சென்னையில் ‘வாட்டர் மெட்ரோ’.. நேப்பியர் பாலம்-கோவளம் இடையே மிதக்கலாம்.. சல்லுன்னு பறக்கலாம்
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நேப்பியர் பாலத்திலிருந்து கோவளம் வரை படகு போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கான (வாட்டர் மெட்ரோ) முதல்கட்ட ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது.வாட்டர் மெட்ரோவை சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், பொது போக்குவரத்திற்கு செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. படகு நிலையங்கள், பணிமனைகளுக்கான இடங்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தரையில் ஓடும் மெட்ரோ ரயில்களை போன்று அதிநவீன வசதிகளுடன் தண்ணீரில் மிதந்து செல்லும் போக்குவரத்தின் பெயர் வாட்டர் மெட்ரோ. அதாவது நீர் மெட்ரோ.. இந்த வாட்டர் மெட்ரோ, முழுமையான தண்ணீர் தேசமான கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கொச்சி உயர்நீதிமன்றம் உட்பட பல்வேறு வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.

சென்னையில் வாட்டர் மெட்ரோ ஏன்
இதேபோன்று, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தவும் 'வாட்டர் மெட்ரோ' திட்டம் கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. கொச்சினை பொறுத்தவரை தண்ணீரை கடந்து தான் செல்ல முடியும். அதாவது தண்ணீர் தேசமாகவும், தீவுப்பகுதி போல் இருப்பதாலும், அங்கு வாட்டர் மெட்ரோவில் போவது தான் எளிது. அதேநேரம் பாலங்களும் உள்ளன. எனினும் நடைமுறையில் வாட்டர் மெட்ரோவே அவர்களுக்கு எளிதானதாக இருக்கிறது.
புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள்
அதேநேரம் சென்னையை பொறுத்தவரை தீவு போல் கிடையாது.. சாலை வசதிகள் நன்கு உள்ளன. ஆனால் சென்னையில் தற்போது உள்ள சாலை வசதிகள் கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, காமராஜர் சாலை, போன்றவை போதுமானதாக இல்லை.. மெரினா, பெசன்ட் நகர், கோவளம், முட்டுக்காடு, மகாபலிபுரம் உள்பட புகழ் பெற்ற இடங்கள் கடற்கரையை ஓட்டித்தான் உள்ளன. மிகமிக மக்கள் அடர்த்தி உள்ள பகுதியாக சென்னையின் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் உள்ளன.
மக்கள் அடர்த்தி அதிகம்
ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள ஓஎம்ஆர் சாலையும் அருகே தான் உள்ளது.இதனால் வாகன நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. அண்ணா சதுக்கத்தில் இருந்து கோவளம் செல்ல நீண்ட நேரம் ஆகும். அந்த அளவிற்கு நெரிசலான சாலையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, மெரினா, பெசன்ட் நகர், கோவளம் வரை உள்ள கடற்கரைகள் சென்னையில் புகழ் பெற்றவை. எனவே அங்கு சுற்றுலா மேம்பாட்டிற்காகவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும், வாட்டர் மெட்ரோவை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
எப்படி இருக்கும்
முதல் கட்டமாக நேப்பியர் பாலத்திலிருந்து கோவளம் வரை படகு போக்குவரத்து கொண்டு வரப்பட உள்ளது. படகு நிலையங்கள், பணிமனைகளுக்கான இடங்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கான பணிகளில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம், நீர்வள ஆதாரத்துறை மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றி வருகின்றன.
நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரை
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கொச்சியில் இருப்பது போன்று 'வாட்டர் மெட்ரோ' ரயிலைப் போலவே, சென்னையில் நேப்பியர் பாலத்திலிருந்து கோவளம் வரை 53 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் மெட்ரோவை இயக்க திட்டமிட்டிருக்கிறோம். நீர் மெட்ரோவை உருவாக்க கூவம் (நேப்பியர் பாலம்) மற்றும் கோவளம் இடையேயான பக்கிங்காம் கால்வாயை முதலில் மீட்டெடுத்து தூர்வார வேண்டியதிருக்கிறது. கால்வாயை மீட்டெடுப்பதற்கும் நீர் மெட்ரோவை செயல்படுத்துவதற்கும் ரூ.3 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும். நிதி ஆதாரம் விரைவில் முடிவு செய்யப்படும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் நகரத்தின் நிலப்பரப்பில் பெரிய மாற்றம் ஏற்படும்.
10 நீர்வழிப்பாதைகள்
இது தொடர்பான முன்மொழிவு அரசுக்கு விரைவில் அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து, நீர்வள ஆதாரத்துறை ஒரு ஆண்டுக்குள் விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பார்கள். இதற்கான முதல்கட்ட ஆய்வுப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மாநிலத்தில் 10 நீர்வழிகளை அடையாளம் காண அரசு திட்டமிட்டிருக்கிறது" இவ்வாறு கூறினார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications