கொடைக்கானல் சுற்றுலா சென்ற மதுரை நண்பர்கள்.. அருவியில் பரத்.. ஒரே குடும்பத்தில் இப்படியுமா நடக்கும்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள், பலர் அருவிகளில் குளிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் மலைகளில் உள்ள அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு பரத் என்கிற நபருடன் ஏழு பேர் வந்துள்ளனர். அவர்கள் பேத்துப்பாறை கிராமம் ஐந்துவீடு என்ற பகுதியில் உள்ள ஓராவி அருவியில் குளிக்க போயிருக்கிறார்கள். அங்கு நடந்த சம்பவத்தை வாழ்நாள் முழுவதும் நண்பர்களால் மறக்க முடியாது..
கொடைக்கானலில் கிளைமேட் என்பது எப்போதுமே அருமையாக இருக்கும். இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர் உள்பட அண்டை மாவட்ட மக்கள் அடிக்கடி வார இறுதிகளில் மற்றும் வார நாட்களிலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவார்கள்.. மற்ற பகுதி மக்கள் மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு சில முறை கொடைக்கானலுக்கு வருவார்கள்.

கொடைக்கானல் வானிலை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை வறண்ட வானிலை நிலவி வந்தது. பகல் நேரங்களில் மிதமான வெயிலும் மாலை நேரங்களில் குளிரும் காணப்பட்டது. ஆனால் நேற்று முன்தினமும், நேற்றும் பரவாக மழை பெய்தது. இதனால் அருவிகளில், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது .இந்நிலையில் மதுரை வில்லாபுரம் பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு பரத் என்கிற நபர் உள்பட ஏழு பேர் நண்பர்களாக சுற்றுலா வந்திருக்கிறார்கள்.
ஓராவி அருவி
கொடைக்கானலை சுற்றி பார்த்துவிட்டு கொடைக்கானல் பழனி சாலை அருகே உள்ள பேத்துப்பாறை கிராமம் ஐந்துவீடு என்ற பகுதியில் உள்ள ஓராவி அருவிக்கு தடைகளை மீறி குளிக்க சென்றுள்ளனர். இதில் பரத் என்ற இளைஞர் மழை அதிகமாக பெய்து கொண்டிருந்த நிலையில் யார் பேச்சையும் கேட்காமல் அருவியில் குளிப்பதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வேலியைத் தாண்டி குதித்து குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது
பேத்துப்பாறை கிராம மக்கள்
பரத் அதிக மது போதையில் இருந்த கூறப்பட்ட நிலையில், அவர் நிதானம் தவறி, ஆபத்தான பகுதியில் குளித்துள்ளார். அதிக மழை பெய்த காரணத்தால், திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பரத்தால் வெளியில் வர முடியவில்லை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். உடன் வந்த நண்பர்கள் கதறியபடி பேத்துப்பாறை கிராம மக்களிடம் சென்று நடந்த விபரத்தை கூறியுள்ளனர். அதனைக் கேட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் இளைஞரை மீட்கும் பணியில் நீரில் இறங்கி பல மணி நேரம் போராடி பரத் பிணமாகவே மீட்டனர்.
இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வர வழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு பரத் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தில் 3 பேர்
பழனி சாலையில் உள்ள பேத்துப்பாறை கிராமத்தில் தடை செய்யப்பட்ட ஓராவி அருவியில் குளிக்க சென்ற இளைஞர்கள் பலர் பலியாகி உள்ளனர். இந்த அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை உள்ளது. ஆனால் இதை யாரும் மதிப்பது இல்லை. இதுதான் சிக்கலுக்கு காரணமாக உள்ளது. இறந்த பரத் என்பவர் அவரது குடும்பத்தில் ஏற்கனவே இரு சகோதரர்கள் வாகன விபத்தில் இறந்திருந்த நிலையில் மூன்றாவதாக பரத்தும் அருவியில் விபத்தில் இறந்துள்ளார் என நண்பர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications