குட் நியூஸ் மக்களே.. ஊட்டி போறீங்களா?.. இனி தொட்டபெட்டாவுக்கும் போகலாம்.. வந்தாச்சு அனுமதி
ஊட்டி: நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டாவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்ததால் தொட்டபெட்டா காட்சிமுனைக்குச் செல்ல பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதால் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் என்றாலே அதன் குளுகுளு காலநிலையும், எழில் கொஞ்சும் இயற்கையும்தான் அனைவருக்கும் நியாபகம் வரும். சர்வதேச சுற்றுலாத் தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்துக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலாவுக்காக வந்து செல்கின்றனர்.

குறிப்பாக ஏப்ரல், மே உள்ளிட்ட சீசன் காலங்களில் சமவெளிப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிப்பதற்காகவும், கோடை விடுமுறையை ஜாலியாக கழிப்பதற்காகவும் ஏராளமான மக்கள் இங்கு வருகின்றனர். கோடை சீசன் என்று மட்டுமல்லாமல் தொடர் விடுமுறை, பண்டிகை காலங்கள் என அனைத்து நாள்களிலுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை இங்கு குறையாமல் இருக்கும்.
நீலகிரி மாவட்டத்தின் மற்றொரு சிறப்பு மலை ரயில் சேவை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899ம் ஆண்டு இந்த மலை ரயில் சேவை துவங்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனேஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமாகவும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் இந்த மலை ரயிலில் இருந்து மலைகள், அடர்ந்த வனப் பகுதிகள், அருவிகள் என இயற்கைக் காட்சிகளைக் கண்டவாறே பயணம் மேற்கொள்ளும் அலாதியான அனுபவம் கிடைக்கும்.
ஊட்டி வரும் சுற்றுலாப் பணிகள் இங்குள்ள உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதை மிகவும் விரும்புகின்றனர். குறிப்பாக, தொட்டபெட்டா காட்சிமுனையை பார்ப்பதற்கென்ற வரும் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் உள்ளனர். கடும் குளிரும், மேகங்கள் உரசி செல்லும் பகுதியாகவும், சுற்றிலும் பச்சைப் போர்வை போர்த்தியது போன்ற எழில் கொஞ்சும் பகுதியாக தொட்டபெட்டா உள்ளது.
தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரம் தொட்டபெட்டா மலைச்சிகரம். இதனைக் கண்டு ரசிக்க நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இந்நிலையில், தொட்டபெட்டாவுக்கு செல்லும் சாலையில் ஃபாஸ்ட் ஸ்டேக் நுழைவுக் கட்டண சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த சாலையின் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஃபாஸ்ட் ஸ்டேக் சோதனைச் சாவடியை வேறு பகுதிக்கு மாற்றி அமைக்கும் பணிகள் மற்றும் சோதனைச் சாவடியில் தரையின்கீழ் பகுதியில் கேபிள் ஒயா்கள் அமைக்கும் பணிகள், சாலையில் இண்டா்லாக் கற்கள் பதிக்கும் பணிகள் ஆகியவை நடைபெற்று வந்தன.
இதனால், தொட்டபெட்டா காட்சி முனைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூடப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் அனைத்துப் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, கடந்த 5 நாட்களுக்குப் பிறகு தொட்டபெட்டா காட்சி முனைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications