திருச்சியில் பெரியார் சிலைக்கு காவி சாயம்.. போலீஸில் புகார்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு காவி வண்ணம் பூசி அவமரியாதை செய்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. சிலை மீது காவி வர்ணம் ஊற்றியுள்ளனர்.

மேலும் அந்த மர்ம நபர்கள் காலணியையும் வீசி அவமரியாதை செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. பெரியாலை சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். இது போல் பெரியார் சிலைக்கு கருப்பு மை பூசுவது, காவி சாயம் பூசுவது, சிலையை சேதப்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications