கோவை பொள்ளாச்சியில் முழு உடற்தகுதியுடன் ட்ரெக்கிங் சென்ற டாக்டர்.. திடீரென என்ன நடந்தது?
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 8 கிலோ மீட்டர் அடர்ந்த வனப்பகுதிக்குள் ட்ரெக்கிங் சென்று திரும்பிய கேராளவைச் சேர்ந்த டாக்டருக்கு என்ன நடந்தது. நன்றாக முழு உடற்தகுதியுடன் டிரெக்கிங் சென்று திரும்பியவருக்கு நடந்ததை கேட்டு சுற்றுலா பயணிகள் வனத்துறையினரும் ஆடிப்போனார்கள்.
தமிழ்நாட்டில் டிரக்கிங் செல்ல விரும்புவோருக்காக அரசே உள்ளூர் பகுதி மக்களின் உதவியுடனும், வனத்துறையினரின் உதவியுடனும் டிரெக்கிங் செல்லும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் சுற்றுலா பயணிகள் பணம் கட்டி டிரெக்கிங் செல்லலாம். விருப்பப்பட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் டிரெக்கிங் சென்று வருகிறார்கள்.

அந்த வகையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் டாப் சிலிப் பகுதிக்கு டிரெக்கிங் சென்ற கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த 26 வயதாகும் அஜ்சல் செயின் என்பவர் மருத்துவம் படித்திருக்கிறார். இந்தநிலையில் தனது நண்பர் பாகில் தயூப் ராஜ் (27) உடன் மலையேற்றம் செல்லலாம் என்று முடிவு செய்துள்ளார்.
இதற்காக மருத்துவர் அஜ்சல் செயினும், பாகில் தயூப் ராஜூம் தமிழ்நாடு மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ் கோவை மாவட்டம் டாப்சிலிப் பகுதியில் முறையான அனுமதி பெற்று மலையேற்றம் செல்ல தயார் ஆனார்கள். நேற்று மலையேற்றத்துக்காக பொள்ளாச்சி டாப்சிலிப்புக்கு தனது நண்பர் பாகிலுடன் வந்தார் மருத்துவர் அஜ்சல்.இவர்களுடன் வழிகாட்டிகள் சந்தான பிரகாஷ், அஜித்குமார், வனத்துறையினரும் மலையேற்றத்தை மேற்கொண்டார்கள்.
சுமார் 8 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதியில் டிரெக்கிங் சென்றவர்கள், மாலை 4.30 மணியளவில் மலையேற்றம் முடித்து மலை அடிவாரத்துக்கு திரும்பியதாக கூறப்படுகிறது.மலை அடிவாரத்தை அடைந்த போது அஞ்சல் செயிலுக்கு உடலில் அதிகமான நீரழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் உடனடியாக மயக்கமடைந்துள்ளர் அஜ்சல். பாகிலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் உடனடியாக வேட்டைக்காரன்புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அஜ்சலை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வனத்துறையினர் அஜ்சலின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்ததுடன், ஆனைமலை போலீஸில் புகார் கொடுத்தனர். முதற்கட்ட விசாரணையில், பலியான அஜ்சல் சில மாதங்களாக மன அழுத்தத்திற்கு மருந்துகளை உட்கொண்டு வந்தாராம். அஜ்சலின் உடற்கூராய்வு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications