கொடைக்கானல் சுற்றுலா வந்த திருச்சி பெண்.. குணா குகையில் நடந்த சம்பவம்.. இனி எப்போதும் மறக்க மாட்டார்
கொடைக்கானல்: யாரு இடத்துல வந்து யாரு சீன போடுறது, கொடைக்கானல் குணா குகை சுற்றுலா தலத்தில் ஸ்டைலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த பெண்ணால் மறக்கவே முடியாத அளவிற்கு குரங்கு ஒன்று சேட்டை செய்திருக்கிறது. குணா குகைக்கு வந்திருந்த திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இங்குள்ள மரத்தின் மீது அமர்ந்து ஸ்டைலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அவருக்கு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநில சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கணிசமான வெளிநாட்டு பயணிகளையும் கொடைக்கானலில் சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.

கொடைக்கானல் இன்னும் இயற்கை அப்படியே இருக்கும் அழகான சுற்றுலா தலம் ஆகும். இங்கு காலநிலை ஆண்டு முழுவதும் அருமையாக இருக்கும். தற்போது நவம்பர் மாதம் என்பதால் பகலில் மஞ்சமூட்டமும், இரவில் மற்றும் மாலையில் பனிமூட்டமும் அதிக அளவில் காணப்படும். முகப்பு விளக்குகளை எரியவிட்டு தான் வாகனங்கள் செல்ல வேண்டும்.பக்கத்தில் நடந்து செல்பவர்களை கூட அடையாளம் காண முடியாத அளவிற்கு பனிபடர்ந்து உள்ளது. பலரும் இந்த குளிர்கால கால நிலையை அனுபவிக்க வந்த வண்ணம் உள்ளனர். கொடைக்கானலுக்கு இளம் தம்பதியர்கள் எப்போதுமே அதிக அளவில் வருவார்கள். அதேபோல் இளைஞர்களும் வார இறுதிகளில் ட்ரிப் போட்டு சந்தோஷமாக இருந்துவிட்டு செல்வார்கள்.
கொடைக்கானலில் பல இடங்கள் இருந்தாலும், நட்சத்திர ஏரிக்கு அடுத்தபடியாக பலருக்கும் பிடித்த இடம் என்றால் அது குணா குகை தான். குணா படத்தின் போது பலருக்கும் தெரியவந்த இந்த குகை. அதன்பிறகு குணா குகை என்று அழைக்கப்பட்டது. எனினும் மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு பிறகு இந்த குணா குகைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
எனினும் குணா குகை பகுதியில் சுற்றி திரியும் குரங்குகள் அதிகளவில் காணப்படுவதுடன் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் உடமைகளை எடுத்துக்கொண்டு மரத்தின் மீது செல்வதும், அதன் பிறகு பயணிகள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர்களின் உடமைகளை மீட்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குணா குகைக்கு வந்திருந்த திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இங்குள்ள மரத்தின் மீது அமர்ந்து ஸ்டைலாக போட்டோவுக்கு போஸ் கொடுக்க இருந்த நிலையில் திடீரென அந்த பெண் மீது குரங்கு குதித்ததில் அரண்டு போன அந்த இளம் பெண் அங்கிருந்து தெறித்து ஓடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குணா குகை பகுதியில் குரங்குகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வருவதால் இது குறித்து கொடைக்கானல் வன துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications