இதே விஜயதசமி நாளில்..96 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்...3 முறை தடை..கடந்து வந்த பாதை
நாக்பூர்: 1925-ம் ஆண்டு இதே நாளில்தான் ராஷ்டிரிய ஸ்வயம் ஸேவக் என்கிற இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது. கடந்த 96 ஆண்டுகால வரலாற்றில் நாடு விடுதலைக்குப் பின்னர் 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 96 ஆண்டுகால சுருக்கமான வரலாறு:

- 1925-ல் தசரா அல்லது விஜயதசமி நாளில் கேசவ பலிராம் ஹெட்கேவரால் 20 இளைஞர்களுடன் தொடங்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்.
- 1926-ம் ஆண்டு ஏப்ரல் 17-ல் தான் ராஷ்டிரிய ஸ்வயம் ஸேவக்- ஆர்.எஸ்.எஸ். என அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டது.
- 1926-ம் ஆண்டு மே 28-ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதல் சாகா அல்லது பயிற்சி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதல் சாகா அல்லது பயிற்சி அணிவகுப்பு நாக்பூரில் நடைபெற்றது. இந்த இடத்தில்தான் தற்போது ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ளது.
- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முதல் குரு ஹெட்கேவர். ஆனால் ஹெட்கேவரோ, தமது குரு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் காவி கொடிதான் என அறிவித்தார்.
- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆண்டுதோறும் 6 முக்கிய விழாக்களை நடத்துகிறது. இதில் ஒன்று வியாஸ் பூர்ணிமா நாளில் இயக்கத்தின் காவி கொடிக்கு நடத்தப்படும் குரு பூஜை. 1928-ல் முதன் முதலாக இந்த குரு பூஜை நடத்தப்பட்டது.
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முழு நேர ஊழியர்கள் பிரசாரக் என அழைக்கப்பட்டனர். தற்போது 4,000 பிரசாரகர்கள் இந்த அமைப்பில் உள்ளனர்.
- 1929-ம் ஆண்டு மே 1 முதல் ஜுன் 10 வரை மொத்தம் 40 நாட்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முதல் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் இயக்க தொண்டர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
- 1939-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நாக்பூர் அருகே சிந்தியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டத்தில் மராத்தி, ஆங்கிலத்துக்கு பதில் சமஸ்கிருதத்தை தங்களது இயக்கத்தின் கட்டமைப்புக்கான மொழியாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். இறைவணக்கமும் சமஸ்கிருதத்திலேயே பாடும் முறையும் தொடங்கியது.
- 1940-ல் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெட்கேவர் காலமானார். அவரைத் தொடர்ந்து எம்.எஸ். கோல்வாகர் அந்த இயக்கத்தின் தலைவாரானார். இந்த அமைப்பின் தலைவராக 33 ஆண்டுகாலம் கோல்வாகர் பணியாற்றினார்.
- 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட்டது. இது ஆர்.எஸ்.எஸ். மீதான மத்திய அரசின் முதல் தடை.
- 1952-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ்.-ன் இன்னொரு பிரிவாக பாரதிய ஜனத சங் தொடங்கப்பட்டது. பாஜகவின் நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜியால் இது தொடங்கப்பட்டது. இதுவே பின்னாளில் ஜனசங்கம், பாரதிய ஜனதா கட்சி என உருமாறியது.
- 1975-ம் ஆண்டில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் அமல்செய்யப்பட்ட போது 2-வது முறையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது.
- 1983-ம் ஆண்டில் ராமஜென்மபூமி இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்தது. ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் இதைத் தீவிரமாக முன்னெடுத்தது.
- 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ல் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 3-வது முறையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது.
- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மீது 3 முறை தடை விதிக்கப்பட்டாலும் இந்த தடை குறுகிய காலமே அமலில் இருந்தது.
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தங்களை செயல்படுத்தும் அரசியல் கட்சியான பா.ஜ.க. 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி செய்து வருகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications