வாஸ்து என்பது ஒரு கட்டிடத்திற்கான உயிரோட்டமான விஷயம். அந்த காலத்தில் வீடு கட்டும்போதே வீட்டிற்கு ஜாதகம் எழுதுவதும், ஆயுள் குறிக்கப்படுவதும் உண்டு. ஒரு வீடு என்றால் அதற்கென்று ஒரு நியதி விதிக்கப்பட்டிருக்கிறது. எல்லா வகையான கட்டடங்களுக்கும் இது பொருந்தும். ...
| ஆங்கில தேதி | தமிழ் தேதி | கிழமை | சுபமுகூர்த்த நேரம் |
|---|---|---|---|
| ஜனவரி 25 | தை 12 | சனி | காலை 10.41 முதல் 11.17 வரை |
| பிப்ரவரி | - | - | - |
| மார்ச் 06 | மாசி 22 | வியாழன் | காலை 10.32 முதல் 11.08 வரை |
| ஏப்ரல் 23 | சித்திரை 10 | புதன் | காலை 08.54 முதல் 09.30 வரை |
| மே | - | - | - |
| ஜூன் 04 | வைகாசி 21 | புதன் | காலை 09.58 முதல் 10.34 வரை |
| ஜூலை 27 | ஆடி 11 | ஞாயிறு | காலை 07.44 முதல் 08.20 வரை |
| ஆகஸ்ட் 22 | ஆவணி 06 | வெள்ளி | காலை 07.23 முதல் 07.59 வரை |
| செப்டம்பர் | - | - | - |
| அக்டோபர் 28 | ஐப்பசி 11 | செவ்வாய் | காலை 07.44 முதல் 08.20 வரை |
| நவம்பர் 24 | கார்த்திகை 08 | திங்கள் | காலை 11.29 முதல் பகல் 12.05 வரை |
| டிசம்பர் | - | - | - |
ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வாஸ்து புருஷர் கண் விழிப்பார் என்று நம்பப்டுகிறது. வாஸ்து புருஷர் அவ்வாறு கண் விழிக்கும் நாட்களில் சில குறிப்பிட்ட நேரங்களில் அதிகளவிலான நேர்மறை ஆற்றல்கள் காணப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் கட்டுமானப் பணிகளை செய்வதால் அந்த இடத்தில் செல்வம், செழிப்பு, ஆரோக்கியம், குடும்பத்தில் ஒற்றுமை, செய்யும் காரியங்களில் வெற்றி, மன அமைதி உள்ளிட்டவை நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.
சில குறிப்பிட்ட நாட்களில் கண் விழிக்கும் வாஸ்து புருஷர் தனது அன்றாட வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் தூக்க நிலைக்குச் சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. அவர் செய்யும் ஒவ்வொரு செயல்களின்போதும் ஒவ்வொரு பணிக்கான பூஜையைச் செய்வதால் நன்மைகள் உண்டாகும். அதாவது அவர் பல் துலக்கி, குளிக்கும் நேரங்களில் கழிவறை உள்ளிட்ட கட்டடப் பணிகளுக்கான பூஜைகளை மேற்கொள்வது நல்லது.
அவர் பூஜை செய்யும் நேரத்தில் பூஜை அறை கட்டுவது, கோயில் அமைப்பதற்கான பூஜைகள் செய்வது, சாப்பிடும்போது உணவகங்கள், சமையலறை கட்டுமானப் பணிகள் செய்யலாம். அதேபோல, அவர் உறங்கச் செல்லும் நேரத்தில் படுக்கை அறை, தங்கும் விடுதிகள் ஆகியவற்றிற்கான பூஜைகளை செய்வது நல்லது என்று நம்பப்படுகிறது.
இந்த நேரங்களில் வாஸ்து பூஜைகளை செய்து, கட்டுமானப் பணிகளைத் தொடங்குவது வாஸ்து பகவானின் பூரண அருள் பெற செய்யும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் வாஸ்து செய்வதற்கான நல்ல நாட்கள் மற்றும் நல்ல நேரம் குறித்த தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.