கொடைக்கானல் சுற்றுலா வந்த பெங்களூர் பிரபல ஐடி நிறுவன பெண் ஊழியர்கள்.. குணா குகையில் நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் என்ஜியர்களாக பணியாற்றும் சுப்ரியா உள்பட 4 பேர் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ஒவ்வொரு சுற்றுலா இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். குணா குகை பகுதியை அவர்கள் கண்டு ரசித்து கொண்டிருந்தனர். அப்போது சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று சுப்ரியா வைத்திருந்த கைப்பையை பறிக்க முயன்றது. சுதாரித்துக் கொண்ட அவர், கைப்பையை கெட்டியாக பிடித்தார். இதனால் கோபம் அடைந்த குரங்கு என்ன செய்தது தெரியுமா?

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு ஒவ்வொரு வார இறுதியிலும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கொடைக்கானலை பொறுத்தவரை ஊட்டியைவிட இயற்கை அப்படியே இருக்கும் ஊர் ஆகும். அதிகப்படியான கூட்டமோ, கடுமையான நகரமயமோ இல்லை.. முற்றிலும் விவசாய பூமி. இயற்கையான சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ள இடம் ஆகும். ஆண்டு முழுவதும் குளுகுளுவென கால நிலை இருக்கும். இதனை அனுபவிக்க புதமணத்தம்பதிகள் அதிகம் பேர் கொடைக்கானலுக்கு ஹனிமூன் வருகிறார்கள்.

What did the monkey do to the female engineer who came to Kodaikanal for a trip

கொடைக்கானல் டிரப்

அதேபோல் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் ஐடி துறையில் பணியாற்றுவோர், ஒவ்வொரு வார இறுதியிலும் நண்பர்களுடன் டிரப் போட்டு கொடைக்கானல் வந்து சுற்றிபார்த்து ஜாலியாக இருந்துவிட்டு செல்கிறார்கள். வாரநாட்களில் குறைவாகவும், வார இறுதியில் அதிகமாகவும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வருகிறார்கள்.

கொடைக்கானல் சுற்றுலா தலங்கள்

கொடைக்கானல் வரும் பலர் கொடைக்கானல் நட்சத்திர ஏரி, கோக்கர்ஸ் வாக், தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் பாரஸ்ட், குணா குகை,செட்டியார் பூங்கா, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பிரையண்ட் பூங்கா, பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில், மன்னவனூர் ஏரி, பேரிஜம் ஏரி, கூக்கால் அருவி, புலிவால் அருவி, வெள்ளி நீர் வீழ்ச்சி, ரோஜா பூங்கா உள்பட பல்வேறு இடங்களை ரசிக்கிறார்கள். அத்துடன் கொடைக்கானலில் அறை எடுத்து தங்கி சந்தோஷமாக கால நிலையை அனுபவிக்கிறார்கள்.

ஐடி ஊழியர்கள்

அந்த வகையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியர்களாக பணியாற்றும் சுப்ரியா உள்பட 4 பேர் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் ஒவ்வொரு சுற்றுலா இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். குணாகுகை பகுதியை அவர்கள் கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.

குரங்கு வந்தது

அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று சுப்ரியா வைத்திருந்த கைப்பையை பறிக்க முயன்றுள்ளது. சுதாரித்துக்கொண்ட சுப்ரியா, கைப்பையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் சீறிய குரங்கு, சுப்ரியாவின் வலது கையில் கடித்துவிட்டு ஓடிவிட்டது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

பேரிஜம் ஏரி

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் சில நேரங்களில் காட்டு மாடு மற்றும் குரங்குகள் தாக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யானைகள் உலா வரும் பகுதி என்பதால் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா செல்வோர் கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+