மூணாறுக்கு சுற்றுலா வந்த புதுச்சேரி மாணவி.. இப்படியா ஆகணும்.. ஊட்டி, கொடைக்கானல் போறவங்க கவனம்
மூணாறு: ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, வாகமன், மேகமலை, ஏற்காடு உள்ளிட்ட மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. கோடை விடுமுறை காரணமாக சுற்றுலா செல்ல, பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி சுற்றுலா செல்வோரில் சிலருக்கு, சுவாசக் கோளாறு பிரச்சனை இருக்கும். ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்பில் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். மூணாறில் நடந்த சம்பவத்தை பார்ப்போம்.
தென்னக்கத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறுக்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிக அளவில் வருகிறார்கள். மூணாறு கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் புகழ் பெற்ற நகரம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1600-1800 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

யமக்காடு, நல்லதண்ணி, குண்டலை ஆகிய மூன்று ஆறுகள் கூடுமிடத்தில் அமைந்துள்ள மூணாறு, ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக தென் மாநிலத்தில் மூன்றாவது புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஆகும். பெரும்பான்மையான மக்கள் தோட்டத் தொழிலாளர்கள் தமிழர்கள் ஆவர். மூணாறில் கிளைமேட் பகலில் ஒரு மாதிரியாகவும், இரவில் வேறு மாதிரியாகவும் இருக்கும். இரவில் கடும் குளிரும் பகலில் நார்மலான கிளைமேட்டும் இருக்கும்.
ஏராளமான தேயிலை தோட்டங்கள், மாட்டுப்பட்டி அணை, டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை, யானை இரங்கல், வட்டக்காணல், காந்தளூர் என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக மலைப் பிரதேசங்களுக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சென்றால் தேவையான முன்னேற்பாடுகளுடன் போக வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறை, அதிகப்படியான பனிமூட்டம், கடும் குளிர் காரணமாக மூச்சுத்திணறல் பாதிப்பை ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் மூணாறில் புதுச்சேரி மாணவிக்கு நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
புதுச்சேரியை சேர்ந்தவர் இளங்கோ. அவருடைய மனைவி பரிமளம். இந்த தம்பதியின் மகள் பர்வத வர்தினிக்கு 15 வயது ஆகிறது. இவர், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இளங்கோ தனது குடும்பத்துடன் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். மூணாறில் உள்ள இடங்களை சுற்றி பார்த்தனர். தொடர்ந்து மூணாறு அருகே உள்ள இக்காநகரில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
மாணவி பர்வத வர்தினி ஏற்கனவே சுவாச கோளாறால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குளிர் அதிகமாக இருந்ததால் பர்வத வர்தினிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் உடனே மூச்சுத்திணறல் சரியாகி விட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் அறையில் தூங்கினர்.
பின்னர் நேற்று காலை பெற்றோர் அவரை எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து பெற்றோர் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மூணாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மூணாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும் போது தேவையான முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications