Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகர் மாவட்டத்துல 'டக்கரா' இவ்வளவு இடம் இருக்கா! சம்மருக்கு டென்ட் அடிக்க ஏற்ற ஸ்பாட் இதுதான்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சம்மர் ஹாலிடேவை நல்லா சூப்பரா என்ஜாய் பண்ணனும். ஆனால் கூட்ட நெரிசல், பிலாஸ்டிக் குப்பைகள் இல்லாத இடத்திற்கு போக வேண்டும் எனில் நீங்கள் தாராளமாய் விருதுநகரை தேர்வு செய்யலாம். இந்த மாவட்டத்தில் எல்லோரும் போகும் இடங்களை தாண்டி அதிக கவனம் பெறாத ஆனால் சிறப்பு வாய்ந்த பல்வேறு இடங்கள் இருக்கிறது.

பொதுவாக விருதுநகர் என்றாலே நமக்கு உடனே நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசுதான். அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும் உடனடியாக நினைவுக்கு வரலாம். ஆனால் அதையும் தாண்டி சில இடங்கள் இருக்கின்றன. சஞ்சீவி மலை, பிளவாக்கல் அணை, சதுரகிரி மலை கோயில், அய்யனார் அருவி, செண்பகத்தோப்பு அணில் சரணாலயம், வடபத்ரசாயி கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருச்சுழி பூமிநாதர் சுவாமி திருக்கோயில், ஸ்ரீரமண மகரிஷி ஆசிரமம், பள்ளிமடம், குகன்பாறை போன்ற இடங்கள் சுற்றி பார்க்க சூப்பரான இடங்களாகும். அதேபோல காசு கடை பஜார் சந்தைகள் ஒட்டுமொத்த விருதுநகரின் அத்தனை தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்களை குவித்து வைத்திருக்கும்.

Tour: Unmissable Tourist Places in Virudhunagar

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பொதுவாக நாம் எல்லோருக்கும் தெரிந்த இடம்தான். இந்தியாவில் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டபோது அந்தந்த மாநிலத்திற்கு என ஒரு முத்திரை தேர்ந்தெடுக்கப்பட்டது. அப்படியாக தமிழ்நாட்டுக்கு என தேர்ந்தெடுக்கப்பட்ட முத்திரைதான் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம். சுமார் கி.பி 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை கம்பீரம் குறையாமல் நிலைத்து நிற்கிறது.

இன்றும் அந்த கோயிலின் ஓவியங்கள், சுவர்களை தொட்டு பார்த்தால் அதில் கசியும் ஈரம் பழந்தமிழரின் மனம் வீசும். அந்த அளவுக்கு கோயில் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த கோயில் எந்த அளவுக்கு சிறப்புமிக்கதோ அதைவிட சிறப்புமிக்கதுதான் இந்த சஞ்சீவி மலை. புராண கதைகளில் இதற்கு சஞ்சீவி மலை என்று பெயர் இருந்தாலும் தமிழர்களை பொறுத்த அளவில் இது சிறுமலை என்றே அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான காலநிலை நிலவுவதால் இங்கு காட்டு உயிரினங்கள் நிலைத்து வாழ்கின்றன.

Tour: Unmissable Tourist Places in Virudhunagar

ஆண்டாள் கோயில் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது எனில் அதற்கு முன்னர் அதாவது 5ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதுதான் சிலப்பதிகாரம். இந்த சிலப்பதிகாரத்தில் சிறுமலை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த மலைதான் இது. மேற்குறிப்பிட்டதைப்போல சீரான சீதோஷ்ண நிலை காரணமாக பல்வேறு மூலிகை செடிகள் இங்கு செழித்து வளர்கின்றன. சிறுமலையானது பல்வேறு குன்றுகளை உள்ளடக்கிய மலையாகும். எனவே சில பகுதிகளில் சிறு கோயில்கள் உள்ளன. இது மலையின் ரம்யத்தையும், சமவெளியின் பேரழகையும் பார்க்க ஏற்ற இடமாகும்.

அதேபோல மற்றொரு முக்கியமான இடம் பிளவக்கல் அணை. கடந்த 2002ம் ஆண்டு வெறும் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட இந்த அணை தற்போது வரை கம்பீரமாக காட்சியளிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை விருதுநகரிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. இங்கு படகு சவாரியும், குழந்தைகள் பூங்காவும் அமைந்திருப்பதால் அமைதியாக பொழுதை போக்க ஏற்ற இடமாக இருக்கிறது.

Tour: Unmissable Tourist Places in Virudhunagar

இந்த மாவட்த்தின் மற்றொரு பிரசித்திபெற்ற இடம் சதுரகிரி மலை கோயில். இந்த மலையின் மீது கோயில் அமைந்திருந்தாலும் இறை நம்பிக்கையில் நாட்டம் இல்லாதவர்கள் கூட இந்த இடத்திற்கு வந்து மன அமைதி பெறலாம். ஆனால் வனத்துறையினரின் அறிவுறுத்தலை தவறாது கேட்டு நடக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் இது அமைந்திருப்பதால் இங்கு மூலிகை செடிகள் அதிகமாக வளர்ந்திருக்கிறது. மற்ற இடங்களை காட்டிலும் இந்த இடத்தில் அதிக அளவு மூலிகை செடிகள் வளர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

பிரதான பாதையை விட்டு விலகி சற்று கவனக்குறைவாக வேறு ஒரு பாதைக்கு சென்றுவிட்டால் மூலிகையின் வாசம் நம்மை குழப்பிவிடும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். எனவேதான் வனத்துறையினரின் அறிவுரையின்படி கோயிலுக்கு சென்று வரவேண்டும். மலையின் மேலே மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் ஆகியவை அமைந்திருக்கின்றன. சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே மலையேற அனுமதி இருப்பதால் இறை நம்பிக்கை கொண்டவர்களை தொந்தரவு செய்யாது சுற்றுலா பயணிகள் மலையேற வேண்டும்.

Tour: Unmissable Tourist Places in Virudhunagar

இந்த மாவட்டத்தின் மற்றொரு சிறப்புமிக்க இடம் அய்யனார் அருவி. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இந்த அருவி அமைந்திருக்கிறது. பொதுவாக இந்த அருவிக்கு வெளியூர் ஆட்களைவிட உள்ளூர் மக்களும் அதிகம் வருவார்கள். எனவே கூட்டம் குறைவாகதான். இருக்கும். காட்டுக்குள் அமைந்திருக்கும் இந்த அருவி காட்டுயிர் புகைப்பட கலைஞர்களுக்கு ஏற்ற இடமாகும். அதேபோல இங்கு தண்ணீர் குடிக்க குரங்குகள் தொடங்கி யானைகள் வரை அனைத்து உயிரினங்களும் வரும். அமைதியை விரும்புவோர் இந்த இடங்களுக்கு சுற்றுலா போகலாம்.

அதேபோல செண்பகத்தோப்பு அணில் சரணாலயம், வடபத்ரசாயி கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருச்சுழி பூமிநாதர் சுவாமி திருக்கோயில், ஸ்ரீரமண மகரிஷி ஆசிரமம், பள்ளிமடம், குகன்பாறை போன்ற இடங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். இதில் பள்ளிமடம் சுந்தரபாண்டிய ஈசுவரம் பள்ளிப்படைக் கோயில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும். சமணர் காலத்திலிருந்து இயங்கி வந்த பள்ளி இடிக்கப்பட்டது அதையொட்டி இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+