டூரிஸ்ட்களை 'தற்காலிக திருமணம்' செய்யும் இளம்பெண்கள்.. இந்தோனேசியாவில் சர்ச்சையை கிளப்பும் பழக்கம்
டெல்லி: இந்தோனேஷியாவில் வருமானத்திற்காக சுற்றுலாப் பயணிகளை இளம்பெண்கள் தற்காலிக திருமணம் செய்து கொள்ளும் சர்ச்சைக்குரிய பழக்கம் கிராமப்புற பகுதிகளில் அதிகரித்து வருகிறதாம். குறிப்பிட்ட தொகையை கொடுத்து சுற்றுலாப் பயணிகள், திருமணம் செய்து கொண்டு நாட்டை விட்டு கிளம்பும் போது விவாகரத்து செய்து விடுவார்களாம்.
இந்தோனேசியாவின் கிராம பகுதிகளில், சுற்றுலா பயணிகளை உள்ளூர் கிராமப்புற பெண்கள் தற்காலிக திருமணம் செய்து கொள்ளும் அதிர்ச்சியூட்டும் பழக்கம் இருந்து வருகிறதாம்.. சுற்றுலாவிற்கு வரும் பயணிகளிடம் குறிப்பிட்ட அளவு பணத்தை பெற்றுக்கொண்டு, அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் வரை அவர்களுடன் உல்லாசமாக இருப்பது, சேர்ந்து வாழ்வது போன்ற சேவைகளை செய்வார்களாம்.. அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் அமைந்து இருக்கும் இந்த விசித்திர பழக்கம் குறித்த விவரங்களை பார்க்கலாம்..

ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய நாடு. அழகிய கடற்கரைகள், மலைப்பகுதிகள் என சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இயற்கை அழகினை கொண்ட நாடாக இயல்பாகவே இந்த நாடு உள்ளது. இதனால், இந்த நாட்டிற்கு அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் செல்வது வழக்கம். இந்த நிலையில் தான், இந்தோனேஷியாவின் கிராமப்புற பகுதிகளில் ஏழை, எளிய பின்னணியை கொண்ட இளம்பெண்கள் தங்கள் குடும்ப செலவுகளை சமாளிக்க சுற்றுலா வரும் பயணிகளுடன் தற்காலிக திருமணம் செய்து கொள்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் ஆண் சுற்றுலாப் பயணிகள் அதிகம் இப்பகுதிகளுக்கு வந்து, தற்காலிக திருமணம் செய்து கொள்கிறார்களாம்.. இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் உள்ள புன்சக் பகுதியில் இதுபோன்ற நடைமுறை அதிக அளவில் காணப்படுகிறதாம்.
இப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை தொடர்பு கொள்ளும் ஏஜெண்ட்கள் உள்ளூர் இளம்பெண்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களுக்கு பிடித்தமானவரை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்வார்களாம்.. மலைப்பகுதி ரிசார்ட்களில் சடங்குகளின் படி இந்த திருமணம் நடைபெறுமாம். திருமணம் முடிந்ததும் மணப்பெண் விலையாக குறிப்பிட்ட தொகையை பெண்னிற்கு சுற்றுலாப் பயணி கொடுக்க வேண்டுமாம்.
இதற்கு கைமாறாக, அந்த சுற்றுலாப் பயணியை திருப்திப்படுத்துவது, உடனிருந்து சேவைகளை செய்வது ஆகியவற்றை பெண்கள் செய்வார்களாம். சுற்றுலா பயணி கிளம்பும் போது இந்த திருமண பந்தம் முடிந்துவிடும். இந்த சர்ச்சைக்குரிய பழக்கம் "மகிழ்ச்சி திருமணம்" என்று அழைக்கப்படுகிறது.
அப்பகுதியில் பணம் கொட்டும் தொழிலாகவும் இது மாறிவிட்டதாம். ஏஜெண்டுகள் பலரும் இதில் குதித்து நவீனமயமாக்கிவிட்டார்களாம்.. தற்காலிக திருமணம் செய்த இந்தோனேசியாவை சேர்ந்த சஹயா என்ற பெண், தனது வேதனையை பகிர்ந்துள்ளார். அந்த பெண் கூறுகையில், "மத்திய கிழக்கு சுற்றுலா பயணிகள் சுமார் 15 பேரை திருமணம் செய்து இருப்பேன். எனது முதல் கணவர் 50 வயதான சவுதி அரேபிய நபர். அவர் எனக்கு ரூ.71,412 மணப்பெண் கட்டணமாக கொடுத்தார்.
அதன்பிறகு ஏஜெண்ட் கட்டணம் பிடித்த பிறகு எனக்கு பாதி தொகைதான் கிடைத்தது. திருமணம் முடிந்த 5 நாட்கள் என்னுடன் தங்கியிருந்தார். பின்னர் சொந்த நாட்டிற்கு திரும்பியதால் விவாகரத்து பெற்றுக்கொண்டோம். ஒரு திருமணத்திற்கு அமெரிக்க டாலர் மதிப்பு படி 300 முதல் 500 வரை கிடைக்கும். இதை வைத்து எனது வீட்டு வாடகை, நோய்வாய்ப்பட்ட எனது தாத்தா, பாட்டியை கவனித்துக் கொள்கிறேன்" என்றார்.
அதேபோல, நிஷா என்ற பெண் கூறுகையில், "குறைந்தது 20 தற்காலிக திருமணம் செய்து இருக்கிறேன். தற்போது நான் இந்தோனேஷியாவில் ஒரு குடியேற்ற அதிகாரியை திருமணம் செய்து அவருடன் செட்டில் ஆகிவிட்டேன். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகிறேன். இனிமேல் ஒருநாளும் அந்த இருண்ட நாட்களுக்கு செல்ல மாட்டேன்' என்றார்.
இந்தோனேஷியாவில் நடைபெறும் இத்தகைய தற்காலிக திருமணங்களுக்கு அங்குள்ள மத அமைப்புகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்தோனேசியா சட்டங்களும் இத்தகைய சட்ட விரோத திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. எனினும், சட்ட விரோதமாக இந்த தொழில் அங்கு நடைபெற்று வருகிறதாம்.. இணையத்திலும் நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களையும் உடனடியாக இதுபோன்ற நடைமுறைகளுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications