சேலம் ஏற்காடு மலைக்கு சுற்றுலா வந்த இளைஞர்கள் வெளியிட்ட ஒற்றை வீடியா.. மொத்த போலீசும் இப்ப தேடுது
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடுக்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கடந்த வாரம் வந்தனர். கிளைமேட் மிக அருமையாக இருந்த காரணத்தால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காட்டுக்கு வாலிபர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்கள் மலைப்பாதையில் செய்த செயலால் இப்போது சிக்கலில் சிக்கியுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தலத்தை பொறுத்தவரை ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிகமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய விரும்பும் கோடைவாசல் தலமாக இருக்கிறது. அதேநேரம் கொடைக்கானல், ஊட்டி அளவிற்கு கடும் குளிர் இருக்காது. எங்கு திரும்பினாலும் பசுமை, எவ்வளவு வெயில் அடித்தாலும் கவசம் போல் காப்பாற்றும் பசுமை காடுகள், மனதை இதமாக வருடும் அளவிற்கு மாலை நேரங்களில் மென்மையான குளிர்காற்று, இரவில் நல்ல குளிர், படகு சவாரி, பூங்காக்கள் என ஏற்காட்டிற்கு வருவோருக்கு இனிமையான பயணமாக ஏற்காடு சுற்றுலா இருக்கும்.

அதேநேரம் மழை விழுந்தாலோ, மழைக்காலத்திலோ ஏற்காட்டிற்கு வந்தால், கிளைமேட் வேறலெவலில் இருக்கும். ஊட்டி, கொடைக்கானலுக்கு மழைக்காலத்தில் சென்றால், ஏன் சென்றோம் என்று மனம் ஏங்கும். ஆனால் ஏற்காட்டில் அந்த ஏக்கம் இருக்காது. ஏற்காட்டில் மலைக்காலத்தில் தான் கிளைமேட் இன்னும் மிக அருமையாக இருக்கும். அந்த வகையில் தென்மேற்கு பருவ மழை காரணமாக கடந்த ஒரு வாரமாக கிளைமேட் சேலம் ஏற்காடு பகுதியில் நன்றாக இருந்தது.
இதை அனுபவிக்க பலரும் ஏற்காட்டுக்கு சுற்றுலா வந்து சென்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்காட்டுக்கு இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களில் 2 பேர் மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி மற்ற வாகன ஓட்டிகளை அச்சமடைய செய்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆபத்தான வீலிங் சாகசங்களை செய்ததுடன், மலைப்பாதையில் இருந்த எச்சரிக்கை பலகையை தூக்கி வீசியதையும் வீடியோவாக எடுத்தனர் என்றும் சொல்லப்படுகிறது..
இந்த சாகசம் மற்றும் எச்சரிக்கை பலகையை தூக்கி வீசும் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இதில் வீடியோ வெளியிட்ட அந்த வாலிபர்கள் யார்? என்பது குறித்தும், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்கள். ஆபத்தான சாகசம் மற்றும் எச்சரிக்கை பலகையை தூக்கி வீசிய அந்த வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவித்தனர்.
இதனிடையே சிம்பசிவா என்ற இளைஞர் சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'ஏற்கனவே உடைந்து கிடந்த எச்சரிக்கை பலகையை தான் எடுத்து தூக்கி வீசுவது போன்று வீடியோ எடுத்தோம். ஆனால் அதை வேறு எங்கும் தூக்கி வீசவில்லை. அதே இடத்தில் தான் போட்டோம். நாங்கள் சாகசம் செய்தது தப்பு தான். அதற்காக மன்னிப்பு கேட்கிறோம். நாங்கள் எதையும் தெரிந்து செய்யவில்லை. தெரியாமல் தான் செய்துள்ளோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications