேண்டும் என்று தோன்றுகிறதா? இருக்கவே இருக்கிறது தென்னிந்தியாவின் 12 சிறப்பு வாய்ந்த கடற்கரைகள். இந்த பீச்கள் நிச்சயம் சிறந்த சுற்றுலா அனுவபவத்தை கொடுக்கும்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது மெரினா கடற்கரைதான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான இங்கு சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. கலங்கரை விளக்கம், சாந்தோம் சர்ச், திராவிட இயக்க மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர்களின் கல்லறை என டைம் பாஸ்க்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. இந்த கடற்கரை நீளமாக இருப்பதாலும், காவலுக்கு போலீஸார் எப்போதும் இருப்பதாலும் மிகவும் பாதுகாப்பான கடற்கரையாக இது விளங்குகிறது.

அதேபோல இதற்கு அடுத்து உள்ள கடற்கரை தனுஷ் கோடி கடற்கரையாகும். இந்தியாவின் தென்கோடி முனைகளில் தனுஷ் கோடியும் ஒன்று. அலைகளே இல்லாத கடல் ஒரு நிசப்தத்தை உண்டாக்கும். இங்கு கடல் மட்டுமல்லாது பாம்பன் பாலம், ராமநாதசுவாமி திருக்கோயில், அக்னி தீர்த்தம், அன்னை இந்திரா காந்தி சாலை பாலம், ஐந்து தலை அனுமன் கோவில், கந்தமதன பர்வதம் அரியமான் கடற்கரை ஆகியவையும் சுற்றிப்பார்க்க ஏற்ற இடங்களாலும். மற்ற கடற்கரையிலிருந்து தனுஷ் கோடி நிச்சயம் வேறுபட்டிருக்கும்.
இதற்கு அடுத்து உள்ள இடம் கர்நாடக மாநிலத்தின் கோகர்னாவில் உள்ள ஓம் கடற்கரையாகும். இந்த கடற்கரை தமிழ்நாட்டின் இரண்டு கடற்கரைகள் போல அல்லாமல் குளிர்ச்சியாக இருக்கும். எனவே சம்மருக்கு ஜில்லென்று இருக்க விரும்புவோர் இந்த பீச்சுக்கு விசிட் அடிக்கலாம். வடகனரா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கடற்கரை இயற்கையில் ஓம் வடிவத்தில் அமைந்திருப்பதால் இதற்கு ஓம் பீச் என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. இங்கிருந்து சூரிய அஸ்தமனத்தை காண நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டடினத்தில் அமைந்துள்ள ருசிகொண்டா பீச்தான். ஆந்திராவின் மிக பிரபலமான சுற்றுலா தலமாக இந்த கடற்கரை இருக்கிறது. விசாகப்பட்டினத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள் இந்த பீச்சில் நீச்சலடிப்பதற்கு அனுமதி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டின் சிறந்த கடற்கரைகளான மெரினா மற்றும் ராமேஸ்வர் கடலில் நீச்சலடிக்க அனுமதி கிடையாது.

ருசிகொண்டா கடற்கரையை போல மிகவும் பிரபலமான மற்றொரு கடற்கரை கோவாவின் கலங்குட் கடற்கரையாகும். இந்த பீச்சை பார்ப்பதற்கு ரஷ்யா மற்றும் பிரிட்டனிலிருந்து ஏராளமான சுற்றுல பயணிகள் வந்து குவிந்துள்ளனர். இங்கு கிடைக்கும் கடல் உணவுகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். அதேபோல இந்த பகுதியில் உள்ள மற்ற இடங்களையும் சுற்றி பார்க்க பைக்குகள் வாடகைக்கு கிடைக்கின்றன. இதுபோன்ற பல்வேறு வசதிகள் இருப்பதால் சுற்றுலா பயணிகளை இந்த பீச் அதிக அளவில் ஈர்க்கிறது.
இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது, அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள கோர்பின் கோவ் கடற்கரையாகும். நீர் விளையாட்டுகளுக்கு இது பெயர் பெற்று இருப்பதால் கோடைக்காலங்களில் இந்த கடற்கரைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் வருகை தருகின்றனர். இது மட்டுமல்லாது ஆழ்கடல் நீந்துதல், பாம்பு தீவு, செல்லுலார் ஜெயில் போன்றவை இந்த கடற்கரையை நோக்கி சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. வாழ்வில் ஒரு முறையாவது இந்த கோர்பின் கோவ் பீச்சுக்கு சென்றுவிட வேண்டும்.
இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது கர்நாடகாவின் கும்தா கடற்கரையாகும். இது பசுமைக்கு மிகவும் பெயர்பெற்றதாகும். இந்த கடற்கரையை சுற்றியிருக்கும் பாறைகள் மிகவும் பசுமையாக இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு புதிய அனுபவத்தை தருகிறது. மட்டுமல்லாது இங்குள்ள சிறிய மலைகள் மீது டிரெக்கிங்கும் செய்ய முடியும். இந்த பகுதியில் ஹெவன் பீச், ஸ்மால் ஹெர்வர் பீச், மிஸ்டரி குகை கடற்கரை, மாங்கோடுலு பீச் மற்றும் வண்ணல்லி கடற்கரை ஆகியவையும் ரசிக்க சிறந்த இடமாகும்.
அதேபோல கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள செராய் கடற்கரையும் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த கடற்கரைகளில் ஒன்றாகும். கொச்சியிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் இந்த கடற்கரை அமைந்திருக்கிறது. இங்குள் ரெசார்ட்டுகள், பாராகிளைடிங் பயிற்சி தளம் ஆகியவை சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. அதேபோல இந்த கடலில் அலைகள் குறைவாக இருப்பதால் நீச்சலடிக்க ஏற்ற இடமாகவும் இருக்கிறது. மட்டுமல்லாது இந்த கடலில் அடிக்கடி டால்பின்களையும் பார்க்க முடியும்.
செராய் பீச்சை போலவே கேரளாவின் காசர்கோடு பகுதியில் அமைந்துள்ள பேக்கல் கடற்கரையும் சிறந்த சுற்றுலா தலமாகும். இந்த கடற்கரையில் உள்ள பேக்கல் கோட்டையிலிருந்து சூரியனின் மறைவை பார்க்கும் போது அது வாழ்க்கையில் மறக்க முடியாத தருனமாக இருக்கும். அதேபோல இந்த பகுதியில் திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட மசூதி ஒன்றும் இன்னும் அந்த பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதற்கடுத்து ஆந்திராவின் ராமகிருஷ்ணா கடற்கரை, கேரளாவின் பூவாறு கடற்கரை, கர்நாடகாவின் தேவ்பாக் கடற்கரை ஆகியவை தென்னிந்தியாவில் நிச்சயம் பார்க்க வேண்டிய கடற்கரைகளாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications