நம்ம மதுரை வைகை ஆற்றின் பிறப்பிடத்தை பார்த்திருக்கீங்களா? புலிகள் சரணாலயமான வருசநாடு! சொர்க்க பூமி!
சென்னை: தமிழகம் கேரளா எல்லையில் இருந்த வைகையோட பிறப்பிடம் எங்கிருக்கிறது தெரியுமா? அடர்ந்த காட்டுப் பகுதியில்தான்! அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
இதுகுறித்து மேகமலைக்காதலன் என்ற எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: வாழ்க்கைல நீண்ட நாள் கனவு ஒன்னு எல்லாருக்கும் இருக்கும் அப்படி ஒரு கனவு தான் எனக்கு வைகை ஆத்தோட மூலத்த பாக்கணும்னு. அப்பிடி ஒரு interesting ட்ரிப் பத்தி தான் நான் இன்னிக்கி உங்ககிட்ட ஷேர் பண்றேன். வைகையோட பிறப்பிடம்னு சொல்ற வருசநாடு வெள்ளிமலைக்கு போனது.

நான் போனது 2018 வருஷம் ஜூலை மாசத்துல. அப்பத்தான் மழை ஆரம்பிச்சு இருந்தது. நம்ம ஒரு forest க்குள்ள போறதுக்கு, முன்னாடியே permission லெட்டர் வாங்கணும். அப்போ அது reserve forest தான். அந்த லெட்டர் காமிச்சா தான் மஞ்சனூத்து செக் போஸ்ட்ல விடுவாங்க.
Place : varushanadu, kadamalaikundu
இப்போ யாரும் போக முடியாது ஏன்னா புலிகள் சரணாலயமா ஆக்கிட்டாங்க. அந்த செக் போஸ்ட் தாண்டி உள்ள போன கொஞ்ச தூரம் முழுசா காடு. சின்ன சின்ன கிராமம வருது , அரசரடி, பொம்மராஜபுரம், இந்திரா நகர் அப்பிடின்னு. காட்டுக்குள்ள 1960ல அரசாங்கமே விவசாயம் பண்றதுக்கு மக்களை குடி அமைத்திருக்காங்க.

அங்க அங்க ஏலக்காய், இலவம்பஞ்சு விவசாயம் பண்ணாங்க. அதெல்லாம் தாண்டி போனா நல்ல காடு, வருஷத்துல ஒன்பது மாசம் அங்க மழை பெய்யுமாம். காட்டுக்குள்ள சலசலத்து வைகை ஆறு ஓடுது. தண்ணி பாத்தீங்கன்னா அவ்ளோ சுத்தம். நம்ம மதுரைல ஓடற வைகையா இதுன்னு ஆச்சரிய பட்டு போவீங்க.
போற வழில நிறைய வனவிலங்குகளை சர்வ சாதாரணமா பாக்கலாம். குறிப்பாக யானை நிறைய பாக்கலாம், அப்புறம் மான் முயல் கருமந்தி ( lion tailed macaque). இந்த இடத்தோட end point அப்பிடின்னா வெள்ளிமலை முருகன் கோவில். காட்டுக்குள்ள அப்படி ஒரு அழகான முருகன் கோவில். எஸ்டேட்ல வேல பாக்குறவங்களுக்கு கட்டுனது. அந்த கோவில் பக்கத்துல தான் வைகையோட மூல ஸ்தானம் இருக்கு.

வைகை உற்பத்தி ஆகி வர்ற இடத்தை பாத்த ஒரு சந்தோஷம் இருக்கே அத வார்த்தையால சொல்ல முடியாது. வாழ்க்கைல கடவுள் எவ்வளவோ கஷ்டம் குடுத்தாலும் இந்த மாதிரி இடங்களுக்கு போறப்ப கிடைக்கிற மன அமைதி கோடி ரூபா குடுத்தாலும் வரவே வராது. இவ்வாறு மேகமலைக் காதலன் என்ற நெட்டிசன், தனது பயணத்தை வீடியோ, புகைப்படங்களாக பதிவிட்டுள்ளார்.
இந்த வருசநாடு, மலைகுண்டு- மயிலாடும்பாறை இடையே உள்ளது. இது தமிழக- கேரள எல்லையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் ஒரு பகுதி. இது மேகமலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கோடையிலும் கொட்டும் அருவிகள்.. தென் மாவட்ட டூரிஸ்ட்கள் மிஸ் பண்ணக்கூடாத ஜில் ஸ்பாட்ஸ் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications